Saturday, 26 July 2014

Railway budget 2014 | ரயில் பட்ஜெட் 2014 முக்கிய அம்சங்கள்

ரயில் பட்ஜெட் 2014 முக்கிய அம்சங்கள் :

# பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில் கட்டணம் எந்த மாற்றமும் இல்லை.

# மும்பை அகமதாபாத் பிரிவில் புல்லட் ரயில் இயக்கப்படும்.

# அனைத்து மெட்ரோ நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரயில்களுக்காக டைமண்ட் நாற்கர பாதை அமைக்கப்படும்.

# ஒம்பது பிரிவுகளில் ரயில்களின் வேகத்தை 160-200 கிமீ / மணி வேகத்துக்கு உயர்த்துவது.

# ஒரு நிமிடத்துக்கு 7,200 டிக்கெட்கள் ஆன்லைன் புக்கிங் செய்யும் வசதி மற்றும், 1.2 லட்சம் பயனர்கள் ஒரே நேரத்தில் வலைதளத்தில் நுழையும் வசதிகள் மேம்படுத்தப்படும்.

# டிக்கெட் இட ஒதுக்கீடு முறையை மறுபரிசிலனை செய்யப்படும், டிக்கெட் முன்பதிவுகள் மொபைல் போன்கள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள் முலம் செய்வது உக்குவிக்கப்படும்.

# பதிவு செய்யாத பொது பெட்டிகளுக்கு என்று தனி ஆன்லைன் தளம் அமைக்கப்படும்.

# ரயில் நிலையங்களில் நடைமேடை மற்றும் வாகனத்தை நிறுத்துதல் ஆகிய இரண்டிற்கும் பொது டிக்கெட்டுகள் வழங்குவது.

# பெண்கள் படை காவலர்கள் பெண்கள் பெட்டிகளை கண்காணிக்க நியமிக்கப்படுவர், இதற்காக 4,000 பெண் காவலர்கள் நியமிக்கப்படுவர்.

# அனைத்து ரயில் நிலையங்களிலும் ஓய்வறை வசதியை நீட்டிப்பது.

# மாற்று திறனாளி மற்றும் மூத்த குடிமக்கள் பயன் பெரும் வகையில் முக்கிய நிலையங்களில் பேட்டரி பொருத்தப்பட்ட கார்கள் இயக்கப்படும்.

# உணவு தரத்தை பற்றி மக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க Interactive Voice Response System என்ற தனி சேவை அமைப்பு அமைக்கப்படும்.

# முக்கிய ரயில் நிலையங்களில் உணவை SMS மற்றும் தொலைபேசி மூலம் தெரிவித்து பெற்றுக்கொள்ளும் வசதி.

# தூய்மையை கண்காணிக்க ரயில் நிலையங்களில் CCTVs பயன்படுத்தப்படும்.

# ரயில் நிலையங்களில் சுத்தம் செய்யப்பட்ட RO குடிநீர் வசதி செய்யப்படும்.

# மெயின்லைன் மற்றும் புறநகர் பெட்டிகளில் தானியங்கி கதவு வசதி செய்யப்படும்.

# ரயில் உள்கட்டமைப்பு துறையில் அன்னிய முதலீடு மற்றும் உள்நாட்டு முதலீடுகள் உக்குவிக்கப்படும்.

# தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்களில் இண்டர்நெட் & கணினி வசதிகள்.

# தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்கள் மற்றும் A-1, A தரம் கொண்ட ரயில் நிலையங்களில் வைஃபை வசதி செய்து தரப்படும்.

# தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பாடங்களை கற்பதுக்காக ரயில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

# சில முக்கிய ரயில் நிலையங்கள் பொது மற்றும் தனியார் கூட்டமைப்புடன் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்படும்.

# பயணிகள் போக்குவரத்து தடையின்றி செய்ய பார்சல் போக்குவரத்துக்கு தனி டெர்மினல்கள் அமைக்கப்படும்.

# ஒரு பயணியின் மிது உள்ள இழப்பு 2000- 2001 இல் 10 பைசாவில் இருந்து 2012- 2013 இல் 23 பைசாவாக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

# முக்கிய நிலையங்களில் சூரிய சக்தி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

# எப்போதும் இல்லாத அளவிற்கு 2014-15 நிதி ஆண்டில் ரூ 65,455 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.

# 2014-15 நிதி ஆண்டில் செலவு ரூ 149,176 கோடி என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

# சலவை இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

# 5400 ஆளில்லாத ரயில்வே கேட் நீக்கப்படும்.

# சுற்றுலா பயணிகள் நாடு முழுவதும் சுற்றுலா தளங்களுக்கு சென்று வர வசதியாக அணைத்து முக்கிய சுற்றுலா தளங்களும் இணைக்கும் வகையில் சுற்றுலா ரயில்கள் அறிமுகம் செய்யப்படும்.

# பாதையில் உள்ள பிரச்சனையை கண்டறிய அல்ட்ராசோனிக் முறை அறிமுகம் செய்யப்படும்.

# ஜிஐஎஸ் மேப்பிங் மற்றும் ரயில்வே நிலங்களை டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன் படுத்தும் வகையில் மாற்றப்படும்.

# ரயில் மூலம் பால் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துதல். அமுல் மற்றும் தேசிய பால் சங்கம் வாரியம் இணைந்து சிறப்பு பால் போக்குவரத்து ரயில்கள் அறிமுகம் செய்வது.

# சார் தாம் பகுதிகளை ரயில் போக்குவரத்து முலம் இணைப்பது. சார் தாம் என்பது இந்துக்களின் முக்கியமான நான்கு புனித தளத்தின் (பத்ரிநாத், துவாரகா, பூரி மற்றும் ராமேஸ்வரம்) பெயர்கள் ஆகும்.

# இன்னும் 5 ஆண்டுகளில் இந்திய ரயில்வே அலுவலகம் காகிதமற்ற அலுவலகமாக மாற்றப்படும். நிலையங்களில் டிஜிட்டல் ஒதுக்கீடு வரைபடங்கள் வைக்கப்படும்.

# ஐந்து ஜன்சன்தரன் மற்றும் ஐந்து பிரீமியம் ஏசி ரயில்கள் அறிமுகம் செய்யப்படும்.

# மும்பை லோக்கல் ரயில்களுக்கு 860 புதிய பெட்டிகள் வழங்கப்படும் மற்றும் 64 புதிய எலெக்ட்ரிக் ரயில்கள் அறிமுகம் செய்யப்படும்.

Tuesday, 22 July 2014

கணினி சார்ந்த பொதுவான தகவலை | பொது அறிவை தெரிந்து கொள்ளுங்கள்



#  இன்டர்நெட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - வின்ட் ஸர்ப்

#  www (World wide web) என்னும் இன்டர்நெட் தாரக மந்திரத்தை உருவாக்கியவர் - திமோத்திஜான் பெர்னர்ஸ்லீ. இதன் துவக்க பெயர் Enquire

#  கணினி வழி தகவல் பரிமாற்றத்தில் புன்னகை தவழும் முகம் என்பதை குறிக்க :- எனும் கூறியீடு பயன்படுத்தப்படுகிறது. இதை முதன் முதலாக 1982ல் பயன்படுத்தத் துவங்கியவர் - ஸ்காட் பால்மன்

#  கூகுள் தேடுபொறியை உருவாக்கியவர்கள் - லாரிபேஜ், ஸ்சேர்கி பிரின்

#  விகிபீடியா வலைதளத்தை உருவாக்கியவர் - ஜிம்மி வேல்ஸ்

#  பேஜ்மேக்கர் எனும் பப்ளிஷிங் சாப்வேரை உருவாக்கியவர்  - பால் பிரெயினார்ட், இவர் இந்தியாவின் சூப்பர் கம்ப்யூட்டர் என்றும் அழைக்கப்படுகின்றார்.

#  சி++ எனும் கணினி மொழியை வடிவமைத்தவர் - பியான் ஸ்ட்ரூ ஸ்டெரெப்

#  MS-Dos எனப்படும் கணினி நிரலை உருவாக்கியவர் - டிப் பாட்டர்ஸன்

#  ஆப்பிள் கணினியை துவக்கியவர் - ஸ்டீவ் வோஸ்னியாக்

#  CD என்ற குறுந்தகடை கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ரஸ்ஸல்

#  Vital Information Resources Under Seas எனும் கணினி வார்த்தையின் சுருக்கம் தான் VIRUS

#  Commonly operated machine purposely used for trade and Engineering research என்பதன் சுருக்கம் தான் COMPUTER

#  கணினி மவுஸை கண்டுபிடித்தவர் - டக்ளஸ் எங்கல்பர்ட்

#  Uniform Resource Location என்பதன் சுருக்கம் தான் URL முகவரியாகும்.