Wednesday, 4 September 2019

அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள் - Tamil poets and their nicknames

அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும்.  இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
• அகத்தியர் – குறுமுனி
•இளம்பூரணர் – உரையாசிரியர்,vஉரையாசிரியச்சக்கரவர்த்தி, உரையாசிரியர்களின் தலைமையாசிரியர்
• நாச்சினார்க்கினியர் – உச்சிமேற்கொள் புலவர், உரைகளில் உரை கண்டவர்
• கபிலர் – புலனழுக்கற்ற அந்தணாளன், நல்லிசைக் கபிலன், பொய்யா நாவின் கபிலர்
• திருவள்ளுவர் – முதற்பாவலர், பெருநாவலர், தெய்வப் புலவர், செந்நாப்போதார், நாயனார், மாதானுபங்கி, தேவர், நான்முகனார், பொய்யில் புலவர்
• திருஞானசம்பந்தர் – தோடுடைய செவியன், காழி வள்ளல், தோணிபுரத் தென்றல், திராவிட சிசு, ஆளுடைய பிள்ளை
• திருநாவுக்கரசர் – அப்பர், தாண்டக வேந்தர், வாகீசர், மருள் நீக்கியார், தேசம் உய்ய வந்தவர்
• சுந்தரர் – வன் தொண்டர், தம்பிரான் தோழர், நாவலூரார்
• மாணிக்கவாசகர் – அழுது அடியடைந்த அன்பர்
• சேக்கிழார் – அருண்மொழித்தேவர், உத்தமசோழ பல்லவராயன், தெய்வச் சேக்கிழார், தொண்டர் சீர் பரவுவார்
• பெரியாழ்வார் – பட்டர் பிரான், வேயர்கோன், விஷ்ணுசித்தர்
• ஆண்டாள் – சூடிக்கொடுத்த நாச்சியார், வைணவம் தந்த செல்வி, கோதை
• நம்மாழ்வார் – சடகோபன், காரிமாறன், தமிழ்மாறன், பராங்குசன்
• குலசேகராழ்வார் – கூடலர்கோன், கொல்லிகூவலன்
• திருமங்கையாழ்வார் – பரகாலன், கலியர், மங்கை வேந்தர், திருமங்கை மன்னர், நாலுகவிப் பெருமாள், வேதம் தமிழ் செய்த மாறன், ஆலிநாடன்
• திருமழிசையாழ்வார் – திராவிட ஆச்சாரியார்
• தொண்டரடிப் பொடியாழ்வார் – விப்பிரநாராயணன்
• நம்பியாண்டார் நம்பி – தமிழ் வியாசர்
• ஒளவையார் – தமிழ் மூதாட்டி
• திருமூலர் – முதல் சித்தர்
• கம்பர் – கவிச்சக்கரவர்த்தி, கல்வியில் பெரியவர்
• சீத்தலைச் சாத்தனார் – தண்டமிழாசான் சாத்தன் நன்னூற் புலவன்
• திருத்தக்கத் தேவர் – தமிழ்ப் புலவர்களுள் இளவரசர்
• புகழேந்தி – வெண்பாவிற் புகழேந்தி
• மீனாட்சி சுந்தரம் பிள்ளை – மகாவித்வான்
• திரிகூட ராசப்பக் கவிராயர் – திருக்குற்றால நாதர், கோயில் வித்வான்
• மாயூரம் வேதநாயகம் பிள்ளை – நீதியரசர்
• பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் – அழகிய மணவாளதாசர், திவ்வியக்கவி, தெய்வக்கவிஞர்
• இராமலிங்க அடிகளார் – வள்ளலார், அருட்பிரகாசர், ஓதாது உணர்ந்த பெருமாள்ää சன்மார்க்க்கவி, வடலூரார், இறையருள் பெற்ற திருக்குழந்தை
• பாரதிதாசன் – புரட்சிக் கவிஞர், பாவேந்தர், புதுமைக் கவிஞர்
• இரட்டைப்புலவர்கள் – இளஞ்சூரியர், முதுசூரியர்
• உ.வே. சாமிநாதய்யர் – தமிழ்த்தாத்தா, மகாமகோபாத்தியாய
• பாரதியார் – மகாகவி, தேசிய கவி, பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை, விடுதலைக் கவி, மக்கள் கவி, தமிழிலக்கியத்தின் விடிவெள்ளி, நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா, எட்டயபுரத்துக் கவி, புதுக்கவிதையின் தந்தை
• சிவப்பிரகாசர் – கற்பனைக் களஞ்சியம்
• வெ.ராமலிங்கம் பிள்ளை – நாமக்கல் கவிஞர்
• பெருஞ்சித்திரனார் – பாவலரேறு
• அழ.வள்ளியப்பா – குழந்தைக் கவிஞர்
• திரு.வி.கலியாணசுந்தரனார் – திரு.வி.க. தமிழ்த்தென்றல்
• புதுமைப்பித்தன் – சிறுகதை மன்னன்
• சோமசுந்தர பாரதியார் – நாவலர்
• இராபர்ட் – டி – நொபிலி – தத்துவ போதகர்
• வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரி – பரிதிமாற் கலைஞர்
• வால்டர் ஸ்காட் – உலகச் சிறுகதையின் தந்தை
• இராசா.அண்ணாமலைச் செட்டியார் – தனித்தமிழ் இசைக் காவலர்
• டி.கே.சி. – ரசிகமணி
• தேவநேயப் பாவாணர் – மொழி ஞாயிறு, செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு, தமிழ்ப் பெருங்காவலர், என 174 சிறப்புப் பெயர்கள்
• உடுமலை நாராயண கவி – பகுத்தறிவுக் கவிராயர்
• அஞ்சலையம்மாள் – தென்நாட்டின் ஜான்சிராணி
• அம்புஜத்தம்மாள் – காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்
• கந்தசாமி – நவீன தமிழ்நாடக மறுமலர்ச்சித் தந்தை
• சங்கரதாசு சுவாமிகள் – நாடகத் தமிழ் உலகின் இமயமலைää தமிழ் நாடகத் தலைமையாசிரியர்
• வை.மு.கோபாலகிரு~;ணமாச்சாரியார் – பிற்கால உரையாசிரியர்ச் சக்கரவர்த்தி
• பரிதிமாற்கலைஞர் – திராவிட சாஸ்திரி, தமிழ் நாடகப் பேராசிரியர்
• பம்மல் சம்பந்தனார் – தமிழ் நாடகத் தந்தை
• ஜெயகாந்தன் – தமிழ்நாட்டின் மாப்பஸான்
• வாணிதாசன் – தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த், கவிஞரேறு, பாவலர் மணி
• அநுத்தமா – தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டின்
• கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை – முத்தமிழ்க் காவலர்
• டி.கே.சண்முகம் சகோதரர்கள் – தமிழ்நாடக மறுமலர்ச்சியின் தந்தை
• இரா.பி.சேதுப்பிள்ளை – சொல்லின் செல்வர்
• வ.உ.சிதம்பரனார் – கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்
• ஈ.வெ.ரா.ராமசாமி – பெரியார், பகுத்தறிவுப் பகலவன், சுய மரியாதைச் சுடர், வெண்தாடி வேந்தர்
• இராஜாஜி – மூதறிஞர்
• நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் – காந்தியக்கவிஞர்
• காமராஜர் – பெருந்தலைவர், கல்விக் கண் திறந்தவர்
• அருணகிரிநாதர் – சந்தக்கவி
• பொ.வே.சோமசுந்தரனார் – பெருமழைப்புலவர்
• மு.கதிரேசச் செட்டியார் – மகோமகோபாத்தியாய, பண்டிதமணி
• கருமுத்து தியாகராசச்செட்டியார் – கலைத்தந்தை
• ஆறுமுக நாவலர் – பதிப்புச் செம்மல்
• சி.பா. ஆதித்தனார் – தமிழர் தந்தை
• கா. அப்பாத்துரையார் – பன்மொழிப்புலவர்
• பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் – பொதுவுடைமைக் கவிஞர், மக்கள் கவிஞர்
• ம.பொ.சிவஞானம் – சிலம்புச் செல்வர்
• சுந்தர ராமசாமி – பசுவய்யா
• மாதவய்யர் – கோணக் கோபாலன்
• வேங்கடரமணி – தென்னாட்டுத் தாகூர்
• சுரதா – உவமைக் கவிஞர்
• கண்ணதாசன் – காரைமுத்து புலவர், வணங்காமுடி, பார்வதி நாதன், ஆரோக்கியசாமி, கமகப்பிரியன்
• கல்கி – தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்
• சுஜாதா – தமிழ்நாட்டின் ஹாட்லி சேஸ்
• கி.வா. ஜெகநாதன் – தமிழறிஞர்
• அண்ணாதுரை – பேரறிஞர், தென்னாட்டு பெர்னாட்ஷோ
• வி.முனுசாமி – திருக்குறளார்
• பாலசுப்ரமணியம் – சிற்பி
• நா. காமராசன் – வானம்பாடிக் கவிஞர்
• ஸ்ரீவேணுகோபாலன் – புஷ்பா தங்கதுரை
• ஆத்மாநாம் – எஸ்.கே.மதுசூதன்
• என்.எஸ்..கிருஷ்ணன் – கலைவாணர்
• எம்.ஜி.ராமச்சந்திரன் – மக்கள் திலகம், எம்.ஜி.ஆர், புரட்சி நடிகர், இதயக்கனி
• மு. கருணாநிதி – கலைஞர்
• எம்.ஆர்.ராதா – நடிகவேள்
• எம்.எஸ்.சுப்புலட்சுமி – இசைக்குயில்
• செய்குத்தம்பி பாவலர் – கற்பனைக் களஞ்சியம்
• வேதரத்தினம் பிள்ளை – சர்தார்
• அண்ணாமலை ரெட்டியார் – அண்ணாமலை கவிராஜன்
• திரு.வி.க. – தமிழ் உரைநடையின் தந்தை
• வைரமுத்து – கவிப்பேரரசு
• வா.செ.குழந்தைசாமி – குலோத்துங்கன்
• அப்துல் ரகுமான் – கவிக்கோ

Wednesday, 28 August 2019

அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் - அரசியலமைப்பு வகைகள்


அறிமுகம்
உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் அரசியலமைப்பை பெற்றிருக்க வேண்டும் அரசியல் அமைப்பின்றி ஒரு நாட்டினை ஆட்சி செய்வது இயலாத காரியம். ஒரு சில விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் பல நாடுகளில் இருந்திருக்கின்றன என்பதனை வரலாறு மூலம் நாம அறிகிறோம். சீரான அமைதியான நாட்டினை உருவாக்க இவைகள் வேண்டும் என்பது தெரியவருகிறது.
குழப்பமின்றி சிறப்பாக ஆட்சி செய்ய அரசியலமைப்பு இன்றியமையாதது. ஜனநாயக நாடு அல்லது சர்வாதிகார நாடாக இருந்தாலும் அதை நிர்ணயிக்க ஒரு சில விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அவசியம் என்பதை ஒவ்வொரு நாடும் ஏற்றுக் கொள்கிறது. தற்பொழுது விதிமுறைகள் எல்லாம் அரசியலமைப்பு என்ற அடிப்படையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்பதை நாம் அறிதல் வேண்டும்.
அரசியலமைப்பின் பொருளும் விளக்கமும்
ஒரு நல்ல அரசாங்கத்தின் அமைப்பும் அதன் அதிகாரமும் அரசியலமைப்பின் நிலையை உணர்த்துவதாக அமையும். நற்குடிமகனின் உரிமைகளும், கடமைகளும் அரசியலமைப்பை உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட காலவரையறையில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் ஆவணம் என அரசியலமைப்பை கூறுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. அரசியலமைப்பு என்பது எழுதப்பட்டிருக்கலாம் அல்லது எழுதப்படாமலும் செயல்படுத்தப்படலாம் என உணர வேண்டும்.
சில நேரங்களில் அரசியலமைப்பு நெடுங்காலமாக பின்பற்றப்படும் விதிகளும், பழமொழிகளும் நடைமுறைகளும் கொண்டு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது என கருதப்படுகிறது.
ஒரு அரசியலமைப்பு என்பது:-
  •  நாட்டின் ஆதாரச்சட்டமாகும்.
  •  எழுதப்பட்டோ அல்லது எழுதப்படாமலோ இருக்கலாம்.
  •  அரசாங்கத்தின் அமைப்பு மற்றும் அதிகாரத்தை விவரிக்கின்றது.
  •  குடிமக்களின் உரிமையை கூறுகின்றது.
  •  ஆளப்படுவோருக்கும், அரசாங்கத்திற்கும் இடையே உள்ள உறவை பற்றிக் குறிப்பிடுகின்றது.
  •  இதுவே உயர்ந்த சட்டமாகும். இதைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
    அரசியலமைப்பின் தேவை
கீழே தரப்பட்டுள்ள காரணங்களுக்காக அரசியலமைப்பு தேவைப்படுகிறது.
1. அடிப்படை சட்டம் அரசாங்கத்திற்கு கடிவாளமாகும்.
2. தனி மனித உரிமையைப் பாதுகாக்கவும்.
3. சட்டத்தின் ஆட்சி நிலைக்கவும்.
4. குழப்ப நிலையிலிருந்து மீட்கவும்.
5. இறையாண்மை அதிகாரத்தை வரையறுக்கவும்.
6. நிகழ்கால மற்றும் வருங்கால சந்ததிகளின் விருப்பு வெறுப்புகளை கட்டுப்படுத்தவும்.

அரசியலமைப்பின் உள்ளடக்கங்கள்

1. நிர்வாக அமைப்பும், நிறுவனமும்.
2. அரசாங்க அங்கங்களின் செயல்பாடுகள், அதிகாரங்கள் மற்றும் இடையே உள்ள தொடர்புகள்
3. குடிமக்களின் அடிப்படை உரிமைகள்
4. மக்களுடன் அரசாங்கத்தின் உறவு
5. அரசியலமைப்பு திருத்தம் செய்யும் முறைகள்

அரசியலமைப்பு திருத்தமுறைகள்

  • அரசியலமைப்பு திருத்தம் செய்யும் முறைகள் சில சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. எழுதப்பட்ட அரசியலமைப்பு ஒரு சில விதிமுறைகளைப் பின்பற்றுதல் வேண்டும். இவைகள் எழுதப்பட்ட அரசியலமைப்பிற்கு மிக அவசியம் என கருதப்படுகின்றன.
  • அரசியலமைப்பின் புனிதத் தன்மைக்கு உத்திரவாதம் அளிக்கின்றது. மேலும் தனிநபர் சுதந்திரத்திற்கும், அரசியலமைப்பைச் சார்ந்தவைகளுக்கு உத்திரவாதம் அளிப்பது சிறப்பிற்குரியதே. அரசியலமைப்பு திருத்தம் எளிதான முறையிலும் கடினமான முறையிலும் கையாளப்படுகின்றது. இருப்பினும் இவை எல்லாம் சாதாரணமானவை.
  • சாதாரண முறையில் திருத்தம் மேற்கொண்டால் அரசாங்கம் நிலையற்ற தன்மையை அடையலாம். மேலும் கடினமான முறையில் திருத்தம் மேற்கொண்டால் இரண்டு வகையான விளைவுகள் ஏற்படலாம்.
  • முதலில் பொதுக்கருத்து அடிப்படையில் சட்டரீதியில் அல்லாத நிறுவனங்கள் ஏற்படும்.
  • இரண்டாவதாக இது போன்ற நிறுவனங்கள் உருவாக இடம் தராவிட்டால் கலகம் அல்லது புரட்சி ஏற்பட வாய்ப்பு உண்டாகலாம். எனவே, புரட்சி அல்லது நிலையற்ற தன்மையை ஏற்படுத்துகிற மாதிரி அரசியலமைப்பு திருத்த முறைகள் இருக்கக் கூடாது.

தற்கால அரசியலமைப்புகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

1. இயல்பாக மற்றும் இயற்றப்பட்ட அரசியலமைப்புகள்
2. எழுதப்பட்ட மற்றும் எழுதப்படாத அரசியலமைப்புகள்
3. நெகிழா மற்றும் நெகிழும் அரசியலமைப்புகள்
இயல்பா மற்றும் இயற்றப்பட்ட அரசியலமைப்பு
  • விதிமுறைகளின் வளர்ச்சி, தேவை இலைகளில் அடிப்படையில் உருவானதுதான் இயல்பான மற்றும் பரிணாம வளர்ச்சியினால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு.
  • பரிணாமத்தின் உச்சகட்டமாக நாட்டில் உள்ள அரசியலமைப்பிற்கு வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புகள் தயாரிக்கப்படவில்லை.
  • ஆனால் கடந்த காலத்தில் ஏற்பட்டு தொடர்ந்து வளர்ந்த பழக்கவழக்கங்களும், நடைமுறைகளும், மரபுகளும் பஞ்சாயத்துகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் விதிமுறைகளும் தான் அரசியலமைப்பு ஏற்பட காரணங்களாக இருந்திருக்கின்றன.
  • இயற்றப்பட்ட அரசியலமைப்பு முழுக்க மனிதனின் முழு முயற்சியினால் இயற்றப்பட்டதே ஆகும்.
  • மனசாட்சிப்படி உருவாக்கப்பட்டதன் அரசியலமைப்புகள். பெரும்பாலும் அரசர்களாலும், பாராளுமன்றத்தாலும், உயர்ந்த அதிகாரம் படைத்தவர்களாலும் ஏன் அரசியலமைப்பு பேரவையினாலும் இயற்றப்பட்டவையே.
  • இயற்றப்பட்ட அரசியலமைப்பின் கூறுகள் அனைத்தும் ஏதேனும் ஒரு ஆவணத்திலோ அல்லது பல ஆவணங்களிலோ எழுதப்பட்டிருக்கும்.
  • இயல்பான மற்றும் இயற்றப்பட்ட அரசியலமைப்புகள் தற்காலத்தில் எழுதப்பட்ட மற்றும் எழுதப்படாத அரசியலமைப்பு என பிரிக்கப்பட்டுள்ளன.
எழுதப்பட்ட அரசியலமைப்பு
  •  எழுதப்பட்ட அரசியலமைப்பு ஆவண வடிவில் அல்லது நூல் வடிவில் அடிப்படை மற்றும் அரசாகங்களின் பல்வேறு அங்கங்களுக்கு தேவையான விதிமுறைகளின் தொகுப்பேயாகும். தீர்க்கமான முறையில் உருவாக்கப்பட்டதே.
  •  நேர்மையாக. மனசாட்சிப்படி திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. ஒரு சில நாடுகளிலன் அரசியலமைப்பு பேரவையினாலும், மரபுப்படியும் உருவாக்கப்பட்டிருக்கலாம். எழுதப்பட்ட அரசியலமைப்பு இந்திய நாட்டில் உருவாக்கப்பட்டு மற்றும் அரசியலமைப்பு பேரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • இந்திய அரசியலமைப்பின் முகப்புரை பின்வரும் வாசகங்களோடு தொடங்குகிறது. இந்திய மக்களாகிய நாம் இந்திய நாட்டின் அரசியலமைப்பை ஏற்று இறையாண்மை நிறைந்த மக்களாட்சி குடியரசாக நிறுவுகிறோம்.
  • இந்தியா, மியான்மார் மற்றும் அமெரிக்காவின் அரசியலமைப்பு ஒரே தேதியில் உருவாக்கப்பட்ட தனி ஆவணமாக உள்ளது. ஆனால், பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஒரு தொடரான சிறு சிறு துண்டுகளாக அரசியலமைப்பு ஆவணமாக்கப்பட்டுள்ளது.
  • எழுதப்பட்ட அரசியலமைப்பாக இருப்பதனால் சாதாரண சட்டங்களுக்கும் அரசியலமைப்புச் சட்டங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை தெளிவாக அறிய முடியும். அரசியலமைப்பு சட்டம் என்பது இன்றயாண்மை அதிகாரம் உள்ள ஆட்சியாளர்களால் இயற்றப்படுகிறது.
எழுதப்பட்ட அரசியலமைப்பின் நிறைகள்
  1. திடமானது நிலையானது. குழப்பத்திற்கு இடமில்லை. அடிப்படை விதிகள் எழுதப்பட்டிருப்பதால் விருப்பத்திற்கு ஏற்ப அறியலாம். அரசாங்க அங்கங்களின் அதிகாரம் மற்றும் நிர்வாக அமைப்பு முறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதைப் பற்றி அறிய குழப்பமோ தகராறோ ஏற்படாது. அவ்வாறு கருத்து வேறுபாடு நிலவினால் நீதிமன்றத்தை அணுகலாம்.
  2. மிகுந்த கவனத்துடன் நீண்ட பிரதிவாதத்திற்கு பிறகு எழுதப்பட்ட அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட அனுபவம் மற்றும் ஆழ்ந்த அறிவை புலப்படுத்துகிறது. தற்காலிக விருப்பு வெறுப்புகளுக்கும் விரைவான தீர்மானங்களுக்கும் இடமில்லை.
  3. எழுதப்பட்ட அரசியலமைப்பு தனி மனிதன் உரிமையை பாதுகாக்கிறது. அரசியலமைப்பில் உரிமைகள் சேர்க்கப்பட்டுள்ளதால் இவைகள் சாதாரண சட்டங்களை விட உயர்வாக கருதப்படுகின்றன. அவ்வாறு இருப்பதால் வௌ;வேறு அரசாங்கங்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றுவிதிலிருந்து உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன.
  4. அரசியலமைப்பை அவ்வப்போது உள்ள அரசாங்கங்கள் மாற்றும் போது மக்கள் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப மாற்றப்படுவதினின்றும் அது பாதுகாக்கப்படுகிறது.
  5. நெருக்கடி காலத்திற்கு ஏற்றது. அசாதாரண நிலை ஏற்படும் போது எழுதப்பட்ட அரசியலமைப்பு நிலையாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும்.
  6. கூட்டாட்சி அரசாங்கத்திற்கு எழுதப்பட்ட அரசியலமைப்பு பொருத்தமானது. ஏனென்றால் மத்திய – மாநில அரசுகளின் அதிகாரங்கள் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளன.
எழுதப்பட்ட அரசியலமைப்பின் குறைகள்
1. திருத்தம் செய்ய கடினமான முறையை பின்பற்ற வேண்டும். நெகிழா தன்மையையும் பழமை வாதமும் பெற்றுள்ளது.
2. எழுதப்பட்ட அரசியலமைப்பில் நீதித்துறை பழமைவாதத்தை பின்பற்றும் அரசாங்கம் காலத்திற்கேற்ப சட்டம் கொண்டுவர நினைக்கும் போது, நீதிமன்றம் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதா என பார்க்க நேரிடும்.
3. நாட்டின் விதிமுறைகள் மற்றும் குறிக்கோள்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கி இருப்பதால் எல்லா காலத்திற்கும் இது பொருத்தமானதாக இருக்காது. இது பிற்காலத்தில் வளர்ச்சியைத் தடை செய்கிறது.
4. விரிவான விளக்கமுடையதாக இருப்பதால் சில சமயங்களில் மிகைப்படுத்தப்பட்ட சட்ட விளக்கத்திற்கு வழி ஏற்படுத்துகிறது.
எழுதப்படாத அரசியலமைப்பு
ஒரு நாட்டின் அரசியலமைப்பு உருவாவது அந்த நாட்டின் இயல்பான வளர்ச்சியையம் கட்டுப்பாடுகளையும் நடைமுறைகளையும் பொறுத்ததாகும். இது ஆவணங்களில் சொல்லப்பட்டிருக்க வேண்டியதில்லை. ஒரு சில எழுதப்பட்டிருந்தாலும் அவை எழுதப்படாத அம்சங்களை விட மிக குறைவா உள்ளதாக அறியலாம். இதற்கு உதாரணம் இங்கிலாந்து.
எழுதப்படாத அரசியலமைப்பின் நிறைகள்
  1. காலத்திற்கேற்ப சுழ்நிலைக்கேற்ப சட்டங்களை மாற்றிக் கொள்ளலாம். தேவைப்படும் பொழுது சட்டங்களை சேர்த்துக் கொள்ளலாம். வரையறை இல்லை. அங்கே வளர்ச்சி உண்டு.
  2. வளையும் தன்மையுடையது. பொதுமக்கள் கருத்து ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவ்வப்பொழுது மாற்றங்களைக் கொண்டு வரலாம். புரட்சிகள் தேவையில்லை.
  3. எழுதப்படாத அரசியலமைப்பில் மாற்றங்களை எளிதில் கொண்டு வரலாம். எதிர்பாராத நேரங்களில் மாற்றங்கள் செய்வது நன்மை தரும்.
  4. பண்பாடுகள் மற்றும் மரபுகளைக் காப்பாற்றுவதில் அவை சிறப்பானவை. பிரிட்டிஷ் அரசியலமைப்பு உடைபடாத வரலாற்றினைப் பெற்றுள்ளது. இவ்வளர்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதை வரலாறு மூலம் அறியலாம்.
எழுதப்படாத அரசியலமைப்பின் குறைகள்
1. முடிவற்றது. குழப்பம் ஏற்படுத்தக்கூடியது. விதிமுறைகளை சாதாரண மனிதன் அறிந்து கொள்ள வாய்ப்பு இல்லை. எழுதப்படாத அரசியலமைப்பு உயர்ந்த நேர்மையான மனப்பாங்கைப் பெற்றிருப்போரால் தான் செயல்படுத்த முடியும். அதன் தன்மை வேகம் ஆகியவற்றை புரிந்து கொள்ள அவர்களால் தான் முடியும். சாதாரணமானவர்களால் புரிந்து கொள்ளவோ பின்பற்றவோ இயலாது.
2. சில சமயங்களில் நிலையற்ற தன்மையுடையது.
3. அதிகாரம் வழங்கப்பட்ட நிலையைக் காட்டிலும் நீதிமன்றம் தன்னுடைய அதிகார எல்லையை நீட்டித்துக் கொள்ளும். நீதிமன்றம் தன் விருப்பம் போல சட்ட இயல் மற்றும் அதன் நுணுக்கங்கள் ஆகியவற்றை அதன் விருப்பப்படி எடுத்தாளும்.
4. எழுதப்படாத அரசியலமைப்பு மக்காளட்சிக்கு உகந்ததல்ல என்ற கருத்து வலிமையாக உள்ளது. மக்கள் வரையறுக்கப்பட்ட சட்ட விதிகளைத் தான் விரும்புவர். எழுதப்படாத அரசியலமைப்பு உயர்ந்தோர் குழு ஆட்சிக்குத்தான் பயன்படும்.
நெகிழும் அரசியலமைப்பு
நெகிழும் அரசியலமைப்பில் அரசியலமைப்பு சாதாரண சட்டத்திற்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. இரண்டுமே ஒரே மாதிரியான முறைகளைப் பின்பற்றியே இயற்றப்படுகின்றன. அரசியலமைப்பு பொதுவாக மரபுகளின் அடிப்படையிலோ அல்லது எழுதப்பட்டோ இருக்கின்றது.
ஒரே மாதிரியாகவே திருத்தம் செய்யப்படுகின்றது. அரசியலமைப்புச் சட்டத்திற்கும் சாதாரண சட்டத்திற்கும் திருத்திற்கும் திருத்தம் செய்ய எவ்வித பிரத்தியேக நடைமுறையும் பின்பற்றப்படவில்லை.
நெகிழும் அரசியலமைப்பிற்கு சிறப்பான உதாரணமாக இங்கிலாந்து அரசமைப்பை கருதலாம். இங்கிலாந்து பாராளுமன்றமே உயர்நத அதிகாரம் அல்லது இறையாண்மை அதிகாரத்தைப் பெற்றிருக்கிறது.
நெகிழும் அரசியலமைப்பின் நிறைகள்
1. நெகிழும் அரசியலமைப்பை சாதாரண சட்டங்களைப் போல திருத்தம் செய்யலாம். காலத்திற்கேற்றாற் போல் புதிய முறைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
2. வளையும் தன்மை கொண்டுள்ளதால் சுலபமாக மக்களின் தேவைகளை நெகிழும் அரசியலமைப்பில் கொண்டு வரலாம். மக்களின் தேவை அவ்வப்பொழுது நிறைவேற்றப்பட்டுவிட்டால் புரட்சி ஏற்பட வாய்ப்பே கிடையாது. இந்நிலை தான் இங்கிலாந்தில். காரணம் அவ்வப்பொழுது மக்களின் தேவைப்கேற்ப சட்டங்களை இயற்றிக் கொள்வதே ஆகும்.
3. வளரும் நாடுகளுக்கு நெகிழும் அரசியலமைப்பு தேவை. வளர்ச்சி அரசியலமைப்பின் அடிப்படையை பாதிக்காத வண்ணம் அமைந்துள்ளது. மேலும் சமுதாய அரசியல் மாற்றம் சிறப்பாக அமைந்துள்ளது. நெகிழும் அரசியலமைப்பிற்கு வலுவட்டம் தருவதாக உள்ளது. அரசியல் மற்றும் சமுதாயத்தை சரியாக மாற்றம் செய்ய எப்பொழுதும் மிகச்சரியான அரசியலமைப்பு அமைய இயலாது.
4. தேசியமரபுகளின் அடிப்படையில் நெகிழும் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தேவையும் மாற்றமும் நெகிழும் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. வரலாற்றில் தொடர்ச்சியாக காணப்படுவதாகும். நெகிழும் அரசிலயமைப்பு பொதுமக்கள் கருத்தை உணரக்கூடிய நாடித்துடிப்பாக உளதோடு மக்களின் எண்ணத்தையும் முன்வைக்கிறது.
நெகிழும் அரசியலமைப்பின் குறைகள்
1. மாறிக்கொண்டே இருப்பது மக்களைத் திருப்திபடுத்த பெரும்பான்மையோர், சிறுபான்மையோரின் கணக்கில் நன்மையை கொள்ளாமல் இருக்க வழிவகுக்கும். இத்தகைய அரசியலமைப்பு நிலையான சிறந்த நிர்வாகத்தை தர இயலாது.
2. திருத்தம் செய்யும் முறை சுலபமாக உள்ளதால் அரசியலமைப்பு சுலபமாகவும் எளிதாகவும் மாற்றப்படுகிறது. மாறும் தன்மையுடைய மக்களின் பெருவிருப்பத்தை அடிப்படையாகக் கொண்டு மாற்றம் செய்யப்படுகிறது. தீர்மானங்கள் சில நேரங்களிலே ஆவேச உணர்ச்சிகள் அடிப்படையில் அமைதி மாற்றும் ஒற்றுமை பாதிப்புக்குள்ளாகும். ஸ்திர்த்தன்மைக்க தொல்லை தரும் நிலையும் ஏற்படலாம். நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்பட்டு பிரிவினை ஏற்பட வழிவகுக்கலாம்.
நெகிழா அரசியலமைப்பு
நெகிழா அரசியலமைப்பில் திருத்தம் செய்ய சில பிரத்தியேக முறைகள் தேவைப்படுகின்றன. நெகிழா அரசியலமைப்பிற்கு உதாரணங்களாக. அமெரிக்கா. ஆஙஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை குறிப்பிடலாம். நெகிழா அரசியலமைப்பு சாதாரண சட்டங்களைவிட உயர்வானது. சாதாரண சட்டங்களை மாற்றுவது போல் இல்லாமல் சில குறிப்பிட்ட தனி வழிகள் மூலம் தான் நெகிழா அரசியலமைப்பிற்கு திருத்தம் மேற்கொள்ளலாம். இதனால் திருத்தம் செய்வது கடினமாகும். அரசின் இறையாண்மைக்கு உயர்வு அளிப்பதே நெகிழா அரசியலமைப்பின் நோக்கமாகும். இத்தன்மைக்கு புனிதத்துவம் வழங்குவது அரசியலமைப்பே ஆகும்.
இந்திய அரசியலமைப்பு இங்கிலாந்து அரசியலமைப்பு போல் நெறிழும் தன்மையும் அமெரிக்க அரசியலமைப்பு போல நெகிழாத்தன்மையும் பெற்றதல்ல. ஆங்கில அரசியலமைப்பு போல அதிகப்படியான நெகிழும் தன்மையையோ அமெரிக்க அரசியலமைப்பு போல அதிக நெகிழாத்தன்மையையோ பெற்றில்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட தன்மையை கொண்டுள்ளது.
நெகிழா அரசிலயமைப்பின் நிறைகள்
1. நிரந்தாரமானது, மாறாத தன்மையுடையது. அனுபவமும் அறிவாற்றல் பெற்றவர்களாலும் எழுதப்பட்டதாகும்.
2. சட்டமன்றத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து அரசியலமைப்பை பாதுகாக்கின்றது. அரசியலமைப்பு சட்டம், சட்ட மன்றங்களின் கைப்பாவையாக போய்விடக்சுடாது.
3. அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது இவ்வகை அரசியலமைப்பே. அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும். இவைகளை எளிதில் மாற்றக்கூடாது.
4. சிறு பான்மையினரை பாதுகாப்பதே நெகிழா அரசியலமைப்பு, பெறும்பான்மையினர் எடுக்கும்நடவடிக்கைகள் சிறுபான்மையினரை பாதிக்கக்கூடாது. அவ்வாறு பாதிக்கும் போது நீதிமன்றம் அதனை பாதுகாக்க வேண்டும்.
5. நெகிழா அரசியலமைப்பு மக்களின் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டது. மக்களின் கொந்தளிப்பு உணர்வுகள் அரசியலமைப்பை மாற்றும் முறையை கைவிட்டுவிடக் கூடாது.
6. கூட்டாட்சி ஒற்றுமைக்கும், பலத்திற்கும் பாதுகாப்பிற்கும் நெகிழா அரசியலமைப்பு முக்கியமாக தேவைப்படுகிறது. நெகிழா அரசியலமைப்பில் தான் கூட்டாட்சிப் பகுதிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுகிறன்றன. ஒன்றின் மீது இன்னொன்று ஆதிக்கம் செலுத்த இயலாது. இது நெகிழா அரசியலமைப்பில் தான் சாத்தியமாகும்.
நெகிழா அரசியலமைப்பின் குறைகள்
1. சில நேரங்களில் அரசியலமைப்ப மாற்றம் தவிர்க்க இயலாதது. ஆனால் நெகிழா அரசியலமைப்பை சுலபமாக திருத்தம் செய்ய முடியாது.
2. நெகிழா அரசியலமைப்பை எழுதியவர்கள் எதிர்க்காலத்தைப் பற்றி சிந்திப்பதில்லை. வளரும் நாடுகளுக்கு இவ்வரசமைப்பு தகுந்தல்ல. மேலும் வளரும் நாடுகளில் அடிக்கடி மாற்றம்.
3. அரசியலமைப்புச் சட்டத்திற்குள் இயற்றப்பட்ட சட்டங்கள் வருகின்றனவா என உறுதி செய்து கொள்வதே நெகிழா அரசியலமைப்பில் நீதிமன்றத்தின் கவலையாக இருக்கும்.
குறைகளும் நிறைகளும் இருப்பினும் இன்றைய சு10ழ்நிலையில் நெகிழா மற்றும் எழுதப்பட்ட அரசியலமைப்புதான் நல்லது என்ற எண்ணம் அனைவரிடமும் உள்ளது.
எழுதப்பட்ட அரசியலமைப்பில் எதிர்காலத்தில் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் நெகிழும் தன்மை பொருந்திய ஒரு சில அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்பது தான். இந்திய அரசியலமைப்பில் ஒரு சில நெகிழும் மற்றும் நெகிழா அம்சங்கள் இடம் பெற்றிரக்கின்றன. எனவே இந்திய அரசியலமைப்பு இதர நாடுகளுக்கு இவ்வகையில் வழிகாட்டியாக விளங்குகிறது.

Tuesday, 30 July 2019

இலக்கணக் குறிப்பறிதல் Ilakkana kurripu

இலக்கணக் குறிப்பறிதல்


இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தொகுதிகளும் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
தமிழ் இலக்கணம்
 இலக்கணம் ஐந்து வகைப்படும்:
1. எழுத்திலக்கணம்
2. சொல்லிலக்கணம்
3. பொருளிலக்கணம்
4. யாப்பிலக்கணம்
5. அணியிலக்கணம்
 எழுத்தின் வகைகள்:
எழுத்துக்கள் இரண்டு வகைப்படும்
1. உயிரெழுத்துகள்
2. சார்பெழுத்துகள்
 முதலெழுத்துகளின் வகைகள்:
முதலெழுத்துக்கள் இரண்டு வகைப்படும்
1. உயிரெழுத்துகள்
2. மெய்யெழுத்துகள்
 உயிரெழுத்துகளின் வகைகள்:
உயிரெழுத்துகள் இரண்டு வகைப்படும்
1. குற்றெழுத்துகள் (அ இ உ எ ஒ)
2. நெட்டெழுத்துகள் (ஆ ஈ ஊ ஏ ஐ ஓ  ஒள)
 மெய்யெழுத்துகளின் வகைகள்:
மெய்யெழுத்துகள் மூன்று வகைப்படும்
1. வல்லினம் (க் ச் ட் த் ப் ற்)
2. மெல்லினம் (ங் ஞ் ண் ந் ம் ன்)
3. இடையினம் (ய்  ர் ல் வ் ழ் ள்)
 ஆய்த எழுத்து
முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை, முற்றாய்தம் ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
 சார்பெழுத்து அதன் வகைகள்:
முதல் எழுத்துக்களாகிய உயிர் எழுத்துக்களையும், மெய்யெழுத்துகளையும் சார்ந்து இயங்கும் எழுத்துகள் சார்பெழுத்துகள் எனப்படும்.
சார்பெழுத்து பத்து வகைப்படும்.
  1. உயிர்மெய்
  2. ஆய்தம்
  3. உயிரளபெடை
  4. ஒற்றளபெடை
  5. குற்றியலுகரம்
  6. குற்றியலிகரம்
  7. ஐகாரக்குறுக்கம்
  8. ஒளகாரக்குறுக்கம்
  9. மகரக்குறுக்கம்
  10. ஆய்தக்குறுக்கம்
உயிர்மெய் ஆய்தம் உயிரள பொற்றள
பஃகிய இஉஐ ஒள மஃகான்
தனிநிலை பத்தும் சார்பெழுத்தாகும்”
அளபெடை:
“அளபெடை” என்பதற்கு “நீண்டு ஒலித்தல்” என்று பொருள். செய்யுளில் ஓசை குறையும் போது ஒரு சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கும் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதே அளபெடை எனப்படும்.
அளவு  மாத்திரை எடை  எடுத்தல் என்பது பொருள் எழுத்தின் மாத்திரை அளவில் நீட்டி ஒலித்தல்
 மாத்திரை அளவு:
உயிர்க்குறில் உயிர்மெய்க்குறில் – ஒன்று
உயிர் நெடில் உயிர்மெய்நெடில் – இரண்டு
மெய் ஆய்தம் – மூன்று
உயிரளபெடை – நான்கு
ஒற்றளபெடை – ஐந்து
 அளபெடையின் வகைகள்:
அளபெடை இரண்டு வகைப்படும்.
1. உயிரளபெடை 2. ஒற்றளபெடை
1. உயிரளபெடை
உயிர் +அளபெடை ₌ உயிரளபெடை
செய்யுளில் ஓசை குறையும் போது அந்த ஓசையை நிறைவு செய்ய உயிர்நெட்டெழுத்துகள் ஏழும் (ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள) அளபெடுக்கும் அவ்வாறு அளபெடுக்கும் போது அளபெடுத்தமையை அறிய நெட்டெழுத்துகளுக்கு இனமான குற்றெழுத்துகள் அவற்றின் பக்கத்தில் எழுதப்படும்.
உயிரளபெடையின் வகைகள்:
உயிரளபெடை மூன்று வகைப்படும்.
1. செய்யுளிசையளபெடை (அல்லது) இசைநிறையளபெடை
2. இன்னிசையளபெடை
3. சொல்லிசையளபெடை
செய்யுளிசையளபெடை:
செய்யுளில் ஓசையை நிறைவு செய்தற்பொருட்டு சொல்லின் முதல், இடை, கடையிலுள்ள உயிர் நெட்டெழுத்துகள் அளபெடுத்து வருவதைச் செய்யுளிசையளபெடை என்பர். இதற்கு இசை நிறையளபெடை என்ற வேறு பெயரும் உண்டு.
எ.கா:
“ஏரின் உழாஅர் உழவர் பயலென்னும்
வாவுhரி வளங்குன்றிக் கால்”
இக்குறட்பாவில் “உழாஅர்” என்னும் சொல் அளபெடுத்து வந்துள்ளது. உழார் என்பது இயல்பான சொல்
(எ.கா) “கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடா அர் விழையும் உலகு”
இக்குறட்பாவில் கெடா என்பது கெடாஅ என இறுதியிலும் விடா என்பது விடாஅர் என இடையிலும் அளபெடுத்துவந்துள்ளது.
மேலும் சில எ.கா
1) உழாஅர் 2) படாஅர் 3) தொழூஉம்
4) தூஉ 5) தருஉம் 6) ஆஅதும்
7) ஓஒதல் 8) தொழாஅன் 9) உறாஅமை
10) பெறாஅ
அளபெடை
உறாஅமை – செய்யுளிசை அளபெடை
இன்னிசையளபெடை:
செய்யுளில் ஓசை குறையாத பொழுதும் செவிக்கு இனிய ஓசையைத் தரும் பொருட்டு உயிர்க்குறில் நெடிலாகி மேலும் அளபெடுப்பது இன்னிசையளபெடை ஆகும்.
எ.கா:
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மாற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
கெடுப்பதும், எடுப்பதும் என்று ஒசை குறையாத இடத்திலும் இனிய ஒசை தருவதற்காகக் குறில் நெடிலாக மாறி அளபெடுப்பது இன்னிசையளபெடை எனப்படும்.
மேலும் சில எ.கா:
1) உள்ளதூஉம் 2) அதனினூஉங்கு
சொல்லிசையளபெடை: 
செய்யுளில் ஒசை குன்றாத பொழுதும் பெயர்ச்சொல் வினையெச்சப் பொருளைத் தருவதற்காக அளபெடுப்பது சொல்லிசை அளபெடை எனப்படும்.
எ.கா: குடிதழிஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழிஇ நிற்கும் உலகு.
இக்குறட்பாவில் தழி என்றிருப்பினும் செய்யுளின் ஒசை குறைவதில்லை ‘தழீ’ என்பது தழுவுதல் எனப் பொருள் தரும்.
பெயர்ச்சொல்லாகும் அச்சொல் ‘தழ்இ’ என அளபெடுத்தால் ‘தழுவி’ என வினையெச்சச் சொல்லாயிற்று.
இசைகெடின் மொழிமுதல் இடைகடை நிலை நெடில்
அளபெடும் அவற்றவற் நினக்குறள் குறியே”
நன்னூல் – 91
அளபெடை
1. எழீஇ – சொல்லிசை அளபெடை
2. கடாஅ யானைää சாஅய் தோள் – இசைநிறை
அளபெடைகள்
3. அதனினூஉங்கு – இன்னிசை அளபெடை
அளபெடை
1. ஒரீஇ தழீஇ – சொல்லிசை அளபெடைகள்
2. தழீஇக்கொள்ள – சொல்லிசை அளபெடை
3. உறீஇ – சொல்லிசை அளபெடை
4. தாங்குறூஉம் வளர்க்குறூஉம் – இன்னிசை அளபெடைகள்
5. செய்கோ – ‘ஓ’ காரம் அசை நிலை
6. ஞான்றே – ‘ஏ’ காரம் அசை நிலை
7. தானே – ஏகாரம் பிரிநிலை
8. கள்வனோ – ஓகாரம் பிரிநிலை
9. விளைசெயம் ஆவதோ – ஓகாரம் எதிர்மறை
10. குன்றமோ பேயதோ பூதமோ ஏதோ – ஓகாரங்கள் வினாப்பொருள்
ஏகாரம்
1. யானோ அரசன் – ஓகாரம் எதிர்மறை
2. அருவினை என்ப உளவோ – ஓகாரம் எதிர்மறை
3. யானே கள்வன் – ஏகாரம் தேற்றப்பொருளில் வந்தது.
ஏகாரம்
1. செல்வர்க்கே – ஏகாரம் பிரிநிலைப் பொருளில் வந்தது
2. சீவகற்கே – ஏகாரம் தேற்றேகாரம்
3. காயமே கண்ணே – ஓகாரங்கள் தேற்றேகாரங்கள்
4. புண்ணோ இகழ் உடம்போ மெய் – ஓகாரம் எதிர்மறைகள்
அளபெடை
2. ஒற்றளபெடை
செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்வதற்குச் சொல்லிலுள்ள மெய்யெழுத்து அளபெடுத்தலை ஒற்றளபெடை என்று அழைக்கிறோம்.
எ.கா: எங்ஙகிறை வனுள னென்பாய்.
வெஃஃகுவார்க் கில்லை வீடு
இத்தொடரில் வண்ண எழுத்துகளாக உள்ள ங் என்பதும் ஃ என்பதும் இருமுறை வந்துள்ளன. இவ்வாறு ங் ஞ் ண் ந் ம் ன் வ் ய் ல் ள் ஆகிய பத்து மெய்யும். ஃ ஒன்றும் ஆகப் பதினோர் எழுத்துகளும் ஒரு குறிலை அடுத்தும் இருகுறில்களை அடுத்தும் செய்யுளில் இனிய ஓசை வேண்டி அளபெடுக்கும். இவ்வாறு அளபெடுப்பதற்கு ஒற்றளபெடை எனப்படும்.
ஙஞண நமன வயலன ஆய்தம்
அளபாம் குறிலினண குறிற்சிழிடைகடை
மிகலே யவற்றின் குறியாம் வேறே”
நன்னூல் – 92
குற்றியலுகரம்:
குற்றியலுகரம் – குறுமை+ இயல்+உகரம் (கு சு டு து பு று)
  • ஒரு மாத்திரையளவு ஒலிக்க வேண்டிய உகரம் அரை மாத்திரையளவாகக் குறைந்தொலிப்பது குற்றியலுகரமாகும். தனி நெடிலுடனோ பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம் தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும்.
  • இதனையே குற்றியலுகரம் என்பர்.
    பசு – காசு படு – பாடு அது – பந்து
  • மேற்கண்ட சொற்களில் பசு படு அது போன்ற சொற்கள் இதழ் குவிந்து நன்கு ஒலிக்கப்படுகிறது. இங்கு கு,சு,டு,து போன்ற எழுத்துக்களுக்கு ஒரு மாத்திரை அளவு.
  • ஆனால் காசு பாடு பந்து போன்ற சொற்களில் கு சு டு. து போன்ற எழுத்துக்களின் உகரம் குறைந்து ஒலிக்கப்படுகிறது. இதுவே குற்றியலுகரம் ஆகும்.
  • இங்கு கு சு டு. து ஆகிய எழுத்துக்கள் தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து அரை மாத்திரையாக ஒலிக்கிறது.
    1) தனி ஒரு குற்றெழுத்தை அடுத்து வரும் உகரம் எழுத்துகள் தனக்குரிய ஒரு மாத்திரை அளவாகவே ஒலிக்கிறது.
    (எ.கா) அது பசு படு பொது)
    2) சொல்லுக்கு முதலிலும் இடையிலும் வரும் ‘உகரம்’ தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் குறைந்து ஒலிக்காது.
    3) சொல்லுக்கு இறுதியில் வரும் வல்லினம் மெய்களை (க்,ச்,ட் த்,ப்,ற்) ஊர்ந்து உகரம் (கு,சு,டு,து,பு,று) மட்டுமே தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் குறைந்து அரை மாத்திரையாக ஒலிக்கும்.
    சொல்லின் இறுதி எழுத்தாக நிற்கும் குற்றியலுகரத்திற்கு முன் உள்ள எழுத்தை நோக்க குற்றியலுகரம் ஆறு வகையாகப் பிரிக்கப்படுகிறது.
குற்றியலுகரத்தின் வகைகள்:
குற்றியலுகரம் ஆறு வகைப்படும்
1) நெடில்தொடர்க் குற்றியலுகரம்
2) ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
3) உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
4) வன்தொடர்க் குற்றியலுகரம்
5) மென்தொடர்க் குற்றியலுகரம்
6) இடைத்தொடர்க் குற்றியலுகரம்
1) நெடில் தொடர்க் குற்றியலுகரம்:
தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் நெடில் தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.
(தனி நெடில் என்பது உயிர் நெடிலாகவும் உயிர்மெய் நெடிலாகவும் இருக்கலாம்)
எ.கா: பாகு, காசு, தோடு,காது, சோறு
2) ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்:
ஆய்த எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.
எ.கா: எஃகு அஃகு கஃசு
3) உயிர்தொடர்க் குற்றியலுகரம்:
உயிரெழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் உயிர்த் தொடர்க்குற்றியலுகரம் ஆகும்.
எ.கா: அழகு முரசு பண்பாடு எருது மரபு பாலாறு
இச்சொற்களில் வல்லின மெய்களை ஊர்ந்து வந்த உகரம் (கு சு டு. து,பு, று) உயிரெழுத்தைத் தொடர்ந்து (ழ – ழ்  அ ர – ர்  அ, பா – ப்  ஆ ரு – ர்  உ லா – ல்  ஆ) ஈற்றில் அமைந்து குறைந்து ஒலிப்பதால் குற்றியலுகரம் ஆயிரற்று.
குறிப்பு: நெடில் தொடர் குற்றியலுகரம் அமைந்த சொல் நெடிலை உடைய இரண்டு எழுத்து சொல்லாக மட்டுமே வரும்.
4) வன்தொடர் குற்றியலுகரம்:
வல்லின மெய்யெழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் வன்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
எ.கா: பாக்கு, தச்சு,தட்டு, பத்து, உப்பு, புற்று
5) மென்தொடர்க் குற்றியலுகரம்:
மெல்லின மெய்யெழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் மென்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
எ.கா: பாங்கு பஞ்சு வண்டு பந்து அம்பு கன்று
6) இடைத்தொடர்க் குற்றியலுகரம்:
இடையின மெய்யெழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் இடைத் தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.
எ.கா: மூழ்கு செய்து சால்பு சார்பு
நெடிலோடு ஆய்தம் உயிர்வலி மெலி இடைத்
தொடர்மொழி இறுதி வன்மையூ ருகரம்
அஃகும் பிறமேல் தொடரவும் பெறுமே”
நன்னூல் – 94

நான்கு வேதங்கள் தமிழில்

நான்கு_வேதங்கள்:

நான்கு வேதங்கள் தமிழில்

அவரவர் பக்கங்களில் காப்பி பேஸ்ட் செய்துகொள்ளவும்.

தேவையானோருக்கு உபயோகம் ஆகட்டும்.
-
ரிக் வேதம்
-
https://drive.google.com/file/d/1Obp3cgzXHjg4tV0HEHqRNI3ufPDGVsXW/view?usp=drivesdk
-
யஜுர்வேதம்
-
https://drive.google.com/file/d/1yw8TJq__euYkCqweXBNyGXbLHbVvnKfs/view?usp=drivesdk
-
சாம வேதம்
-
https://drive.google.com/file/d/1BvCwxGkGq_-VUuxHNmS0HO4-HjOVCzmD/view?usp=drivesdk
-
அதர்வண வேதம்
-
https://drive.google.com/file/d/1gdl8EHX1hFT0d_ohvBnluQLSGbzrstkT/view?usp=drivesdk
-


Monday, 29 July 2019

புகழ்பெற்ற நூல்களும் ஆசிரியர்களும்

புகழ்பெற்ற நூல்களும் ஆசிரியர்களும்

இங்கு கொடுக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற நூல்களும் ஆசிரியர்களும் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும்.  இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
ஐம்பெருங்காப்பியங்கள்
• சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்
• மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார்
(பௌத்த சமய நூல்)
• சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர்
• வளையாபதி – ஆசிரியர்
(சமணசமய நூல); தெரியவில்லை
• குண்டலகேசி – நாதகுத்தனார்
(பௌத்த சமய நூல்)
ஐஞ்சிறுங்காப்பியங்கள்
•யசோதர காவியம் (உயிர்க்கொலை தீது  என்பதை வலியுறுத்த – வெண்ணாவலுடையார் எழுந்த நூல்)
• உதயணகுமார காவியம் – ஆசிரியர் தெரியவில்லை
• நாககுமார காவியம் – ஆசிரியர்  தெரியவில்லை
• சூளாமணி (கவிதை நயத்தில் சிந்தாமணி – தோலாமொழித் தேவர் போன்றது
• நீலகேசி – வாமன முனிவர் (சமண சமய நூல்)
• சீவகசிந்தாமணி நரிவிருத்தம் – திருத்தக்க தேவர்
• பெருங்கதை – கொங்குவேளிர்
• கம்பராமாயணம், ஏரெழுபது, சிலை எழுபது, திருக்கை வழக்கம், சரசுவதி அந்தாதி, சடகோபரந்தாதி, இலக்குமி அந்தாதி, மும்மணிக் கோவை – கம்பர்
• பெரியபுராணம் – சேக்கிழார்
• முத்தொள்ளாயிரம் – ஆசிரியர்  தெரியவில்லை
• நந்திக்கலம்பகம் – ஆசிரியர் தெரியவில்லை
• பாரத வெண்பா – பெருந்தேவனார்
• மேருமந்தர புராணம் – வாமன முனிவர்
• வில்லி பாரதம் – வில்லிபுத்தூராழ்வார்
• இறையனார் களவியல் உரை – நக்கீரர்
• புறப்பொருள் வெண்பா மாலை – ஐயனரிதனார்
• கந்தபுராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்
• வீரசோழியம் – புத்தமித்திரர்
• சேந்தன் திவாகரம், திவாகர நிகண்டு – திவாகர முனிவர்
• பிங்கல நிகண்டு – பிங்கல முனிவர்
• உரிச்சொல் நிகண்டு – காங்கேயர்
நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்
• சூடாமணி நிகண்டு – மண்டல புருடர்
• நேமிநாதம், வச்சணந்திமாலை, பன்னிரு பாட்டியல், (வெண்பாப் பாட்டியல்) – குணவீரபண்டிதர்
• தண்டியலங்காரம் – தண்டி
•யாப்பருங்கலம், யாப்பருங்கல விருத்தி, யாப்பருங்கலக்காரிகை – அமிர்தசாகரர்
• நன்னூல் – பவணந்தி முனிவர்
• நம்பியகப்பொருள் – நாற்கவிராச நம்பி
• திருத்தொண்டர் திருவந்தாதி – நம்பியாண்டார் நம்பி
• சந்திரவாணன் கோவை, சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ் – அந்தகக்கவி வீரராகவர்
• திருவுந்தியார், திருக்களிற்றுப் பாடியார் – உய்யவந்தத் தேவர்
• சிவஞான போதம் – மெய்கண்டார்
•தில்லைக்கலம்பகம் – இரட்டைப்புலவர்கள் (இளஞ்சூரியர், முதுசூரியர்)
• வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சு விடு தூது – உமாபதி சிவாச்சாரியார்
• அரிச்சந்திர புராணம் – வீரகவிராயர்
• மச்ச புராணம் – வடமலையப்பர்
• இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய சமய நிர்ணயம், இரட்சணிய மனோகரம், இரட்சணிய குறள் – எச். ஏ. கிருட்டிணப்பிள்ளை
• திருமாலை, திருப்பள்ளியெழுச்சி – தொண்டரடிப்பொடியாழ்வார்
• திருவண்ணாமலை, திருவெண்காடு புராணம் – சைவ எல்லப்ப நாவலர்
•தொன்னூல் விளக்கம், ஞானோபதேசம், பரமார்த்த குரு கதை, சதுரகராதி, திருக்காவலூர் கலம்பகம், தேம்பாவணி – வீரமாமுனிவர்
• சீறாப்புராணம், முதுமொழிமாலை, சீதக்காதி நொண்டி நாடகம் – உமறுப்புலவர்
• நந்தனார் சரித்திரம் – கோபாலகிருட்டிண பாரதியார்
• டம்பாச்சரி விலாசம் – காசி விஸ்வநாதர்
• சைவம் பன்னிரு திருமுறைகள்
நூல்கள் – ஆசிரியர்கள்
• அகத்தியம் – அகத்தியர்
• தொல்காப்பியம் – தொல்காப்பியர்
ஐங்குநுறூறு
• குறிஞ்சித் திணை பாடியவர் – கபிலர்
• முல்லைத் திணை பாடியவர் – பேயனார்
• மருதத் திணை பாடியவர் – ஓரம்போகியார்
• நெய்தற் திணை பாடியவர் – அம்மூவனார்
• பாலைத் திணை பாடியவர் – ஓதலாந்தையார்
கலித்தொகை
• குறிஞ்சிக்கலி பாடியவர் (29 பாடல்கள்) – கபிலர்
• முல்லைக்கலி பாடியவர் (17 பாடல்கள்) – சோழன் நல்லுருத்திரன்
• மருதக்கலி பாடியவர் (35 பாடல்கள்) – மருதனில நாகனார்
• நெய்தற்கலிபாடியவர்(33பாடல்கள்) – நல்லந்துவனார்
• பாலைக்கலி பாடியவர் (35பாடல்கள்) – பெருங்கடுங்கோன்
• ஆத்திச்சூடி, ஞானக்குறள் (109 பாக்கள்), கொன்றை வேந்தன் – நல்வழி (41 பாக்கள்), மூதுரை (வாக்குண்டாம்) (31 பாக்கள்) – ஒளவையார்
• வெற்றிவேற்கை, நைடதம் – அதிவீர ராம பாண்டியன்
• அறநெறிச்சாரம் – முனைப்பாடியார்
• நன்னெறி – சிவப்பிரகாசர்
• பிரபுலிங்க லீலை, உலக நீதி – உலகநாதர்
• நளவெண்பா, நளோபாக்கியானம் – புகழேந்திப் புலவர்
பதினென்கீழ்க்கணக்கு நூல்களும் பாடியோரும்
•திருவருட்பா, ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்,ஒழிவிலொடுக்கம், தொண்டமண்டல சதகம், சின்மய தீபிகை  – வள்ளலார் இராமலிங்க அடிகளார்
• மாறன் அகப்பொருள், மாறனலங்காரம் – திருக்குருகைப் பெருமாள்
• வேதாரணியப் புராணம், திருவிளையாடற் போற்றி கலிவெண்பா, சிதம்பரப்பாட்டியல், திருவிளையாடற் புராணம், மதுரை பதிற்றுப் பத்தந்தாதி – பரஞ்சோதி முனிவர்
• இலக்கண விளக்கப் பட்டியல் – வைத்தியநாத தேசிகர்
• மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை குறம், இரட்டை மணிமாலை, முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், காசிக்கலம்பகம்ää சகலகலா வள்ளிமாலை, கந்தர் கலிவெண்பா, மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணிமாலை, சிதம்பர மும்மணிக்கோவை, சிதம்பர செய்யுட்கோவை – குமரகுருபரர்
• கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்
• திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் – பகழிக்கூத்தர்
• சேக்கிழார் பிள்ளைத்தமிழ் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை
• இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், தக்கயாகப் பரணி, மூவருலா – ஒட்டக்கூத்தர்
• கலிங்கத்துப் பரணி, இசையாயிரம், உலா, மடல்  – செயங்கொண்டார்
• திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள்  – காரைக்காலம்மையார்
• திருக்குற்றாலநாத உலா, குற்றாலக் குறவஞ்சி  – திரிகூட ராசப்பக் கவிராயர்
• அழகர் கிள்ளை விடு தூது, தென்றல் விடு தூது – பலபட்டைச் சொக்கநாதப் புலவர்
• திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கை உலா – சிவப்பிரகாசர்
• திருவரங்கக் கலம்பகம், திருவேங்கடந்தந்தாதி அஷ்டப்பிரபந்தம் – பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
• நாரை விடு தூது – சத்தி முத்தப் புலவர்
• காந்தியம்மை பிள்ளைத்தமிழ், காந்தியம்மை அந்தாதி – அழகிய சொக்கநாதர்
• சுகுண சுந்தரி – முன்சீப் வேதநாயகம் பிள்ளை
• அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ், இலக்கண விளக்க சூறாவளி – சிவஞான முனிவர்
• கலைசைக் கோவை, கலைசைச் சிதம்பரேசர் பரணி, கலைசைச் சிலேடை வெண்பா, திருவாடுதுறை கோவை, சிவஞான முனிவர் துதி – தொட்டிக் களை சுப்பிரமணிய முனிவர்
• குசேலோபாக்கியானம் – வல்லூர் தேவராசப் பிள்ளை
• திருக்கோவையார் – மாணிக்கவாசகர்
• தஞ்சைவாணன் கோவை – பொய்யாமொழிப் புலவர்
• முக்கூடற்பள்ளு – என்னெயினாப் புலவராக இருக்கலாம்
• சேது புராணம் – நிரம்பவழகிய தேசிகர்
• இராம நாடகக் கீர்த்தனை – அருணாச்சலக் கவிராயர்
• மனோன்மணியம் – பெ. சுந்தரம்பிள்ளை
• திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் – கால்டுவெல்
• பெண்மதி மாலை, சர்வ சமயக் கீர்த்தனைகள், பிரதாப முதலியார் சரித்திரம், நீதிநூல் திரட்டு, சுகுண சுந்தரி சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை
• கமலாம்பாள் சரித்திரம் – ராஜம் ஐயர்
•ரூபாவதி, கலாவதி, மானவிஜயம், நாடகவியல் – பரிதிமாற்கலைஞர்
•வள்ளித்திருமணம், கோவலன் சரித்திரம், சதி சுலோச்சனா, இலவகுசா, பக்த பிரகலாதா, நல்லதங்காள், வீர அபிமன்யுää பவளக் கொடி – சங்கரதாஸ் சுவாமிகள்
• மனோகரா, யயாதி, சிறுதொண்டன், கர்ணன், சபாபதி, பொன் விலங்கு – பம்மல் சம்பந்தனார்
• இரட்டை மனிதன், புனர் ஜென்மம், கனகாம்பரம் விடியுமா? – கு.ப. ராஜகோபாலன்
• கடவுளும் சந்தசாமிப் பிள்ளையும், காஞ்சனை, பொன்னகரம், அகல்யை, சாப விமோசனம் – புதுமைப்பித்தன்
• மீனாட்சி சுந்தரம்பிள்ளை சரித்திரம், புதியதும் பழையதும், கண்டதும் கேட்டதும், நினைவு மஞ்சரி, என் சரிதம் – உ.வே. சாமிநாத அய்யர்
• கருணாமிர்த சாகரம் – தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
• பெத்லேகம் குறிஞ்சி – வேதநாயக சாஸ்திரி
• நாக நாட்டரசி, கோகிலம்பாள் கடிதங்கள் – மறைமலையடிகள்
•மோகமுள், அன்பே ஆரமுதே, அம்மா வந்தாச்சு, மரப்பசு, நளப்பாகம் – தி. ஜானகிராமன்
• இராவண காவியம், தீரன் சின்னமலை, சுரமஞ்சரி, நெருஞ்சிப்பழம் – புலவர் குழந்தை
• ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், புதிய வார்ப்புகள், ஒரு பிடிச் சோறு, பாரீசுக்குப் போ, குருபீடம், சினிமாவுக்குப் போன சித்தாளு யுகசாந்தி, புது செருப்பு கடிக்கும், அக்னிப் பிரவேசம், உன்னைப்போல் ஒருவன் – ஜெயகாந்தன்
• பொய்த்தீவு, ஒருநாள், வாழ்ந்தவர் கெட்டால்  – க.நா. சுப்ரமணியம்
• சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், அலை ஓசை, கள்வனின் காதலி, தியாகபூமி, மகுடபதி, அமரதாரா, திருடன் மகன் திருடன் – கல்கி
• அகல் விளக்கு, பெற்ற மனம், கள்ளோ காவியமோ, கரித்துண்டு, நெஞ்சில் ஒரு முள், தம்பிக்கு, தமிழ் இலக்கிய வரலாறு, கயமை, பாவை, வாடா மலர், செந்தாமரை, மண்குடிசை, குறட்டை ஒலி
– மு. வரதராசனார்
• புத்ர, அபிதா – லா. சு. ராமாமிர்தம்
• குறிஞ்சி மலர், சமுதாய வீதி, துளசி மாடம், பொன் விலங்கு, பாண்டிமா தேவி, மணி பல்லவம், வலம்புரிசங்கு – நா. பார்த்தசாரதி
• அண்ணாமலை வீரையந்தாதி, சங்கரன் கோயில் திரிபந்தாதிää கருவை மும்மணிக்கோவை – அண்ணாமலை ரெட்டியார்
•பாவை விளக்கு, சித்திரப்பாவை, எங்கே போகிறோம்? வேங்கையின் மைந்தன் வெற்றித் திருநகர், புதுவெள்ளம், பொன்மலர், பெண் – அகிலன்
• நெஞ்சின் அலைகள், மிஸ்டர் வேதாந்தம், கரிசல், புதிய தரிசனங்கள் – பொன்னீலன்
• கிருஷ்ண பருந்து – ஆ. மாதவன்
• பத்மாவதி சரித்திரம், விஜயமார்த்தாண்டம் – மாதவ அய்யர்
• உதய சந்திரன், நந்திபுரத்து நாயகி, காஞ்சி சுந்தரி – விக்கிரமன்
• தவப்பயன், புது உலகம், அன்பளிப்பு, சிரிக்கவில்லை, காலகண்டி – கு. அழகிரிசாமி
• ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள் – சுந்தர ராமசாமி (பசுவய்யா)
• குறிஞ்சித் தேன், வேருக்கு நீர், கரிப்பு மணிகள் – ராஜம் கிருஷ்ணன்
• தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம் – நீல பத்மநாபன்
• குருதிப்புனல், சுதந்திர பூமி, தந்திர பூமி, வேதபுரத்து வியாபாரிகள் – இந்திரா பார்த்த சாரதி
• புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால்  – ப. சிங்காரம்
• நாளை மற்றுமொரு நாளே, குறத்தி முடுக்கு  – ஜி. நாகராஜன்
• நாய்கள் – நகுலன்
• தேசபக்தன் கந்தன், முருகன் ஓர் உழவன் – வேங்கடரமணி                    • பதினெட்டாவது அட்சக்கோடு, இருட்டிலிருந்து வெளிச்சம், கரைந்த நிழல்கள், நண்பனின் தந்தை  – அசோகமித்திரன்
• சாயாவனம், தொலைந்து போனவர்கள்  – சா. கந்தசாமி
• ஸீரோ டிகிரி – சாரு நிவேதிதா
• ரங்கோன் ராதா, பார்வதி பி.ஏ. நிலையும் நினைப்பும், ஏ? தாழ்ந்த தமிழகமே, ஓர் இரவு, ஆரிய மாயை, வேலைக்காரி, தசாவதாரம், நீதி தேவன் மயக்கம், செவ்வாழை – அறிஞர் அண்ணா
• குறளோவியம், பராசக்தி, தொல்காப்பியப் பூங்கா, பொன்னர் சங்கர், தென்பாண்டிச் சிங்கம், இரத்தம் ஒரே நிறம், வெள்ளிக்கிழமை, சங்கத்தமிழ், ரோமாபுரிப் பாண்டியன், பூம்புகார், மந்திரிகுமாரி – கலைஞர் கருணாநிதி
• அர்த்தமுள்ள இந்துமதம், கல்லக்குடி மாகாவியம், இராசதண்டனை, ஆயிரம்தீவு, அங்கையற்கண்ணி, வேலங்குடித் திருவிழா, ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, இயேசு காவியம், சேரமான் காதலி, வனவாசம் மனவாசம் – கண்ணதாசன்
• முள்ளும் மலரும் – உமாசந்திரன்
• உயிரோவியம் – நாரண. துரைக்கண்ணன்
• கல்லுக்குள் ஈரம் – ரா.சு. நல்லபெருமாள்
• வாஷிங்டனில் திருமணம் – சாவி
• ஸ்ரீரங்கத்து தேவதைகள், கரையெல்லாம் செண்பகப்பூ, யவனிகா, இரத்தம் ஒரே நிறம் – சுஜாதா
• மெர்க்குரிப் பூக்கள், இரும்புக் குதிரை, உடையார் – பாலகுமாரன்
• மானுடம் வெல்லும், மகாநதி, சந்தியா – பிரபஞ்சன்
• நந்திவர்மன் காதலி, மதுரயாழ் மங்கை, ஆலவாய் அழகன் – ஜெகச்சிற்பியன்
• வீரபாண்டியன் மனைவி – அரு. ராமநாதன்
• இன்னொரு தேசிய கீதம், கவிராசன் கதை, கள்ளிக்காட்டு இதிகாசம், தண்ணீர் தேசம், கருவாச்சி காவியம், வில்லோடு வா நிலவே, வைகறை மேகங்கள், திருத்தி எழுதிய தீர்ப்புகள் – கவிஞர் வைரமுத்து
• பால்வீதி, ஆலாபனை, சுட்டு விரல், நேயர் விருப்பம், பித்தன் – அப்துல் ரகுமான்
• கண்ணீர்ப்பூக்கள், சோழநிலா, ஊர்வலம் – மு. மேத்தா
• கருப்பு மலர்கள் சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள், கல்லறைத் தொட்டில் – நா. காமராசன்
• கனவுகள் ⁺ கற்பனைகள் ₌ காகிதங்கள் – மீரா (மீ. ராஜேந்திரன்)
• ஞான ரதம், சந்திரிகையின் கதை, தராசு, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் – பாரதியார்
• கண்ணகி புரட்சி காப்பியம், பிசிராந்தையார், தமிழ் இயக்கம், குடும்ப விளக்குää இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, எதிர்பாராத முத்தம், கதர் இராட்டினப் பாட்டு, சஞ்சீவி பர்வதத்தின் சாரல், பாண்டியன் பரிசு, முதியோர் காதல், குறிஞ்சித் திரட்டு, படித்த பெண்கள், இசையமுது, மணிமேகலை வெண்பா, இளைஞர் இலக்கியம் – பாரதிதாசன்
• தேன்மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும், உதட்டில் உதடு, சாவின் முத்தம் – சுரதா
• ஊரும் பேரும் – ரா.பி. சேதுப்பிள்ளை
• தேவியின் கீர்த்தனைகள், மலரும் மாலையும், மருமக்கள் வழி மான்மியம், ஆசிய ஜோதி, குழந்தை செல்வம், உமர் கய்யாம் பாடல்கள் – கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
• கோவேறு கழுதைகள் – இமயம்
• மலைக்கள்ளன், தமிழன் இதயம், சங்கொலி, அவனும் அவளும், என் கதை, கவிதாஞ்சலி, காந்தி அஞ்சலி, தமிழ் வேந்தன், அன்பு செய்த அற்புதம் – நாமக்கல் கவிஞர். வே. ராமலிங்கம்பிள்ளை
• முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை, சீர்திருத்தம், கிறித்துவின் அருள் வேட்டல், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
– திரு.வி. கல்யாணசுந்தரனார்
• யவனராணி, கடல்புறா, மலைவாசல், இராசநிலம் ஜலதீபம், இராஜபேரிகை – சாண்டில்யன்
• காந்தார்ச்சாலை, கொல்லிமலைச் செல்வி – பூவண்ணன்
• மதங்க சூளாமணி, யாழ்நூல் – சுவாமி விபுலாநந்தர்
• வியாசர் விருந்து, சக்கரவர்த்தி திருமகள், சபேசன் – இராஜாஜி
• திருவந்தாதி – நம்பியாண்டார் நம்பி
• எழிலோவியம், குழந்தை இலக்கியம், தமிழச்சி, தொடு வானம் – வாணிதாசன்
• மலரும் உள்ளம், சிரிக்கும் பூக்கள், நேருவும் குழந்தைகளும் – அழ. வள்ளியப்பா
• கரமுண்டார் வீடு – தஞ்சை பிரகாஷ்
• காடு, பின்தொடரும் நிழலின் குரல், கன்னியாகுமரி, ஏழாவது உலகம், மண், விஷ்ணுபுரம், கொற்றவை – ஜெயமோகன்
• நெடுங்குருதி, உப பாண்டவம் – எஸ். ராமகிருஷ்ணன்
• புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு – தாரா பாரதி
• பூத்தது மானுடம், புரட்சி முழக்கம், உரை வீச்சு – சாலை இளந்திரையன்
• வாழும் வள்ளுவம், பாரதியின் அறிவியல் பார்வை – வா. செ. குழந்தைசாமி

இலக்கிய வகைச் சொற்கள்

இலக்கிய வகைச் சொற்கள்


இங்கு கொடுக்கப்பட்டுள்ள இலக்கிய வகைச் சொற்கள் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
இலக்கிய வகையால் சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். 
  • இயற்சொல்
  • திரிச்சொல்
  • திசைச்சொல்
  • வடசொல்
இயற்சொல்:
கற்றவர், கல்லாதவர் என அனைவருக்கும் எளிதில் பொருள் விளங்கும்படி அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்.
இயற்சொல் – இயல்பான சொல்.
எ.கா: பறவை, பூனை, மனிதன், மாமரம், பூ
இயற்சொல் இரு வகைப்படும்.
1) பெயர் இயற்சொல்
2) வினை இயற்சொல்
1) பெயர் இயற்சொல்:
எளிதில் பொருள் உணர்த்தும் பெயர்ச்சொற்கள் பெயர் இயற்சொல்எனப்படும்.
(எ.கா) காற்று, நிலவு, ஞாயிறு, பலகை
2) வினை இயற்சொல்:
எளிதில் பொருள் உணருமாறு அமைந்துள்ள வினைச்சொற்கள் வினை இயற்சொல்எனப்படுமு;.
(எ.கா) படித்தான், தூங்கினான், வந்தான், சிரித்தான், பறந்தது மேய்ந்தன.
திரிசொல்:
இயல்பு நிலையிலிருந்து மாறி கற்றவர் மட்டுமே அறிந்து கொள்ளும் வகையில் அமைந்த சொற்களைத் திரிச்சொற்கள்என்று கூறுவர்.
(எ.கா) பீலி – மயில்தொகை
உகிர் – நகம்
ஆழி – கடல்
தத்தை – கிளி
புனல் – நீர்;
ஞாலம் – உலகம்
திரிசொல் இரு வகைப்படும்
1) பெயர்த்திரிசொல்
2) வினைத் திரிசொல்
1) பெயர்த்திரிசொல்:
எளிதில் உணர முடியாது, கற்றவர்க்கு மட்டுமே பொருள் விளங்குமாறு அமைந்த பெயர்ச்சொல் ‘பெயர்த்திரிசொல்’ ஆகும்.
(எ.கா) எயில் – மதில்
நல்குரவு – வறுமை
கழை – மூங்கில்
கிழமை – உரிமை
மடி – சோம்பல்
பெயர்த்திரிசொல் இரு வகைப்படும்.
i. ஒரு பொருள் குறித்த பல பெயர்த்திரிசொல்
ii. பல பொருள் குறித்த ஒரு பெயர்த்திரிசொல்
ஒரு பொருள் குறித்த பல பெயர்த்திரிசொல்:
கமலம், கஞ்சம் முண்டகம் முளரி இவை யாவும் “தாமரை” என்னும் ஒரே பொருளை உணர்த்துகின்றன. இவ்வாறு கற்றவர்க்கு மட்டுமே பொருள் விளங்குமாறு அமைத்து ஒரே பொருளை உணர்த்தும் பல சொற்களை ஒரு பொருள் குறித்த பல பெயர்த்திரிசொல் என்று அழைக்கிறோம்.
எ.கா:
வேழம் வாரணம் கழை ஆகிய சொற்கள் “யானை” யைக் குறிக்கும்.
பல பொருள் குறித்த ஒரு பெயர்த்திரிசொல்:
ஆவி இச்சொல் உயிர் பேய் மெல்லிய புகை ஆகிய பல சொற்களை உணர்த்துகின்றது. அரிதில் பொருள் விளங்கும் இப்பெயர்ச்சொல் பல பொருள்களைத் தருவதால் அதனைக் பல பொருள் குறித்த ஒரு பெயர்த்திரிசொல் என்று அழைக்கிறோம்.
எ.கா:
ஆவணம் – முறிச்சீட்டு, கடைத்தெரு, அடிமைத்தனம்
2) வினைத்திரிசொல்:
கற்றவருக்கு மட்டுமே பொருள் விளங்கும் வகையில் அமைந்த வினைச்சொல் வினைதிரிசொல் எனப்படும்.
எ.கா: வினவினான் விளித்தான் நோக்கினான்.
வினைத்திரிசொல் இரு வகைப்படும்.
i. ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொல்
ii. பல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல்
ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொல்:
செப்பினான் உரைத்தான், மொழிந்தான் இயம்பினான் இவை கற்றவர்க்கு மட்டுமே விளங்கும் வகையில் அமைந்த வினைச்சொற்களாகும். எனவே இவை வினைத் திரிசொல் என வழங்கப்படும். இச்சொற்கள் அனைத்தும் ஒரு பொருளையே தருவதால் இவற்றை ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொல் என்பர்.
பல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல்:
வீசு இந்த வினைச்சொல் எறி, சிதறடி, பரவச்செய், ஆட்டு என்னும் பல பொருட்களை உணர்த்துகின்றது. இது கற்றவர்கள் மட்டுமே அறியும் சொல்லாகும். இதனைப் பல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல் ஆகும்.
திசைச்சொல்:
வடமொழி அல்லாத பிறமொழிச் சொற்கள் அம்மொழிகளில் எவ்வெப்பொருளில் வழங்குகின்றனவோ அவ்வப் பொருளிலேயே தமிழிலும் வந்து வழங்குவதைத் திசைச் சொற்கள் என்கிறோம்.
தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள பிற பகுதிகளிலிருந்து தமிழில் வழங்கும் திசைச்சொற்கள்
i. கேணி – (கிணறு)
ii. பெற்றம் – (பசு)
iii. அச்சன் – (தந்தை)
iv. கடிதாசி – (கடிதம்)
v. தள்ளை – (தாய்)
vi. சாவி – (திறவு கோல்)
vii.அசல் – (மூலம்)
viii. கோர்ட் – (நீதிமன்றம்)
ix.இலாகா – (துறை)
வடசொல்:
வடமொழிச் (சமஸ்கிருதம்) சொற்கள் திரிந்தும், திரியாமலும் தமிழ் மொழியில் வந்து வழங்குமானால் அவை “வடச்சொற்கள்”எனப்படும்.
கமலம், விஷம், புஷ்பம் இவை தமிழில் வந்து வழங்கினாலும் தமிழ்சொற்கள் அல்ல வடமொழிச் (சமஸ்கிருதம்) சொற்கள்.
எ.கா: கமலம் – தாமரை
விஷம் (அ) விடம் – நஞ்சு
புஷ்பம் (புட்பம்) – மலர்
அர்ச்சனை – மலரிட்டு வழிபடுதல்
சுதந்திரம் – விடுதலை
விவாகம் – திருமணம்