சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு எப்படி அப்ளை பண்ணுவது? விரிவான விளக்கம்
சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு எப்படி அப்ளை பண்ணுவது?
விரிவான விளக்கம்:
1] முதலில் CLICK HERE FOR REGISTRATION – ஐ கிளிக் செய்யவும்.
2] ஆன்லைன் விண்ணப்பத்தில் முதல் பக்கம் வரும். அதில் விண்ணப்பதாரரின் பெயர்
a] கைபேசி எண்
b] மின்னஞ்சல் முகவரி
c] பிறந்த தேதி
d] வயது
பாஸ்வேர்டை ஐ நிரப்ப வேண்டும். [ ஒருமுறை நிரப்பினால் அதை மாற்ற முடியாது. எனவே தெளிவாக யோசித்து நிரப்ப வேண்டும். ]
3] தனிநபர் விவரங்கள்:
தனிப்பட்ட விவரங்கள் மற்றும் அவரது விருப்பப்படி தேர்வு மையத்தை தேர்ந்தெடுக்கவும்.
4] தகுதி:
இந்த தொகுதியில் விண்ணப்பதாரரை பற்றிய விவரங்கள் அளித்திட வேண்டும்.
1. வயது அடிப்படை தகுதி.
2. அடிப்படைகள் மற்றும் கல்வி தகுதி.
சமூகம், (வயது வரம்பில் தளர்வு மற்றும் / அல்லது சமூகம் ஒதுக்கீடு கூறி இருந்தால்)
விளையாட்டு / ஒதுக்கீடு விவரங்கள் (கோட்டாவின் கீழ் விண்ணப்பித்து இருந்தால் )
குறிப்பு : விண்ணப்பதாரர்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்களை மிகுந்த உண்மையுடன் உள்ளிட வேண்டும்.
அனைத்து விவரங்களும் சரியாக உள்ளனவா என்று மீண்டும் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பமே இறுதி என்று கருதப்படுகிறது. சான்றிதழ் சரிப்பார்ப்பில் நாம் கொடுத்த தகவல்கள் தவறாக இருப்பின் நாம் நிராகரிக்கப்படுவோம்.
5] ஆவணப் பதிவேற்றம்:
விண்ணப்பதாரர்கள் ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும்.
A] புகைப்படம் – Only jpg – 20 Kb – 50 kb.
B] கையொப்பம் – Only jpg – 20 Kb – 50 kb.
C] 10ம் வகுப்பு மார்க்சீட் – 1. Only jpg (if one attempt) 20 kb – 200 KB.
2. Only pdf (if 2 or more attempts) 50KB – 600 kb.
அதாவது
a. முதல் தடவையில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால்
அந்த மார்க்சீட்டை Only jpg (if one attempt) 20 kb – 200 KB இந்த அளவில் பதிவு செய்யவும்.
b. 10ம் வகுப்பில் பெயிலாகி இரண்டு மாக்சீட் வைத்திருந்தால் அதை Only pdf (if 2 or moreattempts) 50KB – 600 kb. இந்த அளவில் பதிவு செய்யவும்.
D] 12ம் வகுப்பு மார்க்சீட் – 1. Only jpg (if one attempt) 20 kb – 200 KB.
2. Only pdf (if 2 or more attempts) 50KB – 600 kb.
அதாவது
a.முதல் தடவையில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால்
அந்த மார்க்சீட்டை Only jpg (if one attempt) 20 kb – 200 KB இந்த அளவில் பதிவு செய்யவும்.
b.12ம் வகுப்பில் பெயிலாகி இரண்டு மார்க்சீட் வைத்திருந்தால் அதை Only pdf (if 2 or more attempts) 50KB – 600 kb. இந்த அளவில் பதிவு செய்யவும்.
E] பட்டம் அல்லது இடைக்கால சான்றிதழ் – Only jpg 20 kb -100 kb.
குறிப்பு : கீழே உள்ள [ 6, 7, 8, ஆகியவை ஒரே உரிமைகோரியவர்களிடமிருந்து ஒதுக்கீடு தரப்பட்டவை ].
F] சமூக சான்றிதழ் – Only JPG – [ 20 KB 100 KB ].
G] படிவம் – ஒன்று அல்லது படிவம் – இரண்டு அல்லது படிவம் – மூன்று ,
விளையாட்டுப் பிரிவினருக்கானது. Only jpg [ 20 KB 100 KB ].
H] ஆதரவற்ற விதவை சான்றிதழ் பற்றிய வயது தளர்வு – Only jpg [ 20 KB 100 KB ].
I] முன்னால் ராணுவத்தினர் [ பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட விவரங்கள் ] – Only Pdf [ 50 kb 400 kb ] இந்த அளவில் இருக்க வேண்டும்.
J] வார்டு சான்றிதழ் – [ Only jpg – [ 20 kb – 100 kb ] [ Only ward quota applying candidates ].
K] தடையில்லாச் சான்றிதழ் [ துறை ஒதுக்கீடு ] – [ Only jpg – [ 20 kb – 100 kb ] – [ஒரே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் துறை ஒதுக்கீடு ].
6]முன்னோட்டம்:
இந்த தொகுதியில் விண்ணப்பதாரர்கள் மேலே பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பார்க்கலாம்.
மேலும் பதிவேற்றிய விண்ணப்பம் இறுதியாக சமர்ப்பிக்கும் முன் துறைகள் மற்றும் ஆவணங்களை திருத்த இது உதவுகிறது.
இந்த தொகுதி சமர்ப்பிக்கப்பட்ட பின், விண்ணப்பத்தை மாற்ற முடியாது.
7]கட்டணம் :
விண்ணப்பத்தை சமர்ப்பித்தபிறகு விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.
கட்டண விவரம்:
1] Rs.230 / – பொது ஒதுக்கீடு கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்.
2] Rs.230 / – துறை ஒதுக்கீடு கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்.
3] Rs.460 / – பொது ஒதுக்கீடு மற்றும் துறை ஒதுக்கீடு கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்.
பணம் செலுத்தும் முறைகள்:
விண்ணப்பதாரர்கள் (நெட் பேங்கிங் முறை மூலம் பரீட்சை கட்டணம் செலுத்த முடியும்). (வங்கி கடன் அட்டை / பற்று அட்டை).
அல்லது
ஆஃப்லைன் மூலம் பணம் செலுத்தும் முறை ( இந்தியன் வங்கி அல்லது இ-பணம் தபால் நிலையம்).






