Friday, 28 November 2014

விண்வெளி பற்றிய சில விளக்கங்கள் TNPSC VAO Notes

விண்வெளி பற்றிய பழமையான நூல் ஆரியபட்டியம்

ஜோவியன் கிரகங்கள் என வர்ணிக்கப்படும் கிரகங்கள் வியாழன், சனி, யுரேனஸ்

துருவநட்சத்திரம் காணப்படும் திசை வடக்கு

நோவா என்பது நட்சத்திரத்தின் கடைசி வெடிப்பு

உலகின் முதல் விண்வெளி வீரர் யூரிகாரின் (ரஷ்யா) 1961
உலகின் முதல் பெண் விண்வெளி வாலெண்டினா ஃதெரஷ்கோவா (ரஷ்யா)1963

விண்வெளியில் இறங்கி நடந்தவர் அலெக்சி லியனேவ் 1965

நிலவில் காலடி வைத்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங்க்

நிலவில் காலடி வைத்த இரண்டாவது மனிதர் எட்வின் ஆல்டரன்

முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ்சர்மா (சல்யூட் 7)

முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா (கொலம்பியா விண்வெளி ஓடம்)

சூரியனின் வெப்பநிலை எவ்வளவு?

மேற்பரப்பு 6000 டிகிரி செல்சியஸ்.  உட்பரப்பு 14 மில்லியன் டிகிரி செல்சியஸ்

அன்னலூர் கிரகணம் என்பது?
முழுச்சூரிய கிரகணம்

சூரியனை மிகக் குறைந்த நாளில் சுற்றி வரும் கோள் எது?
புதன்

மிகவும் வெப்பமான கோள் எது?
வெள்ளி

மிகப்பெரிய கோள் எது?
வியாழன்
பூமிக்கும் சந்திரனுக்கும் அதிகபட்ச தூரம் (அப்போஜி) 4,06,000 கி.மீ

பூமிக்கும் சந்திரனுக்கும் குறைந்தபட்ச தூரம் (பெரிஜி) 3,64,000 கி.மீ

பூமியை சூழந்துள்ள வாயு மண்டத்தின் உயரம் 960 கி.மீ.

டிரோபோஸ்பியர் பரவியுள்ள தூரம் 8 முதல் 18 கி.மீ வரை

ஸ்டிரேடோஸ்பியர் பரவியுள்ள தூரம் 50 கி.மீ வரை

மீசோஸ்பியர் பரவியுள்ள தூரம் 80 கி.மீ வரை

அயனோஸ்பியர் பரவியுள்ள தூரம் 80 கி.மீ முதல் 640 கி.மீ வரை

எக்ஸோஸ்பியர் பரவியுள்ள தூரம் 400 கி.மீ வரை

Saturday, 22 November 2014

இந்திய அரசியலமைப்பு


இந்தியாவின் முதல் அரசியலமைப்பு சபைக் கூட்டம் டிசம்பர்- 9, 1946-ம் ஆண்டு நடை பெற்றது.

  தலைவராக சச்சிதானந்த சின்ஹா செயல் பட்டார். அவர் மறைவுக்குப் பின்னர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் தலைவராகச் செயல் பட்டார்.

 டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் வரைவுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார்.

  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் நவம்பர் 26, 1949. 

  இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது ஜனவரி 26, 1950.

  இந்திய அரசியலமைப்பு மிக விரிவாக எழுதப்பட்ட ஆவணமாகும்.

 பிரிட்டன், அயர்லாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் அரசிய லமைப்புகளே இந்திய அரசியலமைப்புக்கு மூலாதாரமாக இருந்தன.

 இந்திய அரசியலமைப்பு வரையப்பட்டபோது இருந்த சரத்துகள் மற்றும் பட்டியல்களின் எண்ணிக்கை: 395 சரத்துகள், 8 பட்டியல்கள்.

 தற்போது இந்திய அரசியலமைப்பில் உள்ள சரத்துகள் மற்றும் பட்டியல்களின் எண்ணிக்கை 444 சரத்துகள், 12 பட்டியல்கள்.

  இந்திய அரசியலமைப்பு நெகிழும் இயல்பும், நெகிழா இயல்பும் கொண்டுள்ளது.

  இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி முறையும் ஒற்றையாட்சி முறையும் ஒன்றாகக் கொண்டுள்ள ஓர் அரசியலமைப்பாக விளங்குகிறது.

  மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அர சாங்கத்திற்கும் அதிகாரங்கள் தனித்தனியே வரையறுக்கப்பட்டுள்ளன.

 அதிகாரங்கள் மத்திய பட்டியல், மாநில பட்டியல், பொதுப் பட்டியல் என்ற மூன்று பட்டியல்களில் வைக்கப்பட்டுள்ளன.

  நெருக்கடிகாலச் சமயங்களில் அதிகாரங்களை மத்திய அரசே, ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒற்றையாட்சிக் கூறுகள் உள்ளன. 


  இந்தியா ஒரு மதச்சார்பற்ற அரசாக விளங்குகிறது. அரசு மதத் தலையீட்டிலிருந்து விடுபட்டது. எந்தக் குறிப்பிட்ட மதத்தையும் சாராதது. குடிமக்கள் அனைவருக்கும் சுதந்திரமான தெய்வ நம்பிக்கை, வழிபாட்டுச் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

 இந்திய அரசியலமைப்பின் மூன்றாம் பகுதியில் அடிப்படை உரிமைகள் இடம் பெற்றுள்ளன. (அங்கங்கள் 12 முதல் 35 வரை).

 அடிப்படை உரிமைகள் சட்டத்தின் முன் எல்லா குடிமக்களுக்கும் சமத்துவத்தை வழங்குகின்றன.

 அடிப்படை உரிமைகள் தனிமனித நலனுக்கும், பொது நலனுக்கும் இடையே சம நிலையை ஏற்படுத்துகின்றன.

  இந்திய அரசியலமைப்பின் நான்காம் பகுதியில் அரசுக் கொள்கையினை நெறிபடுத்தும் கோட் பாடுகள் இடம் பெற்றிருக்கின்றன (அங்கங்கள் 36 முதல் 51 வரை).

  நமது நாட்டில் பொது நல அரசு அமைப்பதற்கும் இவைகளே வழிகாட்டி வருகின்றன.

 நமது அரசியலமைப்பு, சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது. இந்திய உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் சட்டங்களை நீதிப் புனராய்வு செய்யும் அதிகாரம் பெற்றுள்ளன.

 ஒரு சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டது அல்லது புறம்பானது என்று தீர்ப்பு வழங்கத்தக்க அதிகாரத்திற்கே நீதிப் புனராய்வு என்று பெயர்.

  அரசியலமைப்பின் காவலனாக நீதித்துறை விளங்குகிறது. இந்திய குடிமக்களின் உரிமை களையும் சுதந்திரங்களையும் நீதித்துறை இதன் மூலம் பாதுகாக்கிறது.

 இந்திய அரசியலமைப்பு வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்க உறுதியளிக்கிறது.

 பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனும், சாதி, மதம், நிறம், பாலினப் பாகுபாடு இன்றி தேர்தலில் வாக்களிக்க உரிமை பெற்றுள்ளனர். 


இந்திய அரசியலமைப்பு முகவுரை


*  இந்திய ஜனநாயகத்திற்கு அடிப்படையான பண்புகளை விளக்கும் பகுதியாக முகவுரை (Preamble) அமைகிறது.

*  அமெரிக்க நாட்டின் அரசியலமைப்பைப் முக வுரை எனும் கொள்கையை இந்திய அரசியல மைப்பு வல்லுநர்கள் எடுத்துக் கொண்டனர்.

*  இந்திய அரசியலமைப்பிற்கு முகப்புரை வழங்கிய பெருமை ஜவஹர்லால் நேருவைச் சாரும்.

*  இந்திய அரசியலமைப்பின் திறவுக்கோல், "இந்திய அரசியலமைப்பின் இதயம்' என்று போற்றப்படுவது முகவுரைதான்.
*  இந்திய அரசியலமைப்பு முகவுரை இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே திருத்தப்பட்டுள்ளது.

*  1976-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட 42-வது சட்டத் திருத்தத்தின்படி முகவுரையில் சமதர்ம (Socialist), மதச்சார்பற்ற (Secular), ஒருமைப் பாடு (Integrity) எனும் மூன்று சொற்கள் சேர்க்கப்பட்டன.

இந்திய அரசும் அதன் எல்லைகளும்

*  இந்திய அரசியலமைப்பில் பகுதி-1, இந்திய அர சும் அதன் எல்லைகளும் பற்றி விளக்குகிறது.

*  இந்தியாவில் உள்ள மாநிலங்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆகும். மத்திய ஆட்சிப் பகுதி யான யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை மொத்தம் 6 ஆகும். ஒரு தேசிய தலைநகர் பகுதி (டெல்லி)யும் உள்ளன.

*  புதிய மாநிலங்களை உருவாக்கும் பாராளுமன்ற உரிமைகளை விவரிப்பது சட்டப்பிரிவு- 2

*  புதிய மாநிலத்தை உருவாக்குவது, பழைய மாநிலங்களைச் சுருக்குவது, எல்லைகளை மாற்று வது இவற்றை விவரிப்பது சட்டப்பிரிவு- 3

*  புதிய மாநிலங்களை உருவாக்கத் தேவையான சட்ட வழிமுறைகளைப் பற்றிப் பேசுவது சட்டப்பிரிவு- 4

* இந்தியாவில் மொழிவாரி மாநிலமாக, முதன்முதலாக அமைக்கப்பட்ட மாநிலம் ஆந்திரப்பிரதேசமாகும். இது 1953-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

*  இந்தியாவின் 28-வது மாநிலம் ஜார்கண்ட்.

அடிப்படை உரிமைகள்

*  இந்திய அரசியலமைப்பு, தொடக்கத்தில் ஏழு அடிப்படை உரிமைகளைக் கொண்டிருந்தது.

*  1978-ல் 44-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி சொத்துரிமையானது அடிப் படை உரிமையிலிருந்து நீக்கம் செய்யப் பட்டதால், தற்போது ஆறு அடிப்படை உரிமைகள் உள்ளன.

*   1. சமத்துவ உரிமை (அரசியலமைப்பு பிரிவு 14-18):

*   2. சுதந்திரத்திற்கான உரிமை (அரசியலமைப்புப் பிரிவு 19-22)

*  3. சுரண்டலுக்கு எதிரான உரிமை (அரசிய லமைப்புப் பிரிவு 23-24):

*  4. சமயச் சுதந்திரத்திற்கான உரிமை (அரசிய லமைப்புப் பிரிவு 25-28):

*  5. பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் (அரசிய லமைப்புப் பிரிவு 29-30):

*  6. அரசியலமைப்பு தீர்வு வழிகளுக்கான உரிமை (அரசியலமைப்புப் பிரிவு - 32):



Thursday, 20 November 2014

பதினெண் மேற்கணக்கு - பதினெண் கீழ்க்கணக்கு - ஐம்பெருங்காப்பியங்கள் - ஐஞ்சிறு காப்பியங்கள்

பதினெண் மேற்கணக்கு

 எட்டுத்தொகை
  1. ஐங்குறுநூறு
  2. அகநானூறு
  3. புறநானூறு
  4. கலித்தொகை
  5. குறுந்தொகை
  6. நற்றிணை
  7. பரிபாடல்
  8. பதிற்றுப்பத்து

பத்துப்பாட்டு

  1. திருமுருகாற்றுப்படை
  2. குறிஞ்சிப் பாட்டு
  3. மலைபடுகடாம்
  4. மதுரைக் காஞ்சி
  5. முல்லைப் பாட்டு
  6. நெடுநல்வாடை
  7. பட்டினப் பாலை
  8. பெரும்பாணாற்றுப்படை
  9. பொருநர் ஆற்றுப்படை
  10. சிறுபாணாற்றுப்படை

பதினெண் கீழ்க்கணக்கு

  1. நாலடியார்
  2. நான்மணிக்கடிகை
  3. இன்னா நாற்பது
  4. இனியவை நாற்பது
  5. கார் நாற்பது
  6. களவழி நாற்பது
  7. ஐந்திணை ஐம்பது
  8. திணைமொழி ஐம்பது
  9. ஐந்திணை எழுபது
  10. திணைமாலை நூற்றைம்பது
  11. திருக்குறள்
  12. திரிகடுகம்
  13. ஆசாரக்கோவை
  14. பழமொழி நானூறு
  15. சிறுபஞ்சமூலம்
  16. முதுமொழிக்காஞ்சி
  17. ஏலாதி
  18. கைந்நிலை

ஐம்பெருங்காப்பியங்கள்

  1. சிலப்பதிகாரம்
  2. மணிமேகலை
  3. குண்டலகேசி
  4. வளையாபதி
  5. சீவக சிந்தாமணி

ஐஞ்சிறு காப்பியங்கள்

  1. உதயண குமார காவியம்
  2. நாககுமார காவியம்
  3. யசோதர காவியம்
  4. சூளாமணி
  5. நீலகேசி

TNPSC Tamil ilakkanam | இடுகுறிப்பெயர் - காரணப்பெயர்

இடுகுறிப்பெயர் :

  • நம் முன்னோர்கள் எந்தக் காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்குக் குறியீடாக இட்ட பெயரே இடுகுறிப்பெயர்.  காரணம் அறியவியலாப் பெயர்கள் எல்லாம் இடுகுறிப்பெயர்களே.
  • மண், நாய், கோழி, மலை, காடு, மாடு  என்பன இடுகுறிப்பெயர்களே.

இடுகுறிப் பொதுப்பெயர் :
  • மலை என்பது அனைத்து மலைகளுக்கும் பொதுப்பெயர்.
  • காடு என்பது அனைத்துவகைக் காடுகளுக்கும் பொதுப்பெயர்.
  • மாடு என்பது பல்வகை மாடுகளுக்கும் பொதுப்பெயர்.
  • இவ்வாறு அனைத்துக்கும் பொதுவாக வரும் இடுகுறிப்பெயர்களை இடுகுறிப் பொதுப்பெயர் எனக் கூறுவர்.

இடுகுறிச் சிறப்புப்பெயர் :
  • ‘மரம்’ என்னும் சொல் மா, பலா, வாழை, தென்னை முதலான மரவகை அனைத்திற்கும் இடுகுறிப்பெயராய்ப் பொதுவாக வரும். 
  • ‘தென்னை’ என்னும் சொல் ஒரு காரணமும் இன்றி, இடுகுறிப்பெயராய் நின்று, ஒரு பொருளுக்கே (தென்னைமரம்) சிறப்பாய் வருவதனால் இடுகுறிச் சிறப்புப் பெயராயிற்று.
காரணப்பெயர்:
  • காரணம் கருதி இடப்பட்ட பெயர்கள் காரணப்பெயர்கள் எனப்படும்.
  • தமிழில் காரணப்பெயர்களே மிகுதியாக உள்ளன. பிறமொழிகளில் இடுகுறிப்பெயர்களே மிகுதியாக உள்ளன.
  • பறவை (பறப்பதனால்), வளையல் , செங்கல் , முக்காலி, கரும்பலகை எனப் பலவற்றைக் கூறலாம்.
காரணப் பொதுப்பெயர் : 
  • ‘பறவை’ என்னும் சொல்லை எடுத்துக்கொள்வோம். பறப்பதனால் பறவை எனக் காரணம் கருதி வழங்கும் பெயராயிற்று.
  • காகம், குயில், புறா, கிளி ஆகிய அனைத்தையும் ‘பறவை’ என்னும் பொதுச்சொல்லால் அழைக்கிறோம். அதனால், இதனைக் காரணப் பொதுப்பெயர் என்கிறோம்.
காரணச் சிறப்புப் பெயர் :

  • வளையல் என்னும் சொல் காரணச் சிறப்புப் பெயராகும்.
  • வளையல் போலவே சிலபொருள் வளைந்து வட்டமாக இருக்கும். இருப்பினும்,  அவையெல்லாம் வளையல் என அழைக்கப்படுவது இல்லை. இருப்பினும் இச்சொல், கையில் அணியும் வளையலை மட்டுமே குறிப்பதனால், காரணச் சிறப்புப் பெயர் ஆயிற்று.