Tuesday, 30 July 2019

இலக்கணக் குறிப்பறிதல் Ilakkana kurripu

இலக்கணக் குறிப்பறிதல்


இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தொகுதிகளும் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
தமிழ் இலக்கணம்
 இலக்கணம் ஐந்து வகைப்படும்:
1. எழுத்திலக்கணம்
2. சொல்லிலக்கணம்
3. பொருளிலக்கணம்
4. யாப்பிலக்கணம்
5. அணியிலக்கணம்
 எழுத்தின் வகைகள்:
எழுத்துக்கள் இரண்டு வகைப்படும்
1. உயிரெழுத்துகள்
2. சார்பெழுத்துகள்
 முதலெழுத்துகளின் வகைகள்:
முதலெழுத்துக்கள் இரண்டு வகைப்படும்
1. உயிரெழுத்துகள்
2. மெய்யெழுத்துகள்
 உயிரெழுத்துகளின் வகைகள்:
உயிரெழுத்துகள் இரண்டு வகைப்படும்
1. குற்றெழுத்துகள் (அ இ உ எ ஒ)
2. நெட்டெழுத்துகள் (ஆ ஈ ஊ ஏ ஐ ஓ  ஒள)
 மெய்யெழுத்துகளின் வகைகள்:
மெய்யெழுத்துகள் மூன்று வகைப்படும்
1. வல்லினம் (க் ச் ட் த் ப் ற்)
2. மெல்லினம் (ங் ஞ் ண் ந் ம் ன்)
3. இடையினம் (ய்  ர் ல் வ் ழ் ள்)
 ஆய்த எழுத்து
முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை, முற்றாய்தம் ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
 சார்பெழுத்து அதன் வகைகள்:
முதல் எழுத்துக்களாகிய உயிர் எழுத்துக்களையும், மெய்யெழுத்துகளையும் சார்ந்து இயங்கும் எழுத்துகள் சார்பெழுத்துகள் எனப்படும்.
சார்பெழுத்து பத்து வகைப்படும்.
  1. உயிர்மெய்
  2. ஆய்தம்
  3. உயிரளபெடை
  4. ஒற்றளபெடை
  5. குற்றியலுகரம்
  6. குற்றியலிகரம்
  7. ஐகாரக்குறுக்கம்
  8. ஒளகாரக்குறுக்கம்
  9. மகரக்குறுக்கம்
  10. ஆய்தக்குறுக்கம்
உயிர்மெய் ஆய்தம் உயிரள பொற்றள
பஃகிய இஉஐ ஒள மஃகான்
தனிநிலை பத்தும் சார்பெழுத்தாகும்”
அளபெடை:
“அளபெடை” என்பதற்கு “நீண்டு ஒலித்தல்” என்று பொருள். செய்யுளில் ஓசை குறையும் போது ஒரு சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கும் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதே அளபெடை எனப்படும்.
அளவு  மாத்திரை எடை  எடுத்தல் என்பது பொருள் எழுத்தின் மாத்திரை அளவில் நீட்டி ஒலித்தல்
 மாத்திரை அளவு:
உயிர்க்குறில் உயிர்மெய்க்குறில் – ஒன்று
உயிர் நெடில் உயிர்மெய்நெடில் – இரண்டு
மெய் ஆய்தம் – மூன்று
உயிரளபெடை – நான்கு
ஒற்றளபெடை – ஐந்து
 அளபெடையின் வகைகள்:
அளபெடை இரண்டு வகைப்படும்.
1. உயிரளபெடை 2. ஒற்றளபெடை
1. உயிரளபெடை
உயிர் +அளபெடை ₌ உயிரளபெடை
செய்யுளில் ஓசை குறையும் போது அந்த ஓசையை நிறைவு செய்ய உயிர்நெட்டெழுத்துகள் ஏழும் (ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள) அளபெடுக்கும் அவ்வாறு அளபெடுக்கும் போது அளபெடுத்தமையை அறிய நெட்டெழுத்துகளுக்கு இனமான குற்றெழுத்துகள் அவற்றின் பக்கத்தில் எழுதப்படும்.
உயிரளபெடையின் வகைகள்:
உயிரளபெடை மூன்று வகைப்படும்.
1. செய்யுளிசையளபெடை (அல்லது) இசைநிறையளபெடை
2. இன்னிசையளபெடை
3. சொல்லிசையளபெடை
செய்யுளிசையளபெடை:
செய்யுளில் ஓசையை நிறைவு செய்தற்பொருட்டு சொல்லின் முதல், இடை, கடையிலுள்ள உயிர் நெட்டெழுத்துகள் அளபெடுத்து வருவதைச் செய்யுளிசையளபெடை என்பர். இதற்கு இசை நிறையளபெடை என்ற வேறு பெயரும் உண்டு.
எ.கா:
“ஏரின் உழாஅர் உழவர் பயலென்னும்
வாவுhரி வளங்குன்றிக் கால்”
இக்குறட்பாவில் “உழாஅர்” என்னும் சொல் அளபெடுத்து வந்துள்ளது. உழார் என்பது இயல்பான சொல்
(எ.கா) “கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடா அர் விழையும் உலகு”
இக்குறட்பாவில் கெடா என்பது கெடாஅ என இறுதியிலும் விடா என்பது விடாஅர் என இடையிலும் அளபெடுத்துவந்துள்ளது.
மேலும் சில எ.கா
1) உழாஅர் 2) படாஅர் 3) தொழூஉம்
4) தூஉ 5) தருஉம் 6) ஆஅதும்
7) ஓஒதல் 8) தொழாஅன் 9) உறாஅமை
10) பெறாஅ
அளபெடை
உறாஅமை – செய்யுளிசை அளபெடை
இன்னிசையளபெடை:
செய்யுளில் ஓசை குறையாத பொழுதும் செவிக்கு இனிய ஓசையைத் தரும் பொருட்டு உயிர்க்குறில் நெடிலாகி மேலும் அளபெடுப்பது இன்னிசையளபெடை ஆகும்.
எ.கா:
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மாற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
கெடுப்பதும், எடுப்பதும் என்று ஒசை குறையாத இடத்திலும் இனிய ஒசை தருவதற்காகக் குறில் நெடிலாக மாறி அளபெடுப்பது இன்னிசையளபெடை எனப்படும்.
மேலும் சில எ.கா:
1) உள்ளதூஉம் 2) அதனினூஉங்கு
சொல்லிசையளபெடை: 
செய்யுளில் ஒசை குன்றாத பொழுதும் பெயர்ச்சொல் வினையெச்சப் பொருளைத் தருவதற்காக அளபெடுப்பது சொல்லிசை அளபெடை எனப்படும்.
எ.கா: குடிதழிஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழிஇ நிற்கும் உலகு.
இக்குறட்பாவில் தழி என்றிருப்பினும் செய்யுளின் ஒசை குறைவதில்லை ‘தழீ’ என்பது தழுவுதல் எனப் பொருள் தரும்.
பெயர்ச்சொல்லாகும் அச்சொல் ‘தழ்இ’ என அளபெடுத்தால் ‘தழுவி’ என வினையெச்சச் சொல்லாயிற்று.
இசைகெடின் மொழிமுதல் இடைகடை நிலை நெடில்
அளபெடும் அவற்றவற் நினக்குறள் குறியே”
நன்னூல் – 91
அளபெடை
1. எழீஇ – சொல்லிசை அளபெடை
2. கடாஅ யானைää சாஅய் தோள் – இசைநிறை
அளபெடைகள்
3. அதனினூஉங்கு – இன்னிசை அளபெடை
அளபெடை
1. ஒரீஇ தழீஇ – சொல்லிசை அளபெடைகள்
2. தழீஇக்கொள்ள – சொல்லிசை அளபெடை
3. உறீஇ – சொல்லிசை அளபெடை
4. தாங்குறூஉம் வளர்க்குறூஉம் – இன்னிசை அளபெடைகள்
5. செய்கோ – ‘ஓ’ காரம் அசை நிலை
6. ஞான்றே – ‘ஏ’ காரம் அசை நிலை
7. தானே – ஏகாரம் பிரிநிலை
8. கள்வனோ – ஓகாரம் பிரிநிலை
9. விளைசெயம் ஆவதோ – ஓகாரம் எதிர்மறை
10. குன்றமோ பேயதோ பூதமோ ஏதோ – ஓகாரங்கள் வினாப்பொருள்
ஏகாரம்
1. யானோ அரசன் – ஓகாரம் எதிர்மறை
2. அருவினை என்ப உளவோ – ஓகாரம் எதிர்மறை
3. யானே கள்வன் – ஏகாரம் தேற்றப்பொருளில் வந்தது.
ஏகாரம்
1. செல்வர்க்கே – ஏகாரம் பிரிநிலைப் பொருளில் வந்தது
2. சீவகற்கே – ஏகாரம் தேற்றேகாரம்
3. காயமே கண்ணே – ஓகாரங்கள் தேற்றேகாரங்கள்
4. புண்ணோ இகழ் உடம்போ மெய் – ஓகாரம் எதிர்மறைகள்
அளபெடை
2. ஒற்றளபெடை
செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்வதற்குச் சொல்லிலுள்ள மெய்யெழுத்து அளபெடுத்தலை ஒற்றளபெடை என்று அழைக்கிறோம்.
எ.கா: எங்ஙகிறை வனுள னென்பாய்.
வெஃஃகுவார்க் கில்லை வீடு
இத்தொடரில் வண்ண எழுத்துகளாக உள்ள ங் என்பதும் ஃ என்பதும் இருமுறை வந்துள்ளன. இவ்வாறு ங் ஞ் ண் ந் ம் ன் வ் ய் ல் ள் ஆகிய பத்து மெய்யும். ஃ ஒன்றும் ஆகப் பதினோர் எழுத்துகளும் ஒரு குறிலை அடுத்தும் இருகுறில்களை அடுத்தும் செய்யுளில் இனிய ஓசை வேண்டி அளபெடுக்கும். இவ்வாறு அளபெடுப்பதற்கு ஒற்றளபெடை எனப்படும்.
ஙஞண நமன வயலன ஆய்தம்
அளபாம் குறிலினண குறிற்சிழிடைகடை
மிகலே யவற்றின் குறியாம் வேறே”
நன்னூல் – 92
குற்றியலுகரம்:
குற்றியலுகரம் – குறுமை+ இயல்+உகரம் (கு சு டு து பு று)
  • ஒரு மாத்திரையளவு ஒலிக்க வேண்டிய உகரம் அரை மாத்திரையளவாகக் குறைந்தொலிப்பது குற்றியலுகரமாகும். தனி நெடிலுடனோ பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம் தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும்.
  • இதனையே குற்றியலுகரம் என்பர்.
    பசு – காசு படு – பாடு அது – பந்து
  • மேற்கண்ட சொற்களில் பசு படு அது போன்ற சொற்கள் இதழ் குவிந்து நன்கு ஒலிக்கப்படுகிறது. இங்கு கு,சு,டு,து போன்ற எழுத்துக்களுக்கு ஒரு மாத்திரை அளவு.
  • ஆனால் காசு பாடு பந்து போன்ற சொற்களில் கு சு டு. து போன்ற எழுத்துக்களின் உகரம் குறைந்து ஒலிக்கப்படுகிறது. இதுவே குற்றியலுகரம் ஆகும்.
  • இங்கு கு சு டு. து ஆகிய எழுத்துக்கள் தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து அரை மாத்திரையாக ஒலிக்கிறது.
    1) தனி ஒரு குற்றெழுத்தை அடுத்து வரும் உகரம் எழுத்துகள் தனக்குரிய ஒரு மாத்திரை அளவாகவே ஒலிக்கிறது.
    (எ.கா) அது பசு படு பொது)
    2) சொல்லுக்கு முதலிலும் இடையிலும் வரும் ‘உகரம்’ தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் குறைந்து ஒலிக்காது.
    3) சொல்லுக்கு இறுதியில் வரும் வல்லினம் மெய்களை (க்,ச்,ட் த்,ப்,ற்) ஊர்ந்து உகரம் (கு,சு,டு,து,பு,று) மட்டுமே தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் குறைந்து அரை மாத்திரையாக ஒலிக்கும்.
    சொல்லின் இறுதி எழுத்தாக நிற்கும் குற்றியலுகரத்திற்கு முன் உள்ள எழுத்தை நோக்க குற்றியலுகரம் ஆறு வகையாகப் பிரிக்கப்படுகிறது.
குற்றியலுகரத்தின் வகைகள்:
குற்றியலுகரம் ஆறு வகைப்படும்
1) நெடில்தொடர்க் குற்றியலுகரம்
2) ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
3) உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
4) வன்தொடர்க் குற்றியலுகரம்
5) மென்தொடர்க் குற்றியலுகரம்
6) இடைத்தொடர்க் குற்றியலுகரம்
1) நெடில் தொடர்க் குற்றியலுகரம்:
தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் நெடில் தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.
(தனி நெடில் என்பது உயிர் நெடிலாகவும் உயிர்மெய் நெடிலாகவும் இருக்கலாம்)
எ.கா: பாகு, காசு, தோடு,காது, சோறு
2) ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்:
ஆய்த எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.
எ.கா: எஃகு அஃகு கஃசு
3) உயிர்தொடர்க் குற்றியலுகரம்:
உயிரெழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் உயிர்த் தொடர்க்குற்றியலுகரம் ஆகும்.
எ.கா: அழகு முரசு பண்பாடு எருது மரபு பாலாறு
இச்சொற்களில் வல்லின மெய்களை ஊர்ந்து வந்த உகரம் (கு சு டு. து,பு, று) உயிரெழுத்தைத் தொடர்ந்து (ழ – ழ்  அ ர – ர்  அ, பா – ப்  ஆ ரு – ர்  உ லா – ல்  ஆ) ஈற்றில் அமைந்து குறைந்து ஒலிப்பதால் குற்றியலுகரம் ஆயிரற்று.
குறிப்பு: நெடில் தொடர் குற்றியலுகரம் அமைந்த சொல் நெடிலை உடைய இரண்டு எழுத்து சொல்லாக மட்டுமே வரும்.
4) வன்தொடர் குற்றியலுகரம்:
வல்லின மெய்யெழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் வன்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
எ.கா: பாக்கு, தச்சு,தட்டு, பத்து, உப்பு, புற்று
5) மென்தொடர்க் குற்றியலுகரம்:
மெல்லின மெய்யெழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் மென்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
எ.கா: பாங்கு பஞ்சு வண்டு பந்து அம்பு கன்று
6) இடைத்தொடர்க் குற்றியலுகரம்:
இடையின மெய்யெழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் இடைத் தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.
எ.கா: மூழ்கு செய்து சால்பு சார்பு
நெடிலோடு ஆய்தம் உயிர்வலி மெலி இடைத்
தொடர்மொழி இறுதி வன்மையூ ருகரம்
அஃகும் பிறமேல் தொடரவும் பெறுமே”
நன்னூல் – 94

நான்கு வேதங்கள் தமிழில்

நான்கு_வேதங்கள்:

நான்கு வேதங்கள் தமிழில்

அவரவர் பக்கங்களில் காப்பி பேஸ்ட் செய்துகொள்ளவும்.

தேவையானோருக்கு உபயோகம் ஆகட்டும்.
-
ரிக் வேதம்
-
https://drive.google.com/file/d/1Obp3cgzXHjg4tV0HEHqRNI3ufPDGVsXW/view?usp=drivesdk
-
யஜுர்வேதம்
-
https://drive.google.com/file/d/1yw8TJq__euYkCqweXBNyGXbLHbVvnKfs/view?usp=drivesdk
-
சாம வேதம்
-
https://drive.google.com/file/d/1BvCwxGkGq_-VUuxHNmS0HO4-HjOVCzmD/view?usp=drivesdk
-
அதர்வண வேதம்
-
https://drive.google.com/file/d/1gdl8EHX1hFT0d_ohvBnluQLSGbzrstkT/view?usp=drivesdk
-


Monday, 29 July 2019

புகழ்பெற்ற நூல்களும் ஆசிரியர்களும்

புகழ்பெற்ற நூல்களும் ஆசிரியர்களும்

இங்கு கொடுக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற நூல்களும் ஆசிரியர்களும் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும்.  இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
ஐம்பெருங்காப்பியங்கள்
• சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்
• மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார்
(பௌத்த சமய நூல்)
• சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர்
• வளையாபதி – ஆசிரியர்
(சமணசமய நூல); தெரியவில்லை
• குண்டலகேசி – நாதகுத்தனார்
(பௌத்த சமய நூல்)
ஐஞ்சிறுங்காப்பியங்கள்
•யசோதர காவியம் (உயிர்க்கொலை தீது  என்பதை வலியுறுத்த – வெண்ணாவலுடையார் எழுந்த நூல்)
• உதயணகுமார காவியம் – ஆசிரியர் தெரியவில்லை
• நாககுமார காவியம் – ஆசிரியர்  தெரியவில்லை
• சூளாமணி (கவிதை நயத்தில் சிந்தாமணி – தோலாமொழித் தேவர் போன்றது
• நீலகேசி – வாமன முனிவர் (சமண சமய நூல்)
• சீவகசிந்தாமணி நரிவிருத்தம் – திருத்தக்க தேவர்
• பெருங்கதை – கொங்குவேளிர்
• கம்பராமாயணம், ஏரெழுபது, சிலை எழுபது, திருக்கை வழக்கம், சரசுவதி அந்தாதி, சடகோபரந்தாதி, இலக்குமி அந்தாதி, மும்மணிக் கோவை – கம்பர்
• பெரியபுராணம் – சேக்கிழார்
• முத்தொள்ளாயிரம் – ஆசிரியர்  தெரியவில்லை
• நந்திக்கலம்பகம் – ஆசிரியர் தெரியவில்லை
• பாரத வெண்பா – பெருந்தேவனார்
• மேருமந்தர புராணம் – வாமன முனிவர்
• வில்லி பாரதம் – வில்லிபுத்தூராழ்வார்
• இறையனார் களவியல் உரை – நக்கீரர்
• புறப்பொருள் வெண்பா மாலை – ஐயனரிதனார்
• கந்தபுராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்
• வீரசோழியம் – புத்தமித்திரர்
• சேந்தன் திவாகரம், திவாகர நிகண்டு – திவாகர முனிவர்
• பிங்கல நிகண்டு – பிங்கல முனிவர்
• உரிச்சொல் நிகண்டு – காங்கேயர்
நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்
• சூடாமணி நிகண்டு – மண்டல புருடர்
• நேமிநாதம், வச்சணந்திமாலை, பன்னிரு பாட்டியல், (வெண்பாப் பாட்டியல்) – குணவீரபண்டிதர்
• தண்டியலங்காரம் – தண்டி
•யாப்பருங்கலம், யாப்பருங்கல விருத்தி, யாப்பருங்கலக்காரிகை – அமிர்தசாகரர்
• நன்னூல் – பவணந்தி முனிவர்
• நம்பியகப்பொருள் – நாற்கவிராச நம்பி
• திருத்தொண்டர் திருவந்தாதி – நம்பியாண்டார் நம்பி
• சந்திரவாணன் கோவை, சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ் – அந்தகக்கவி வீரராகவர்
• திருவுந்தியார், திருக்களிற்றுப் பாடியார் – உய்யவந்தத் தேவர்
• சிவஞான போதம் – மெய்கண்டார்
•தில்லைக்கலம்பகம் – இரட்டைப்புலவர்கள் (இளஞ்சூரியர், முதுசூரியர்)
• வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சு விடு தூது – உமாபதி சிவாச்சாரியார்
• அரிச்சந்திர புராணம் – வீரகவிராயர்
• மச்ச புராணம் – வடமலையப்பர்
• இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய சமய நிர்ணயம், இரட்சணிய மனோகரம், இரட்சணிய குறள் – எச். ஏ. கிருட்டிணப்பிள்ளை
• திருமாலை, திருப்பள்ளியெழுச்சி – தொண்டரடிப்பொடியாழ்வார்
• திருவண்ணாமலை, திருவெண்காடு புராணம் – சைவ எல்லப்ப நாவலர்
•தொன்னூல் விளக்கம், ஞானோபதேசம், பரமார்த்த குரு கதை, சதுரகராதி, திருக்காவலூர் கலம்பகம், தேம்பாவணி – வீரமாமுனிவர்
• சீறாப்புராணம், முதுமொழிமாலை, சீதக்காதி நொண்டி நாடகம் – உமறுப்புலவர்
• நந்தனார் சரித்திரம் – கோபாலகிருட்டிண பாரதியார்
• டம்பாச்சரி விலாசம் – காசி விஸ்வநாதர்
• சைவம் பன்னிரு திருமுறைகள்
நூல்கள் – ஆசிரியர்கள்
• அகத்தியம் – அகத்தியர்
• தொல்காப்பியம் – தொல்காப்பியர்
ஐங்குநுறூறு
• குறிஞ்சித் திணை பாடியவர் – கபிலர்
• முல்லைத் திணை பாடியவர் – பேயனார்
• மருதத் திணை பாடியவர் – ஓரம்போகியார்
• நெய்தற் திணை பாடியவர் – அம்மூவனார்
• பாலைத் திணை பாடியவர் – ஓதலாந்தையார்
கலித்தொகை
• குறிஞ்சிக்கலி பாடியவர் (29 பாடல்கள்) – கபிலர்
• முல்லைக்கலி பாடியவர் (17 பாடல்கள்) – சோழன் நல்லுருத்திரன்
• மருதக்கலி பாடியவர் (35 பாடல்கள்) – மருதனில நாகனார்
• நெய்தற்கலிபாடியவர்(33பாடல்கள்) – நல்லந்துவனார்
• பாலைக்கலி பாடியவர் (35பாடல்கள்) – பெருங்கடுங்கோன்
• ஆத்திச்சூடி, ஞானக்குறள் (109 பாக்கள்), கொன்றை வேந்தன் – நல்வழி (41 பாக்கள்), மூதுரை (வாக்குண்டாம்) (31 பாக்கள்) – ஒளவையார்
• வெற்றிவேற்கை, நைடதம் – அதிவீர ராம பாண்டியன்
• அறநெறிச்சாரம் – முனைப்பாடியார்
• நன்னெறி – சிவப்பிரகாசர்
• பிரபுலிங்க லீலை, உலக நீதி – உலகநாதர்
• நளவெண்பா, நளோபாக்கியானம் – புகழேந்திப் புலவர்
பதினென்கீழ்க்கணக்கு நூல்களும் பாடியோரும்
•திருவருட்பா, ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்,ஒழிவிலொடுக்கம், தொண்டமண்டல சதகம், சின்மய தீபிகை  – வள்ளலார் இராமலிங்க அடிகளார்
• மாறன் அகப்பொருள், மாறனலங்காரம் – திருக்குருகைப் பெருமாள்
• வேதாரணியப் புராணம், திருவிளையாடற் போற்றி கலிவெண்பா, சிதம்பரப்பாட்டியல், திருவிளையாடற் புராணம், மதுரை பதிற்றுப் பத்தந்தாதி – பரஞ்சோதி முனிவர்
• இலக்கண விளக்கப் பட்டியல் – வைத்தியநாத தேசிகர்
• மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை குறம், இரட்டை மணிமாலை, முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், காசிக்கலம்பகம்ää சகலகலா வள்ளிமாலை, கந்தர் கலிவெண்பா, மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணிமாலை, சிதம்பர மும்மணிக்கோவை, சிதம்பர செய்யுட்கோவை – குமரகுருபரர்
• கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்
• திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் – பகழிக்கூத்தர்
• சேக்கிழார் பிள்ளைத்தமிழ் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை
• இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், தக்கயாகப் பரணி, மூவருலா – ஒட்டக்கூத்தர்
• கலிங்கத்துப் பரணி, இசையாயிரம், உலா, மடல்  – செயங்கொண்டார்
• திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள்  – காரைக்காலம்மையார்
• திருக்குற்றாலநாத உலா, குற்றாலக் குறவஞ்சி  – திரிகூட ராசப்பக் கவிராயர்
• அழகர் கிள்ளை விடு தூது, தென்றல் விடு தூது – பலபட்டைச் சொக்கநாதப் புலவர்
• திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கை உலா – சிவப்பிரகாசர்
• திருவரங்கக் கலம்பகம், திருவேங்கடந்தந்தாதி அஷ்டப்பிரபந்தம் – பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
• நாரை விடு தூது – சத்தி முத்தப் புலவர்
• காந்தியம்மை பிள்ளைத்தமிழ், காந்தியம்மை அந்தாதி – அழகிய சொக்கநாதர்
• சுகுண சுந்தரி – முன்சீப் வேதநாயகம் பிள்ளை
• அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ், இலக்கண விளக்க சூறாவளி – சிவஞான முனிவர்
• கலைசைக் கோவை, கலைசைச் சிதம்பரேசர் பரணி, கலைசைச் சிலேடை வெண்பா, திருவாடுதுறை கோவை, சிவஞான முனிவர் துதி – தொட்டிக் களை சுப்பிரமணிய முனிவர்
• குசேலோபாக்கியானம் – வல்லூர் தேவராசப் பிள்ளை
• திருக்கோவையார் – மாணிக்கவாசகர்
• தஞ்சைவாணன் கோவை – பொய்யாமொழிப் புலவர்
• முக்கூடற்பள்ளு – என்னெயினாப் புலவராக இருக்கலாம்
• சேது புராணம் – நிரம்பவழகிய தேசிகர்
• இராம நாடகக் கீர்த்தனை – அருணாச்சலக் கவிராயர்
• மனோன்மணியம் – பெ. சுந்தரம்பிள்ளை
• திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் – கால்டுவெல்
• பெண்மதி மாலை, சர்வ சமயக் கீர்த்தனைகள், பிரதாப முதலியார் சரித்திரம், நீதிநூல் திரட்டு, சுகுண சுந்தரி சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை
• கமலாம்பாள் சரித்திரம் – ராஜம் ஐயர்
•ரூபாவதி, கலாவதி, மானவிஜயம், நாடகவியல் – பரிதிமாற்கலைஞர்
•வள்ளித்திருமணம், கோவலன் சரித்திரம், சதி சுலோச்சனா, இலவகுசா, பக்த பிரகலாதா, நல்லதங்காள், வீர அபிமன்யுää பவளக் கொடி – சங்கரதாஸ் சுவாமிகள்
• மனோகரா, யயாதி, சிறுதொண்டன், கர்ணன், சபாபதி, பொன் விலங்கு – பம்மல் சம்பந்தனார்
• இரட்டை மனிதன், புனர் ஜென்மம், கனகாம்பரம் விடியுமா? – கு.ப. ராஜகோபாலன்
• கடவுளும் சந்தசாமிப் பிள்ளையும், காஞ்சனை, பொன்னகரம், அகல்யை, சாப விமோசனம் – புதுமைப்பித்தன்
• மீனாட்சி சுந்தரம்பிள்ளை சரித்திரம், புதியதும் பழையதும், கண்டதும் கேட்டதும், நினைவு மஞ்சரி, என் சரிதம் – உ.வே. சாமிநாத அய்யர்
• கருணாமிர்த சாகரம் – தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
• பெத்லேகம் குறிஞ்சி – வேதநாயக சாஸ்திரி
• நாக நாட்டரசி, கோகிலம்பாள் கடிதங்கள் – மறைமலையடிகள்
•மோகமுள், அன்பே ஆரமுதே, அம்மா வந்தாச்சு, மரப்பசு, நளப்பாகம் – தி. ஜானகிராமன்
• இராவண காவியம், தீரன் சின்னமலை, சுரமஞ்சரி, நெருஞ்சிப்பழம் – புலவர் குழந்தை
• ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், புதிய வார்ப்புகள், ஒரு பிடிச் சோறு, பாரீசுக்குப் போ, குருபீடம், சினிமாவுக்குப் போன சித்தாளு யுகசாந்தி, புது செருப்பு கடிக்கும், அக்னிப் பிரவேசம், உன்னைப்போல் ஒருவன் – ஜெயகாந்தன்
• பொய்த்தீவு, ஒருநாள், வாழ்ந்தவர் கெட்டால்  – க.நா. சுப்ரமணியம்
• சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், அலை ஓசை, கள்வனின் காதலி, தியாகபூமி, மகுடபதி, அமரதாரா, திருடன் மகன் திருடன் – கல்கி
• அகல் விளக்கு, பெற்ற மனம், கள்ளோ காவியமோ, கரித்துண்டு, நெஞ்சில் ஒரு முள், தம்பிக்கு, தமிழ் இலக்கிய வரலாறு, கயமை, பாவை, வாடா மலர், செந்தாமரை, மண்குடிசை, குறட்டை ஒலி
– மு. வரதராசனார்
• புத்ர, அபிதா – லா. சு. ராமாமிர்தம்
• குறிஞ்சி மலர், சமுதாய வீதி, துளசி மாடம், பொன் விலங்கு, பாண்டிமா தேவி, மணி பல்லவம், வலம்புரிசங்கு – நா. பார்த்தசாரதி
• அண்ணாமலை வீரையந்தாதி, சங்கரன் கோயில் திரிபந்தாதிää கருவை மும்மணிக்கோவை – அண்ணாமலை ரெட்டியார்
•பாவை விளக்கு, சித்திரப்பாவை, எங்கே போகிறோம்? வேங்கையின் மைந்தன் வெற்றித் திருநகர், புதுவெள்ளம், பொன்மலர், பெண் – அகிலன்
• நெஞ்சின் அலைகள், மிஸ்டர் வேதாந்தம், கரிசல், புதிய தரிசனங்கள் – பொன்னீலன்
• கிருஷ்ண பருந்து – ஆ. மாதவன்
• பத்மாவதி சரித்திரம், விஜயமார்த்தாண்டம் – மாதவ அய்யர்
• உதய சந்திரன், நந்திபுரத்து நாயகி, காஞ்சி சுந்தரி – விக்கிரமன்
• தவப்பயன், புது உலகம், அன்பளிப்பு, சிரிக்கவில்லை, காலகண்டி – கு. அழகிரிசாமி
• ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள் – சுந்தர ராமசாமி (பசுவய்யா)
• குறிஞ்சித் தேன், வேருக்கு நீர், கரிப்பு மணிகள் – ராஜம் கிருஷ்ணன்
• தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம் – நீல பத்மநாபன்
• குருதிப்புனல், சுதந்திர பூமி, தந்திர பூமி, வேதபுரத்து வியாபாரிகள் – இந்திரா பார்த்த சாரதி
• புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால்  – ப. சிங்காரம்
• நாளை மற்றுமொரு நாளே, குறத்தி முடுக்கு  – ஜி. நாகராஜன்
• நாய்கள் – நகுலன்
• தேசபக்தன் கந்தன், முருகன் ஓர் உழவன் – வேங்கடரமணி                    • பதினெட்டாவது அட்சக்கோடு, இருட்டிலிருந்து வெளிச்சம், கரைந்த நிழல்கள், நண்பனின் தந்தை  – அசோகமித்திரன்
• சாயாவனம், தொலைந்து போனவர்கள்  – சா. கந்தசாமி
• ஸீரோ டிகிரி – சாரு நிவேதிதா
• ரங்கோன் ராதா, பார்வதி பி.ஏ. நிலையும் நினைப்பும், ஏ? தாழ்ந்த தமிழகமே, ஓர் இரவு, ஆரிய மாயை, வேலைக்காரி, தசாவதாரம், நீதி தேவன் மயக்கம், செவ்வாழை – அறிஞர் அண்ணா
• குறளோவியம், பராசக்தி, தொல்காப்பியப் பூங்கா, பொன்னர் சங்கர், தென்பாண்டிச் சிங்கம், இரத்தம் ஒரே நிறம், வெள்ளிக்கிழமை, சங்கத்தமிழ், ரோமாபுரிப் பாண்டியன், பூம்புகார், மந்திரிகுமாரி – கலைஞர் கருணாநிதி
• அர்த்தமுள்ள இந்துமதம், கல்லக்குடி மாகாவியம், இராசதண்டனை, ஆயிரம்தீவு, அங்கையற்கண்ணி, வேலங்குடித் திருவிழா, ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, இயேசு காவியம், சேரமான் காதலி, வனவாசம் மனவாசம் – கண்ணதாசன்
• முள்ளும் மலரும் – உமாசந்திரன்
• உயிரோவியம் – நாரண. துரைக்கண்ணன்
• கல்லுக்குள் ஈரம் – ரா.சு. நல்லபெருமாள்
• வாஷிங்டனில் திருமணம் – சாவி
• ஸ்ரீரங்கத்து தேவதைகள், கரையெல்லாம் செண்பகப்பூ, யவனிகா, இரத்தம் ஒரே நிறம் – சுஜாதா
• மெர்க்குரிப் பூக்கள், இரும்புக் குதிரை, உடையார் – பாலகுமாரன்
• மானுடம் வெல்லும், மகாநதி, சந்தியா – பிரபஞ்சன்
• நந்திவர்மன் காதலி, மதுரயாழ் மங்கை, ஆலவாய் அழகன் – ஜெகச்சிற்பியன்
• வீரபாண்டியன் மனைவி – அரு. ராமநாதன்
• இன்னொரு தேசிய கீதம், கவிராசன் கதை, கள்ளிக்காட்டு இதிகாசம், தண்ணீர் தேசம், கருவாச்சி காவியம், வில்லோடு வா நிலவே, வைகறை மேகங்கள், திருத்தி எழுதிய தீர்ப்புகள் – கவிஞர் வைரமுத்து
• பால்வீதி, ஆலாபனை, சுட்டு விரல், நேயர் விருப்பம், பித்தன் – அப்துல் ரகுமான்
• கண்ணீர்ப்பூக்கள், சோழநிலா, ஊர்வலம் – மு. மேத்தா
• கருப்பு மலர்கள் சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள், கல்லறைத் தொட்டில் – நா. காமராசன்
• கனவுகள் ⁺ கற்பனைகள் ₌ காகிதங்கள் – மீரா (மீ. ராஜேந்திரன்)
• ஞான ரதம், சந்திரிகையின் கதை, தராசு, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் – பாரதியார்
• கண்ணகி புரட்சி காப்பியம், பிசிராந்தையார், தமிழ் இயக்கம், குடும்ப விளக்குää இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, எதிர்பாராத முத்தம், கதர் இராட்டினப் பாட்டு, சஞ்சீவி பர்வதத்தின் சாரல், பாண்டியன் பரிசு, முதியோர் காதல், குறிஞ்சித் திரட்டு, படித்த பெண்கள், இசையமுது, மணிமேகலை வெண்பா, இளைஞர் இலக்கியம் – பாரதிதாசன்
• தேன்மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும், உதட்டில் உதடு, சாவின் முத்தம் – சுரதா
• ஊரும் பேரும் – ரா.பி. சேதுப்பிள்ளை
• தேவியின் கீர்த்தனைகள், மலரும் மாலையும், மருமக்கள் வழி மான்மியம், ஆசிய ஜோதி, குழந்தை செல்வம், உமர் கய்யாம் பாடல்கள் – கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
• கோவேறு கழுதைகள் – இமயம்
• மலைக்கள்ளன், தமிழன் இதயம், சங்கொலி, அவனும் அவளும், என் கதை, கவிதாஞ்சலி, காந்தி அஞ்சலி, தமிழ் வேந்தன், அன்பு செய்த அற்புதம் – நாமக்கல் கவிஞர். வே. ராமலிங்கம்பிள்ளை
• முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை, சீர்திருத்தம், கிறித்துவின் அருள் வேட்டல், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
– திரு.வி. கல்யாணசுந்தரனார்
• யவனராணி, கடல்புறா, மலைவாசல், இராசநிலம் ஜலதீபம், இராஜபேரிகை – சாண்டில்யன்
• காந்தார்ச்சாலை, கொல்லிமலைச் செல்வி – பூவண்ணன்
• மதங்க சூளாமணி, யாழ்நூல் – சுவாமி விபுலாநந்தர்
• வியாசர் விருந்து, சக்கரவர்த்தி திருமகள், சபேசன் – இராஜாஜி
• திருவந்தாதி – நம்பியாண்டார் நம்பி
• எழிலோவியம், குழந்தை இலக்கியம், தமிழச்சி, தொடு வானம் – வாணிதாசன்
• மலரும் உள்ளம், சிரிக்கும் பூக்கள், நேருவும் குழந்தைகளும் – அழ. வள்ளியப்பா
• கரமுண்டார் வீடு – தஞ்சை பிரகாஷ்
• காடு, பின்தொடரும் நிழலின் குரல், கன்னியாகுமரி, ஏழாவது உலகம், மண், விஷ்ணுபுரம், கொற்றவை – ஜெயமோகன்
• நெடுங்குருதி, உப பாண்டவம் – எஸ். ராமகிருஷ்ணன்
• புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு – தாரா பாரதி
• பூத்தது மானுடம், புரட்சி முழக்கம், உரை வீச்சு – சாலை இளந்திரையன்
• வாழும் வள்ளுவம், பாரதியின் அறிவியல் பார்வை – வா. செ. குழந்தைசாமி

இலக்கிய வகைச் சொற்கள்

இலக்கிய வகைச் சொற்கள்


இங்கு கொடுக்கப்பட்டுள்ள இலக்கிய வகைச் சொற்கள் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
இலக்கிய வகையால் சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். 
  • இயற்சொல்
  • திரிச்சொல்
  • திசைச்சொல்
  • வடசொல்
இயற்சொல்:
கற்றவர், கல்லாதவர் என அனைவருக்கும் எளிதில் பொருள் விளங்கும்படி அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்.
இயற்சொல் – இயல்பான சொல்.
எ.கா: பறவை, பூனை, மனிதன், மாமரம், பூ
இயற்சொல் இரு வகைப்படும்.
1) பெயர் இயற்சொல்
2) வினை இயற்சொல்
1) பெயர் இயற்சொல்:
எளிதில் பொருள் உணர்த்தும் பெயர்ச்சொற்கள் பெயர் இயற்சொல்எனப்படும்.
(எ.கா) காற்று, நிலவு, ஞாயிறு, பலகை
2) வினை இயற்சொல்:
எளிதில் பொருள் உணருமாறு அமைந்துள்ள வினைச்சொற்கள் வினை இயற்சொல்எனப்படுமு;.
(எ.கா) படித்தான், தூங்கினான், வந்தான், சிரித்தான், பறந்தது மேய்ந்தன.
திரிசொல்:
இயல்பு நிலையிலிருந்து மாறி கற்றவர் மட்டுமே அறிந்து கொள்ளும் வகையில் அமைந்த சொற்களைத் திரிச்சொற்கள்என்று கூறுவர்.
(எ.கா) பீலி – மயில்தொகை
உகிர் – நகம்
ஆழி – கடல்
தத்தை – கிளி
புனல் – நீர்;
ஞாலம் – உலகம்
திரிசொல் இரு வகைப்படும்
1) பெயர்த்திரிசொல்
2) வினைத் திரிசொல்
1) பெயர்த்திரிசொல்:
எளிதில் உணர முடியாது, கற்றவர்க்கு மட்டுமே பொருள் விளங்குமாறு அமைந்த பெயர்ச்சொல் ‘பெயர்த்திரிசொல்’ ஆகும்.
(எ.கா) எயில் – மதில்
நல்குரவு – வறுமை
கழை – மூங்கில்
கிழமை – உரிமை
மடி – சோம்பல்
பெயர்த்திரிசொல் இரு வகைப்படும்.
i. ஒரு பொருள் குறித்த பல பெயர்த்திரிசொல்
ii. பல பொருள் குறித்த ஒரு பெயர்த்திரிசொல்
ஒரு பொருள் குறித்த பல பெயர்த்திரிசொல்:
கமலம், கஞ்சம் முண்டகம் முளரி இவை யாவும் “தாமரை” என்னும் ஒரே பொருளை உணர்த்துகின்றன. இவ்வாறு கற்றவர்க்கு மட்டுமே பொருள் விளங்குமாறு அமைத்து ஒரே பொருளை உணர்த்தும் பல சொற்களை ஒரு பொருள் குறித்த பல பெயர்த்திரிசொல் என்று அழைக்கிறோம்.
எ.கா:
வேழம் வாரணம் கழை ஆகிய சொற்கள் “யானை” யைக் குறிக்கும்.
பல பொருள் குறித்த ஒரு பெயர்த்திரிசொல்:
ஆவி இச்சொல் உயிர் பேய் மெல்லிய புகை ஆகிய பல சொற்களை உணர்த்துகின்றது. அரிதில் பொருள் விளங்கும் இப்பெயர்ச்சொல் பல பொருள்களைத் தருவதால் அதனைக் பல பொருள் குறித்த ஒரு பெயர்த்திரிசொல் என்று அழைக்கிறோம்.
எ.கா:
ஆவணம் – முறிச்சீட்டு, கடைத்தெரு, அடிமைத்தனம்
2) வினைத்திரிசொல்:
கற்றவருக்கு மட்டுமே பொருள் விளங்கும் வகையில் அமைந்த வினைச்சொல் வினைதிரிசொல் எனப்படும்.
எ.கா: வினவினான் விளித்தான் நோக்கினான்.
வினைத்திரிசொல் இரு வகைப்படும்.
i. ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொல்
ii. பல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல்
ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொல்:
செப்பினான் உரைத்தான், மொழிந்தான் இயம்பினான் இவை கற்றவர்க்கு மட்டுமே விளங்கும் வகையில் அமைந்த வினைச்சொற்களாகும். எனவே இவை வினைத் திரிசொல் என வழங்கப்படும். இச்சொற்கள் அனைத்தும் ஒரு பொருளையே தருவதால் இவற்றை ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொல் என்பர்.
பல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல்:
வீசு இந்த வினைச்சொல் எறி, சிதறடி, பரவச்செய், ஆட்டு என்னும் பல பொருட்களை உணர்த்துகின்றது. இது கற்றவர்கள் மட்டுமே அறியும் சொல்லாகும். இதனைப் பல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல் ஆகும்.
திசைச்சொல்:
வடமொழி அல்லாத பிறமொழிச் சொற்கள் அம்மொழிகளில் எவ்வெப்பொருளில் வழங்குகின்றனவோ அவ்வப் பொருளிலேயே தமிழிலும் வந்து வழங்குவதைத் திசைச் சொற்கள் என்கிறோம்.
தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள பிற பகுதிகளிலிருந்து தமிழில் வழங்கும் திசைச்சொற்கள்
i. கேணி – (கிணறு)
ii. பெற்றம் – (பசு)
iii. அச்சன் – (தந்தை)
iv. கடிதாசி – (கடிதம்)
v. தள்ளை – (தாய்)
vi. சாவி – (திறவு கோல்)
vii.அசல் – (மூலம்)
viii. கோர்ட் – (நீதிமன்றம்)
ix.இலாகா – (துறை)
வடசொல்:
வடமொழிச் (சமஸ்கிருதம்) சொற்கள் திரிந்தும், திரியாமலும் தமிழ் மொழியில் வந்து வழங்குமானால் அவை “வடச்சொற்கள்”எனப்படும்.
கமலம், விஷம், புஷ்பம் இவை தமிழில் வந்து வழங்கினாலும் தமிழ்சொற்கள் அல்ல வடமொழிச் (சமஸ்கிருதம்) சொற்கள்.
எ.கா: கமலம் – தாமரை
விஷம் (அ) விடம் – நஞ்சு
புஷ்பம் (புட்பம்) – மலர்
அர்ச்சனை – மலரிட்டு வழிபடுதல்
சுதந்திரம் – விடுதலை
விவாகம் – திருமணம்

சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்

சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்
இங்கு கொடுக்கப்பட்டுள்ள சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
1. எழுவாய் பயனிலை அமைப்பு: 
எழுவாய் முதலில் வரும் அடுத்து பயனிலை வரும் எழுவாயும், பயனிலையும் பால், இடம் ஒத்து இருத்தல் வேண்டும்.
நான் வந்தேன் நாம் வந்தோம், நாங்கள் வந்தோம், நீ வந்தாய், நீர் வந்தீர், நீங்கள் வந்தீர்ஃகள் அவன் வந்தான், அவள் வந்தாள், அவர் வந்தார், அது வந்தது, அவை வந்தன.
வண்டி ஓடும் வண்டிகள் ஓடும்
மரம் விழும், மரங்கள் விழும்
எழுத்தறிவித்தவன், இறைவன் ஆகும்
நாட்டை ஆண்டவன் அரசன் ஆகும்.
செய்யும் என்னும் வாய்பாட்டில் அமையும் வினைகள் ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின்பால், போன்ற நான்கு பாலுக்கும் வரும்.
தன்மை, முதனிலை, படர்க்கை (பலர்பால்) இவற்றில் செய்யும் என்னும் வாய்பாடு முற்று வராது.
வண்டி ஓடியது வண்டிகள் ஓடின.
பறவை பறந்தது பறவைகள் பறந்தன.
குதிரை மேய்ந்தது குதிரைகள் மேய்ந்தன.
2. எழுவாய் செயப்படுபொருள் பயனிலை அமைப்பு: 
இராமன் வில்லை வளைத்தான் – எனத் தொடர் அமையும்.
3. தொகுதி பெயர் :  ஒன்றன் பால்விகுதிபெறும்
ஊர் சிரித்தது
உலகம் அழுதது.
4. பெயரெச்சத்தின் முடிவில் பெயர்வரும்:
இன்று வந்த மழைக்காலம் என அமையும்.
இன்று மழை வந்த காலம் எனத் தொடர் அமையாது. கோயிலுக்குப் போன மாலா திரும்பினாள் என அமையும்.
5. வினையெச்சத்தை அடுத்து வினை வரும்: 
(வினையெச்சத்தில் அடைச்சொற்கள் சில வரும்)
முருகன் வந்து போனான், முருகன் வேகமாக வந்து போனான்.
6. செயப்படு பொருளும் வினையெச்சமும் வரும் போது முதலில் செயப்படு பொருள் வரும்: 
இராமன்/ வில்லை / வளைத்துப் / புகழ் / பெற்றான்.
அவன் / பெண்ணைக் / கொடுத்துத் / திருமணம் செய்வித்தான்.
முருகன் / அரக்கனை /அழித்து / வெற்றி / பெற்றான்.
நான் / பணத்தைக் / கொடுத்துப் / பழம் / வாங்கினேன்.
நான் பணம் கொடுத்துப் பழம் வாங்கினேன் என்று அஃறிணையில் ‘ஐ’ மறைந்தும் வரும்.
7. பெயரடை சிதறாது /பெயரை விட்டு விலகாது: 
நான் நேற்று நல்ல பையனைப் பார்த்தேன் (பெயரை – மத்தியில் எதுவும் வராது)
நான் நேற்று (என்வீட்டிற்குப் பக்கத்திலிருந்த குடியிருந்த நல்ல பையனைப்) பார்த்தேன்.
நான் கடையில் (திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறளை) வாங்கினேன்.
பெட்டியில் உள்ள சொற்கள் சிதறாது.
8. வேற்றுமை உருபுகள்: (2 – ஐ, 3-ஆல், 4-கு, 5-இன், 6-அது, 7-கண்)
அ) 2 – 3  நான் முருகனைப் பார்த்தேன்
நான் முருகனைக் கண்ணால் பார்த்தேன்
என இரண்டாம் வேற்றுமை உருபு முதலில் வந்து மூன்று வேற்றுமை உருபு அடுத்து வரும்.
ஆ) 4 – 2 – 3  கு – ஐ – ஆல்
தாய் குழந்தைக்கு உணவைக் கையால் ஊட்டினாள்
இ) 4 – 2 – 7  கு – ஐ – கண் (இடம்)
இராமனுக்கு புத்தகத்தை கடையில் வாங்னேன்
ஈ) 3 – 2 – 3  ஆல் – ஐ – ஆல்
கண்ணால் பார்த்தவனைக் கையால் அடித்தேன்
9. விளிச்சொல் முதலில் நிற்கும்:
இராமா இங்கே வா (சரியானது)
இங்கே வா இராமா (தவறானது)

Saturday, 27 July 2019

பெயர்ச்சொல்லின் வகையறிதல்

பெயர்ச்சொல்லின் வகையறிதல்


இங்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர்ச்சொல்லின் வகையறிதல் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
1. பெயர்ச்சொல்: பெயரையும் இடத்தையும் குறித்து வந்தால் பெயர்ச்சொல் எனப்படும்.
2. வினைச்சொல்: பொருட்களின் செயலை இயக்கத்தை தொழிலை வினையை உணர்த்தும் சொற்கள் வினைச்சொல்எனப்படும்.
3.இடைச்சொல்: பெயர்ச்சொல் வினைசொற்களை இடமாகக் கொண்டு வருவதையே இடைச்சொல்என்றழைக்கிறோம்.
வேற்றுமை உருபுகள் உவம உருபுகள் சுட்டு எழுத்துக்கள் வினா எழுத்துக்கள் மற்றும் ஏகாரம் ஒளகாரம் உம்மை போன்றவை இடைச்சொற்களாக வரும்.
எ.கா:
நூலைப் படித்தான் – (வேற்றுமை உருபு)
மக்கள் மகிழ்ந்தனர் – அர் (விகுதி)
தேன் போன்ற மொழி – போன்ற (உவமஉருபு)
அவ்வீடு இது – அ, இ
(சுட்டெழுத்துகள்)
உணவும் உடையும் – உம் (உம்மை)
படித்தாயா? – ஆ (வினா எழுத்து)
கழி உவகை (மிகுந்த மகிழ்ச்சி) கழி
4. உரிச்சொல்: பெயர் வினைச்சொற்களைச் சார்ந்து அவற்றின் குணத்தை உணர்த்தி வரும் சொற்கள் உரிச்சொற்கள் எனப்படும்.
எ.கா: மாநகர் மாமன்னர்
சாலப் பெரிது (மிகப்பெரிது) – சால
உறு பொருள் (மிகுந்த பொருள்) – உறு
தவச்சிறிது (மிகவும் சிறிது) – தவ
நனி பேசினான் (மிகுதியாகப் பேசினான்) – நனி
இடும்பை கூர் வயிறு (துன்பம் மிக்க வயிறு) – கூர்கழி உவகை (மிகுந்த மகிழ்ச்சி) – கழி
மேற்கண்ட சொற்றொடர்களில் உள்ள சால உறு தவ நனி கூர் கழி என்னும் சொற்கள் “மிகுதி” என்னும் குணத்தை உணர்த்திய பெயர்ää வினைகளுக்கு உரிமை பூண்டு வந்துள்ளன. எனவே இவை உரிச்சொல்கள் எனப்படுகின்றன.
சால உறு தவ நனி கூர் கழி என்பன மிகுதி என்னும் ஒரு பொருளையே உணர்த்துகின்றன. எனவே இவை ஒரு குணம் தழுவிய பல உரிச்சொற்கள் ஆகும்.
எ.கா:
கடிநிகர் – காவல் உடைய நகரம்
கடிவேல் – கூர்மையான வேல்
கடிமுரசு – ஆர்கும் முரசு
கடி காற்று – மிகுதியான காற்று
கடி மலர் – மணம் உள்ள மலர்
உரிச்சொற்றொடர்
1. மாநகர் – உரிச்சொற்றொடர்
2. தடந்தேள் – உரிச்சொற்றொடர்
3. மாபத்தினி – உரிச்சொற்றொடர்
4. கடுமா – உரிச்சொற்றொடர்
உரிச்சொல்
 மாநகர் – உரிச்சொற்றொடர்
 தடந்தேள் – உரிச்சொற்றொடர்
 மல்லல் நெடுமதில் – உரிச்சொற்றொடர்
 இரு நிலம் – உரிச்சொற்றொடர்
உரிச்சொல்
1. தடக்கை – உரிச்சொற்றொடர்
2. நனி விதைத்து – உரிச்சொற்றொடர்
3. உறுவேனில் – உரிச்சொற்றொடர்
4. மல்லல் அம் குருத்து – உரிச்சொற்றொடர்
5. நனிகடிது – உரிச்சொல் தொடர்கள்
6. நளிர்கடல் – உரிச்சொல் தொடர்கள்
7. நனி மனம் – பெயர் உரிச்சொல்
8. மல்லல் – ‘வளப்பம்’ என்னும்
பொருளைத் தரும் உரிச்சொல்
உரிச்சொல்
1. விழுப்பொருள் – உரிச்சொற்றொடர்
2. வயமா – உரிச்சொற்றொடர்
3. தடங்கண் – உரிச்சொற்றொடர்
4. கடிநிறை – உரிச்சொற்றொடர்
5. தடம் தோள் – உரிச்சொல்
பல குணம் தழுவிய ஓர் உரிச்சொல்:  ஒரு தொடரில் ‘கடி’ என்னும் உரிச்சொல் காவல் கூர்மை விளைவு மிகுதி மணம் என்னும் பல பொருள்களை உணர்த்தியுள்ளது. எனவே ‘கடி’ என்னும் பலகுணம் தழுவிய ஒரு உரிச்சொல்லாகும்.

Thursday, 25 July 2019

பொது தமிழ் – பொருந்துதல் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்

 பொருந்துதல் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்



இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தொகுதிகளும் முக்கியமான பொது தமிழ்குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

அ – வரிசை

 அணியர் – நெருங்கி இருப்பவர்
 அணையார் – போன்றார்
 அளைஇ – கலந்து
 அகன் – அகம், உள்ளம்
 அமர் – விருப்பம்
 அமர்ந்து – விரும்பி
 அகத்தான் ஆம் – உள்ளம் கலந்து
 அணி – அழகுக்காக அணியும் நகைகள்
 அல்லவை – பாவம்
 அற்று – அது போன்று
 அல்லைத்தான் – அதுவும் அல்லாமல்
 அன்ன – அவை போல்வன
 அகம் – உள்ளம்
 அமையும் – உண்டாகும்
 அறிகை – அறிதல் வேண்டும்
 அல்லல் – துன்பம்
 அளகு – கோழி
 அரவு – பாம்பு
 அரவம் – பாம்பு
 அரம் – வாளைக் கூர்மையாக்கும் கருவி
 அமுத கிரணம் – குளிர்ச்சியான ஒளி
 அலகு இல் – அளவில்லாத
 அலகிலா – அளவற்ற
 அன்னவர் – அத்தகைய இறைவர்
 அகழ்வாரை – தோண்டுபவரை
 அடவி – காடு
 அரம்பையர் – தேவ மகளிர்
 அளவின்று – அளவினையுடையது
 அவி உணவு – தேவர்களுக்கு வேள்வியின் பொழுது கொடுக்கப்படும்  உணவு
 அற்றே – போன்றதே
 அனைத்தாலும் – கேட்ட அத்துணை அளவிலும்
 அவியினும் – இறந்தாலும்
 அரு – உருவமற்றது
 அலகில – அளவற்ற
 அகன்று – விலகி
 அயலார் – உறவல்லாதோர்
 அழுக்காறு – பொறாமை
 அருவிணை – செய்தற்கரிய செயல்
 அடர்த்து எழு குருதி – வெட்டுப்பட்ட  இடத்தினின்றும் பீறிட்டு ஒழுகும் செந்நீர்
 அம்பி – படகு
 அல் – இருள்
 அடிமை செய்குவென் – பணி செய்வேன்
 அமலன் – குற்றமற்றவன்
 அரி – நெற்கதிர்
 அம் – அழகிய
 அரா – பாம்பு
 அல்லல் – துன்பம்
 அங்கை – உள்ளங்கை
 அங்கணர் – அழகிய நெற்றிக்கண்ணையுடைய சிவன்
 அரியாசணம் – சிங்காசணம்
 அறைகுவன் – சொல்லுவான்
 அணித்தாய் – அண்மையில்
 அடவி – காடு
 அலறும் – முழங்கும்
 அணிந்து – அருகில்
 அறைந்த – சொன்ன
 அதிசயம் – வியப்பு

ஆ – வரிசை

 ஆர்வம் – விருப்பம்
 ஆற்றவும் – நிறைவாக
 ஆற்றுணா – ஆறு – உணா
 ஆறு – வழி
 ஆடவர் – ஆண்கள்
 ஆர்கலி – நிறைந்த ஓசையுடைய கடல்
 ஆடுபரி – ஆடுகின்ற குதிரை
 ஆழி – மோதிரம்
 ஆனந்தம் – மகிழ்ச்சி
 ஆறு – நல்வழி
 ஆழி – கடல்
 ஆழி – உப்பங்கழி
 ஆன்ற – உயர்ந்த
 ஆன்றோர் – கல்வி, கேள்வி, பண்பு ஆகியவற்றில் சிறந்தோர்
 ஆர் அவை – புலவர்கள் நிறைந்த அவை
 ஆக்கம் – செல்வம்
 ஆயகாலை – அந்த நேரத்தில்

இ – வரிசை

 இன்சொல் – இனிய சொல்
 இன்சொலன் – இனிய சொற்களைப் பேசுபவன்
 இன்சொலினதே – இனிய சொற்களைப் பேசுதலே
 இன்புறாஉம் – இன்பம் தரும்
 இன்மை – இப்பிறவி
 இரட்சித்தாணா – காப்பாற்றினானா
 இணக்கவரும்படி – அவர்கள் மனம் கனியும் படி
 இல்லார் – செல்வம் இல்லாதவர்
 இடித்தல் – கடிந்துரைத்தல்
 இடுக்கண் – துன்பம்
 இசைந்த – பொருத்தமான
 இருநிலம் – பெரிய உலகம்
 இகழ்வார் – இழிவுபடுத்துவோர்
 இறப்பினை – பிறர் செய்த துன்பத்தை
 இறைந்தார் – நெறியைக் கடந்தவர்
 இன்னா – தீய
 இன்னாசொல் – இனிமையற்ற சொல்
 இழைத்துணர்ந்து – நுட்பமாக ஆராய்ந்து
 இடர் – இன்னல்
 இன்னா – தீங்கு
 இனிய – நன்மை
 இன்மை – வறுமை
 இளிவன்று – இழிவானதன்று
 இருநிலம் – பெரிய நிலம்
 இசைபட – புகழுடன்
 இரந்து செப்பினான் – பணிந்து வேண்டினான்
 இன்னல் – துன்பம்
 இறைஞ்சி – பணிந்து
 இழக்கம் – ஒழுக்கம் இல்லாதவர்
 இடும்பை – துன்பம்
 இகல் – பகை
 இறுவரை – முடிவுக்காலம்
 இயைந்தக்கால் – கிடைந்தபொழுது
 இமையவர் – தேவர்
 இறையோன் – தலைவன்
 இனிதின் – இனிமையானது
 இன்னல் – துன்பம்
 இருத்தி – இருப்பாயாக
 இந்து – நிலவு
 இடர் – துன்பம்
 இழக்கும் – கடிந்துரைக்கும்
 இடிப்பார் – கடிந்து அறிவுரை கூறும் பெரியார்
 இருள் – பகை
 இரண்டும் – அறனும் இன்பமும்
 இடர் – துன்பம்
 இரும்பணை – பெரிய பனை
 இவண் நெறியில் – இவ்வழியில்
 இனை – சுற்றம்
 இளைப்பாறுதல் – ஓய்வெடுத்தல்

ஈ – வரிசை

 ஈனும் – தரும்
 ஈன்றல் – தருதல் உண்டாக்குதல்
 ஈயும் – அளிக்கும்
 ஈரிருவர் – நால்வர்
 ஈதல் – கொடுத்தல்
 ஈயப்படும் – அளிக்கப்படும்
 ஈர்த்து – அறுத்து
 ஈண்டிய – ஆய்ந்தளித்த

உ – வரிசை

 உன்னி – நினைத்து
 உரும் – இடி
 உறுவை – புலி
 உல்குபொருள் – வரியாக வரும் பொருள்
 உறுபொருள் – அரசு உரிமையாளர் வரும்பொருள்
 உறா அமை – துன்பம் வராமல்
 உதிரம் – குருதி
 உன்னேல் – நினைக்காதே
 உண்டனென் – உண்டோம் என்பதற்கு சமமானது
 உபகாரத்தான் – பயன் கருதாது உதவுபவன்
 உள்வேர்ப்பர் – மனத்தினுள் மறைத்து வைத்திருப்பார்
 உலகம் – உயர்ந்தோர்
 உரவோர் – மன வலிமையுடையோர்
 உம்பரார் பதி – இந்திரன்
 உய்ய – பிழைக்க
 உறுதி – உள வலிமை
 உடு – சொரிந்த
 உணர்வு – அறிவியல் சிந்தனை
 உரு – வடிவம்
 உலையா உடம்பு – தளராத உடல்
 உயம்மின் – போற்றுங்கள்
 உறைதல் – தங்குகள்
 உய்ம்மின் – பிழைத்துக் கொள்ளுங்கள்
 உயர்ந்தன்று – உயர்ந்தது
 உபாயம் – வழிவகை
 உடையார் – செல்வம் உடையார்
 உவப்ப – மகிழ
 உருகுவார் – வருந்துவார்
 உண்பொழுது – உண்ணும் பொழுது
 உணா – உணவு
 உணர்வு – நல்லெண்ணம்
 உடுக்கை – ஆடை
 உழுபடை – விவசாயம் செய்யும் கருவிகள்

ஊ – வரிசை

 ஊன்றும் – தாங்கும்
 ஊற்று – ஊன்று கோல்

எ – வரிசை

 என்பு – எலும்பு
 எவன் கொலோ – என்ன காரணமோ
 எய்யாமை – வருந்தாமை
 எண் – எண்கள் கணிதம்
 எழத்து – இலக்கண இலக்கியங்கள் வடிவங்கள்
 எம்பி – என் தம்பி
 எய்தற்கு – கிடைத்தற்கு
 எளிமை – வறுமை
 எள்ளுவர் – இகழ்வர்
 எண்டு – கரடி
 எழில் – அழகு
 என்பால் – என்னிடம்
 எஃகு – உறுதியான
 எயினர் – வேடர்
 எள்ளறு – இகழ்ச்சி இல்லாத
 எய்தற்கு – கிடைத்தற்கு
 என்பணிந்த – எலும்பை மாலையாக அணிந்த

ஏ – வரிசை

 ஏமாப்பு – பாதுகாப்பு
 ஏமரா – பாதுகாவல் இல்லாத
 ஏர் – அழகு
 ஏசா – பழியில்லா
 ஏதம் – குற்றம்
 ஏய்துவர் – அடைவர்
 ஏத்தும் – வணங்கும்
 ஏமாப்பு – பாதுகாப்பு
 ஏக்கற்று – கவலைப்பட்டு

ஒ – வரிசை

 ஒண்பொருள் – சிறந்த பொருள்
 ஒழுகுதல் – ஏற்று நடத்தல்
 ஒல்கார் – விலகமாட்டார்
 ஒல்லாவே – இயலாவே
 ஒட்ட – பொருந்த
 ஒழுகுதல் – நடத்தல், வாழ்தல்
 ஒடுக்கம் – அடங்கியிருப்பது
 ஒள்ளியவர் – அறிவுடையவர்
 ஒம்பப்படும் – காத்தல் வேண்டும்
 ஒப்புரவு – உதவுதல்
 ஒற்சம் – தளர்ச்சி
 ஒப்பர் – நிகராவர்
 ஒண்தாரை – ஒளிமிக்க மலர்மாலை
 ஒன்றோ – தொடரும் சொல்

ஓ – வரிசை

ஓதின் – எதுவென்று சொல்லும் போது