Monday, 29 July 2019

இலக்கிய வகைச் சொற்கள்

இலக்கிய வகைச் சொற்கள்


இங்கு கொடுக்கப்பட்டுள்ள இலக்கிய வகைச் சொற்கள் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
இலக்கிய வகையால் சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். 
  • இயற்சொல்
  • திரிச்சொல்
  • திசைச்சொல்
  • வடசொல்
இயற்சொல்:
கற்றவர், கல்லாதவர் என அனைவருக்கும் எளிதில் பொருள் விளங்கும்படி அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்.
இயற்சொல் – இயல்பான சொல்.
எ.கா: பறவை, பூனை, மனிதன், மாமரம், பூ
இயற்சொல் இரு வகைப்படும்.
1) பெயர் இயற்சொல்
2) வினை இயற்சொல்
1) பெயர் இயற்சொல்:
எளிதில் பொருள் உணர்த்தும் பெயர்ச்சொற்கள் பெயர் இயற்சொல்எனப்படும்.
(எ.கா) காற்று, நிலவு, ஞாயிறு, பலகை
2) வினை இயற்சொல்:
எளிதில் பொருள் உணருமாறு அமைந்துள்ள வினைச்சொற்கள் வினை இயற்சொல்எனப்படுமு;.
(எ.கா) படித்தான், தூங்கினான், வந்தான், சிரித்தான், பறந்தது மேய்ந்தன.
திரிசொல்:
இயல்பு நிலையிலிருந்து மாறி கற்றவர் மட்டுமே அறிந்து கொள்ளும் வகையில் அமைந்த சொற்களைத் திரிச்சொற்கள்என்று கூறுவர்.
(எ.கா) பீலி – மயில்தொகை
உகிர் – நகம்
ஆழி – கடல்
தத்தை – கிளி
புனல் – நீர்;
ஞாலம் – உலகம்
திரிசொல் இரு வகைப்படும்
1) பெயர்த்திரிசொல்
2) வினைத் திரிசொல்
1) பெயர்த்திரிசொல்:
எளிதில் உணர முடியாது, கற்றவர்க்கு மட்டுமே பொருள் விளங்குமாறு அமைந்த பெயர்ச்சொல் ‘பெயர்த்திரிசொல்’ ஆகும்.
(எ.கா) எயில் – மதில்
நல்குரவு – வறுமை
கழை – மூங்கில்
கிழமை – உரிமை
மடி – சோம்பல்
பெயர்த்திரிசொல் இரு வகைப்படும்.
i. ஒரு பொருள் குறித்த பல பெயர்த்திரிசொல்
ii. பல பொருள் குறித்த ஒரு பெயர்த்திரிசொல்
ஒரு பொருள் குறித்த பல பெயர்த்திரிசொல்:
கமலம், கஞ்சம் முண்டகம் முளரி இவை யாவும் “தாமரை” என்னும் ஒரே பொருளை உணர்த்துகின்றன. இவ்வாறு கற்றவர்க்கு மட்டுமே பொருள் விளங்குமாறு அமைத்து ஒரே பொருளை உணர்த்தும் பல சொற்களை ஒரு பொருள் குறித்த பல பெயர்த்திரிசொல் என்று அழைக்கிறோம்.
எ.கா:
வேழம் வாரணம் கழை ஆகிய சொற்கள் “யானை” யைக் குறிக்கும்.
பல பொருள் குறித்த ஒரு பெயர்த்திரிசொல்:
ஆவி இச்சொல் உயிர் பேய் மெல்லிய புகை ஆகிய பல சொற்களை உணர்த்துகின்றது. அரிதில் பொருள் விளங்கும் இப்பெயர்ச்சொல் பல பொருள்களைத் தருவதால் அதனைக் பல பொருள் குறித்த ஒரு பெயர்த்திரிசொல் என்று அழைக்கிறோம்.
எ.கா:
ஆவணம் – முறிச்சீட்டு, கடைத்தெரு, அடிமைத்தனம்
2) வினைத்திரிசொல்:
கற்றவருக்கு மட்டுமே பொருள் விளங்கும் வகையில் அமைந்த வினைச்சொல் வினைதிரிசொல் எனப்படும்.
எ.கா: வினவினான் விளித்தான் நோக்கினான்.
வினைத்திரிசொல் இரு வகைப்படும்.
i. ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொல்
ii. பல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல்
ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொல்:
செப்பினான் உரைத்தான், மொழிந்தான் இயம்பினான் இவை கற்றவர்க்கு மட்டுமே விளங்கும் வகையில் அமைந்த வினைச்சொற்களாகும். எனவே இவை வினைத் திரிசொல் என வழங்கப்படும். இச்சொற்கள் அனைத்தும் ஒரு பொருளையே தருவதால் இவற்றை ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொல் என்பர்.
பல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல்:
வீசு இந்த வினைச்சொல் எறி, சிதறடி, பரவச்செய், ஆட்டு என்னும் பல பொருட்களை உணர்த்துகின்றது. இது கற்றவர்கள் மட்டுமே அறியும் சொல்லாகும். இதனைப் பல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல் ஆகும்.
திசைச்சொல்:
வடமொழி அல்லாத பிறமொழிச் சொற்கள் அம்மொழிகளில் எவ்வெப்பொருளில் வழங்குகின்றனவோ அவ்வப் பொருளிலேயே தமிழிலும் வந்து வழங்குவதைத் திசைச் சொற்கள் என்கிறோம்.
தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள பிற பகுதிகளிலிருந்து தமிழில் வழங்கும் திசைச்சொற்கள்
i. கேணி – (கிணறு)
ii. பெற்றம் – (பசு)
iii. அச்சன் – (தந்தை)
iv. கடிதாசி – (கடிதம்)
v. தள்ளை – (தாய்)
vi. சாவி – (திறவு கோல்)
vii.அசல் – (மூலம்)
viii. கோர்ட் – (நீதிமன்றம்)
ix.இலாகா – (துறை)
வடசொல்:
வடமொழிச் (சமஸ்கிருதம்) சொற்கள் திரிந்தும், திரியாமலும் தமிழ் மொழியில் வந்து வழங்குமானால் அவை “வடச்சொற்கள்”எனப்படும்.
கமலம், விஷம், புஷ்பம் இவை தமிழில் வந்து வழங்கினாலும் தமிழ்சொற்கள் அல்ல வடமொழிச் (சமஸ்கிருதம்) சொற்கள்.
எ.கா: கமலம் – தாமரை
விஷம் (அ) விடம் – நஞ்சு
புஷ்பம் (புட்பம்) – மலர்
அர்ச்சனை – மலரிட்டு வழிபடுதல்
சுதந்திரம் – விடுதலை
விவாகம் – திருமணம்

சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்

சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்
இங்கு கொடுக்கப்பட்டுள்ள சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
1. எழுவாய் பயனிலை அமைப்பு: 
எழுவாய் முதலில் வரும் அடுத்து பயனிலை வரும் எழுவாயும், பயனிலையும் பால், இடம் ஒத்து இருத்தல் வேண்டும்.
நான் வந்தேன் நாம் வந்தோம், நாங்கள் வந்தோம், நீ வந்தாய், நீர் வந்தீர், நீங்கள் வந்தீர்ஃகள் அவன் வந்தான், அவள் வந்தாள், அவர் வந்தார், அது வந்தது, அவை வந்தன.
வண்டி ஓடும் வண்டிகள் ஓடும்
மரம் விழும், மரங்கள் விழும்
எழுத்தறிவித்தவன், இறைவன் ஆகும்
நாட்டை ஆண்டவன் அரசன் ஆகும்.
செய்யும் என்னும் வாய்பாட்டில் அமையும் வினைகள் ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின்பால், போன்ற நான்கு பாலுக்கும் வரும்.
தன்மை, முதனிலை, படர்க்கை (பலர்பால்) இவற்றில் செய்யும் என்னும் வாய்பாடு முற்று வராது.
வண்டி ஓடியது வண்டிகள் ஓடின.
பறவை பறந்தது பறவைகள் பறந்தன.
குதிரை மேய்ந்தது குதிரைகள் மேய்ந்தன.
2. எழுவாய் செயப்படுபொருள் பயனிலை அமைப்பு: 
இராமன் வில்லை வளைத்தான் – எனத் தொடர் அமையும்.
3. தொகுதி பெயர் :  ஒன்றன் பால்விகுதிபெறும்
ஊர் சிரித்தது
உலகம் அழுதது.
4. பெயரெச்சத்தின் முடிவில் பெயர்வரும்:
இன்று வந்த மழைக்காலம் என அமையும்.
இன்று மழை வந்த காலம் எனத் தொடர் அமையாது. கோயிலுக்குப் போன மாலா திரும்பினாள் என அமையும்.
5. வினையெச்சத்தை அடுத்து வினை வரும்: 
(வினையெச்சத்தில் அடைச்சொற்கள் சில வரும்)
முருகன் வந்து போனான், முருகன் வேகமாக வந்து போனான்.
6. செயப்படு பொருளும் வினையெச்சமும் வரும் போது முதலில் செயப்படு பொருள் வரும்: 
இராமன்/ வில்லை / வளைத்துப் / புகழ் / பெற்றான்.
அவன் / பெண்ணைக் / கொடுத்துத் / திருமணம் செய்வித்தான்.
முருகன் / அரக்கனை /அழித்து / வெற்றி / பெற்றான்.
நான் / பணத்தைக் / கொடுத்துப் / பழம் / வாங்கினேன்.
நான் பணம் கொடுத்துப் பழம் வாங்கினேன் என்று அஃறிணையில் ‘ஐ’ மறைந்தும் வரும்.
7. பெயரடை சிதறாது /பெயரை விட்டு விலகாது: 
நான் நேற்று நல்ல பையனைப் பார்த்தேன் (பெயரை – மத்தியில் எதுவும் வராது)
நான் நேற்று (என்வீட்டிற்குப் பக்கத்திலிருந்த குடியிருந்த நல்ல பையனைப்) பார்த்தேன்.
நான் கடையில் (திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறளை) வாங்கினேன்.
பெட்டியில் உள்ள சொற்கள் சிதறாது.
8. வேற்றுமை உருபுகள்: (2 – ஐ, 3-ஆல், 4-கு, 5-இன், 6-அது, 7-கண்)
அ) 2 – 3  நான் முருகனைப் பார்த்தேன்
நான் முருகனைக் கண்ணால் பார்த்தேன்
என இரண்டாம் வேற்றுமை உருபு முதலில் வந்து மூன்று வேற்றுமை உருபு அடுத்து வரும்.
ஆ) 4 – 2 – 3  கு – ஐ – ஆல்
தாய் குழந்தைக்கு உணவைக் கையால் ஊட்டினாள்
இ) 4 – 2 – 7  கு – ஐ – கண் (இடம்)
இராமனுக்கு புத்தகத்தை கடையில் வாங்னேன்
ஈ) 3 – 2 – 3  ஆல் – ஐ – ஆல்
கண்ணால் பார்த்தவனைக் கையால் அடித்தேன்
9. விளிச்சொல் முதலில் நிற்கும்:
இராமா இங்கே வா (சரியானது)
இங்கே வா இராமா (தவறானது)

Saturday, 27 July 2019

பெயர்ச்சொல்லின் வகையறிதல்

பெயர்ச்சொல்லின் வகையறிதல்


இங்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர்ச்சொல்லின் வகையறிதல் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
1. பெயர்ச்சொல்: பெயரையும் இடத்தையும் குறித்து வந்தால் பெயர்ச்சொல் எனப்படும்.
2. வினைச்சொல்: பொருட்களின் செயலை இயக்கத்தை தொழிலை வினையை உணர்த்தும் சொற்கள் வினைச்சொல்எனப்படும்.
3.இடைச்சொல்: பெயர்ச்சொல் வினைசொற்களை இடமாகக் கொண்டு வருவதையே இடைச்சொல்என்றழைக்கிறோம்.
வேற்றுமை உருபுகள் உவம உருபுகள் சுட்டு எழுத்துக்கள் வினா எழுத்துக்கள் மற்றும் ஏகாரம் ஒளகாரம் உம்மை போன்றவை இடைச்சொற்களாக வரும்.
எ.கா:
நூலைப் படித்தான் – (வேற்றுமை உருபு)
மக்கள் மகிழ்ந்தனர் – அர் (விகுதி)
தேன் போன்ற மொழி – போன்ற (உவமஉருபு)
அவ்வீடு இது – அ, இ
(சுட்டெழுத்துகள்)
உணவும் உடையும் – உம் (உம்மை)
படித்தாயா? – ஆ (வினா எழுத்து)
கழி உவகை (மிகுந்த மகிழ்ச்சி) கழி
4. உரிச்சொல்: பெயர் வினைச்சொற்களைச் சார்ந்து அவற்றின் குணத்தை உணர்த்தி வரும் சொற்கள் உரிச்சொற்கள் எனப்படும்.
எ.கா: மாநகர் மாமன்னர்
சாலப் பெரிது (மிகப்பெரிது) – சால
உறு பொருள் (மிகுந்த பொருள்) – உறு
தவச்சிறிது (மிகவும் சிறிது) – தவ
நனி பேசினான் (மிகுதியாகப் பேசினான்) – நனி
இடும்பை கூர் வயிறு (துன்பம் மிக்க வயிறு) – கூர்கழி உவகை (மிகுந்த மகிழ்ச்சி) – கழி
மேற்கண்ட சொற்றொடர்களில் உள்ள சால உறு தவ நனி கூர் கழி என்னும் சொற்கள் “மிகுதி” என்னும் குணத்தை உணர்த்திய பெயர்ää வினைகளுக்கு உரிமை பூண்டு வந்துள்ளன. எனவே இவை உரிச்சொல்கள் எனப்படுகின்றன.
சால உறு தவ நனி கூர் கழி என்பன மிகுதி என்னும் ஒரு பொருளையே உணர்த்துகின்றன. எனவே இவை ஒரு குணம் தழுவிய பல உரிச்சொற்கள் ஆகும்.
எ.கா:
கடிநிகர் – காவல் உடைய நகரம்
கடிவேல் – கூர்மையான வேல்
கடிமுரசு – ஆர்கும் முரசு
கடி காற்று – மிகுதியான காற்று
கடி மலர் – மணம் உள்ள மலர்
உரிச்சொற்றொடர்
1. மாநகர் – உரிச்சொற்றொடர்
2. தடந்தேள் – உரிச்சொற்றொடர்
3. மாபத்தினி – உரிச்சொற்றொடர்
4. கடுமா – உரிச்சொற்றொடர்
உரிச்சொல்
 மாநகர் – உரிச்சொற்றொடர்
 தடந்தேள் – உரிச்சொற்றொடர்
 மல்லல் நெடுமதில் – உரிச்சொற்றொடர்
 இரு நிலம் – உரிச்சொற்றொடர்
உரிச்சொல்
1. தடக்கை – உரிச்சொற்றொடர்
2. நனி விதைத்து – உரிச்சொற்றொடர்
3. உறுவேனில் – உரிச்சொற்றொடர்
4. மல்லல் அம் குருத்து – உரிச்சொற்றொடர்
5. நனிகடிது – உரிச்சொல் தொடர்கள்
6. நளிர்கடல் – உரிச்சொல் தொடர்கள்
7. நனி மனம் – பெயர் உரிச்சொல்
8. மல்லல் – ‘வளப்பம்’ என்னும்
பொருளைத் தரும் உரிச்சொல்
உரிச்சொல்
1. விழுப்பொருள் – உரிச்சொற்றொடர்
2. வயமா – உரிச்சொற்றொடர்
3. தடங்கண் – உரிச்சொற்றொடர்
4. கடிநிறை – உரிச்சொற்றொடர்
5. தடம் தோள் – உரிச்சொல்
பல குணம் தழுவிய ஓர் உரிச்சொல்:  ஒரு தொடரில் ‘கடி’ என்னும் உரிச்சொல் காவல் கூர்மை விளைவு மிகுதி மணம் என்னும் பல பொருள்களை உணர்த்தியுள்ளது. எனவே ‘கடி’ என்னும் பலகுணம் தழுவிய ஒரு உரிச்சொல்லாகும்.

Thursday, 25 July 2019

பொது தமிழ் – பொருந்துதல் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்

 பொருந்துதல் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்



இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தொகுதிகளும் முக்கியமான பொது தமிழ்குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

அ – வரிசை

 அணியர் – நெருங்கி இருப்பவர்
 அணையார் – போன்றார்
 அளைஇ – கலந்து
 அகன் – அகம், உள்ளம்
 அமர் – விருப்பம்
 அமர்ந்து – விரும்பி
 அகத்தான் ஆம் – உள்ளம் கலந்து
 அணி – அழகுக்காக அணியும் நகைகள்
 அல்லவை – பாவம்
 அற்று – அது போன்று
 அல்லைத்தான் – அதுவும் அல்லாமல்
 அன்ன – அவை போல்வன
 அகம் – உள்ளம்
 அமையும் – உண்டாகும்
 அறிகை – அறிதல் வேண்டும்
 அல்லல் – துன்பம்
 அளகு – கோழி
 அரவு – பாம்பு
 அரவம் – பாம்பு
 அரம் – வாளைக் கூர்மையாக்கும் கருவி
 அமுத கிரணம் – குளிர்ச்சியான ஒளி
 அலகு இல் – அளவில்லாத
 அலகிலா – அளவற்ற
 அன்னவர் – அத்தகைய இறைவர்
 அகழ்வாரை – தோண்டுபவரை
 அடவி – காடு
 அரம்பையர் – தேவ மகளிர்
 அளவின்று – அளவினையுடையது
 அவி உணவு – தேவர்களுக்கு வேள்வியின் பொழுது கொடுக்கப்படும்  உணவு
 அற்றே – போன்றதே
 அனைத்தாலும் – கேட்ட அத்துணை அளவிலும்
 அவியினும் – இறந்தாலும்
 அரு – உருவமற்றது
 அலகில – அளவற்ற
 அகன்று – விலகி
 அயலார் – உறவல்லாதோர்
 அழுக்காறு – பொறாமை
 அருவிணை – செய்தற்கரிய செயல்
 அடர்த்து எழு குருதி – வெட்டுப்பட்ட  இடத்தினின்றும் பீறிட்டு ஒழுகும் செந்நீர்
 அம்பி – படகு
 அல் – இருள்
 அடிமை செய்குவென் – பணி செய்வேன்
 அமலன் – குற்றமற்றவன்
 அரி – நெற்கதிர்
 அம் – அழகிய
 அரா – பாம்பு
 அல்லல் – துன்பம்
 அங்கை – உள்ளங்கை
 அங்கணர் – அழகிய நெற்றிக்கண்ணையுடைய சிவன்
 அரியாசணம் – சிங்காசணம்
 அறைகுவன் – சொல்லுவான்
 அணித்தாய் – அண்மையில்
 அடவி – காடு
 அலறும் – முழங்கும்
 அணிந்து – அருகில்
 அறைந்த – சொன்ன
 அதிசயம் – வியப்பு

ஆ – வரிசை

 ஆர்வம் – விருப்பம்
 ஆற்றவும் – நிறைவாக
 ஆற்றுணா – ஆறு – உணா
 ஆறு – வழி
 ஆடவர் – ஆண்கள்
 ஆர்கலி – நிறைந்த ஓசையுடைய கடல்
 ஆடுபரி – ஆடுகின்ற குதிரை
 ஆழி – மோதிரம்
 ஆனந்தம் – மகிழ்ச்சி
 ஆறு – நல்வழி
 ஆழி – கடல்
 ஆழி – உப்பங்கழி
 ஆன்ற – உயர்ந்த
 ஆன்றோர் – கல்வி, கேள்வி, பண்பு ஆகியவற்றில் சிறந்தோர்
 ஆர் அவை – புலவர்கள் நிறைந்த அவை
 ஆக்கம் – செல்வம்
 ஆயகாலை – அந்த நேரத்தில்

இ – வரிசை

 இன்சொல் – இனிய சொல்
 இன்சொலன் – இனிய சொற்களைப் பேசுபவன்
 இன்சொலினதே – இனிய சொற்களைப் பேசுதலே
 இன்புறாஉம் – இன்பம் தரும்
 இன்மை – இப்பிறவி
 இரட்சித்தாணா – காப்பாற்றினானா
 இணக்கவரும்படி – அவர்கள் மனம் கனியும் படி
 இல்லார் – செல்வம் இல்லாதவர்
 இடித்தல் – கடிந்துரைத்தல்
 இடுக்கண் – துன்பம்
 இசைந்த – பொருத்தமான
 இருநிலம் – பெரிய உலகம்
 இகழ்வார் – இழிவுபடுத்துவோர்
 இறப்பினை – பிறர் செய்த துன்பத்தை
 இறைந்தார் – நெறியைக் கடந்தவர்
 இன்னா – தீய
 இன்னாசொல் – இனிமையற்ற சொல்
 இழைத்துணர்ந்து – நுட்பமாக ஆராய்ந்து
 இடர் – இன்னல்
 இன்னா – தீங்கு
 இனிய – நன்மை
 இன்மை – வறுமை
 இளிவன்று – இழிவானதன்று
 இருநிலம் – பெரிய நிலம்
 இசைபட – புகழுடன்
 இரந்து செப்பினான் – பணிந்து வேண்டினான்
 இன்னல் – துன்பம்
 இறைஞ்சி – பணிந்து
 இழக்கம் – ஒழுக்கம் இல்லாதவர்
 இடும்பை – துன்பம்
 இகல் – பகை
 இறுவரை – முடிவுக்காலம்
 இயைந்தக்கால் – கிடைந்தபொழுது
 இமையவர் – தேவர்
 இறையோன் – தலைவன்
 இனிதின் – இனிமையானது
 இன்னல் – துன்பம்
 இருத்தி – இருப்பாயாக
 இந்து – நிலவு
 இடர் – துன்பம்
 இழக்கும் – கடிந்துரைக்கும்
 இடிப்பார் – கடிந்து அறிவுரை கூறும் பெரியார்
 இருள் – பகை
 இரண்டும் – அறனும் இன்பமும்
 இடர் – துன்பம்
 இரும்பணை – பெரிய பனை
 இவண் நெறியில் – இவ்வழியில்
 இனை – சுற்றம்
 இளைப்பாறுதல் – ஓய்வெடுத்தல்

ஈ – வரிசை

 ஈனும் – தரும்
 ஈன்றல் – தருதல் உண்டாக்குதல்
 ஈயும் – அளிக்கும்
 ஈரிருவர் – நால்வர்
 ஈதல் – கொடுத்தல்
 ஈயப்படும் – அளிக்கப்படும்
 ஈர்த்து – அறுத்து
 ஈண்டிய – ஆய்ந்தளித்த

உ – வரிசை

 உன்னி – நினைத்து
 உரும் – இடி
 உறுவை – புலி
 உல்குபொருள் – வரியாக வரும் பொருள்
 உறுபொருள் – அரசு உரிமையாளர் வரும்பொருள்
 உறா அமை – துன்பம் வராமல்
 உதிரம் – குருதி
 உன்னேல் – நினைக்காதே
 உண்டனென் – உண்டோம் என்பதற்கு சமமானது
 உபகாரத்தான் – பயன் கருதாது உதவுபவன்
 உள்வேர்ப்பர் – மனத்தினுள் மறைத்து வைத்திருப்பார்
 உலகம் – உயர்ந்தோர்
 உரவோர் – மன வலிமையுடையோர்
 உம்பரார் பதி – இந்திரன்
 உய்ய – பிழைக்க
 உறுதி – உள வலிமை
 உடு – சொரிந்த
 உணர்வு – அறிவியல் சிந்தனை
 உரு – வடிவம்
 உலையா உடம்பு – தளராத உடல்
 உயம்மின் – போற்றுங்கள்
 உறைதல் – தங்குகள்
 உய்ம்மின் – பிழைத்துக் கொள்ளுங்கள்
 உயர்ந்தன்று – உயர்ந்தது
 உபாயம் – வழிவகை
 உடையார் – செல்வம் உடையார்
 உவப்ப – மகிழ
 உருகுவார் – வருந்துவார்
 உண்பொழுது – உண்ணும் பொழுது
 உணா – உணவு
 உணர்வு – நல்லெண்ணம்
 உடுக்கை – ஆடை
 உழுபடை – விவசாயம் செய்யும் கருவிகள்

ஊ – வரிசை

 ஊன்றும் – தாங்கும்
 ஊற்று – ஊன்று கோல்

எ – வரிசை

 என்பு – எலும்பு
 எவன் கொலோ – என்ன காரணமோ
 எய்யாமை – வருந்தாமை
 எண் – எண்கள் கணிதம்
 எழத்து – இலக்கண இலக்கியங்கள் வடிவங்கள்
 எம்பி – என் தம்பி
 எய்தற்கு – கிடைத்தற்கு
 எளிமை – வறுமை
 எள்ளுவர் – இகழ்வர்
 எண்டு – கரடி
 எழில் – அழகு
 என்பால் – என்னிடம்
 எஃகு – உறுதியான
 எயினர் – வேடர்
 எள்ளறு – இகழ்ச்சி இல்லாத
 எய்தற்கு – கிடைத்தற்கு
 என்பணிந்த – எலும்பை மாலையாக அணிந்த

ஏ – வரிசை

 ஏமாப்பு – பாதுகாப்பு
 ஏமரா – பாதுகாவல் இல்லாத
 ஏர் – அழகு
 ஏசா – பழியில்லா
 ஏதம் – குற்றம்
 ஏய்துவர் – அடைவர்
 ஏத்தும் – வணங்கும்
 ஏமாப்பு – பாதுகாப்பு
 ஏக்கற்று – கவலைப்பட்டு

ஒ – வரிசை

 ஒண்பொருள் – சிறந்த பொருள்
 ஒழுகுதல் – ஏற்று நடத்தல்
 ஒல்கார் – விலகமாட்டார்
 ஒல்லாவே – இயலாவே
 ஒட்ட – பொருந்த
 ஒழுகுதல் – நடத்தல், வாழ்தல்
 ஒடுக்கம் – அடங்கியிருப்பது
 ஒள்ளியவர் – அறிவுடையவர்
 ஒம்பப்படும் – காத்தல் வேண்டும்
 ஒப்புரவு – உதவுதல்
 ஒற்சம் – தளர்ச்சி
 ஒப்பர் – நிகராவர்
 ஒண்தாரை – ஒளிமிக்க மலர்மாலை
 ஒன்றோ – தொடரும் சொல்

ஓ – வரிசை

ஓதின் – எதுவென்று சொல்லும் போது

Wednesday, 24 July 2019

களிமண்ணால் கட்டப்பட்ட உலகின் முதல் அணை



கல்லணை - களிமண்ணால் கட்டப்பட்ட உலகின் முதல் அணை

கல்லும் களிமண்ணும் சேர்த்து 1080 அடி நீளத்துக்கு கட்டப்பட்டு கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக வெள்ளத்தைத் தடுத்துவரும் அணை - கல்லணை

அணை எனப்படுவது ஒரு நீரோட்டத்தின் குறுக்கே கட்டப்படும் ஒரு அமைப்பாகும். இது நீரோட்டத்தைத் தடுக்கவும் திசை மாற்றவும் பொதுவாக நீரைத் தேக்கவும் பயன்படுகின்றன.

இவை பொதுவாக வெள்ள தடுப்பிற்கும் நீர்ப்பாசன திட்டங்களுக்காகவும் நீர் மின்சக்தித் திட்டங்களுக்காகவும் கட்டப்படுகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான்.

ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள். காவிரியின் குறுக்கே கல்லணைக் கட்டப்பட்டது. தமிழனால் கட்டப்பட்ட கல்லணைக்கு தெலுங்கர் ஒருவரின் பெயர் சொந்தம்கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தமிழரின் பெருமையை நாம் நிச்சயம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும்.

கல்லணை

கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இது காவிரி மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது.

திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. அதில் காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது.

பாசனங்கள்

கல்லணை காவிரியை காவிரி ஆறு, வெண்ணாறு, புது ஆறு, கொள்ளிடம் என 4 ஆக பிரிக்கிறது. பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றிலும், வெள்ள காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணிர் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும்.

அதாவது வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு இடது புறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படும். எனவே டெல்டா மாவட்டத்தின் பல லட்சம் ஏக்கர் நிலம் வெள்ளத்தில் இருந்து காப்பற்றப்படுகிறது.

கரிகாலனின் சிறப்புகள்

கரிகாலன் காவிரியை வென்றவன், இமயத்தில் கொடி நட்டுவந்தவன் என்னும் பெருமைக்குரியவன்.

சோழ வம்சத்தின் ஆட்சிப் பகுதிகளை விரிவுபடுத்தியவன் இப்படி பல்வேறு சிறப்புக்களை கொண்டவன் கரிகாலன்.

கல்லணை எப்படி உருவானது?

அடிக்கடி வெள்ளத்தால் அவதிப்படுவதால், அதற்கு ஒரு வழி கண்டுபிடித்தனர் சோழர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர்.
அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன.

கல்லணையின் தொழில்நுட்பம்

பாறைகளுக்கு மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டயும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர்.

இதுவே இவ்வணையினைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாகும்.

ஆச்சர்யம் அளிக்கும் மர்மங்கள்

பல வல்லுநர்கள் வந்து சோதித்து பார்த்தும் இன்னும் இதற்கு விடை கண்டுபிடிக்க முடியவில்லை.

தமிழர்களின் பல்வேறு அறிவியல் நுட்பங்களை இன்றுவரை கண்டுபிடிக்கமுடியாமல் திகைக்கும் அறிஞர்கள், கல்லணையையும் அந்த கணக்கில் தான் வைத்துள்ளனர்.

எத்தனை ஆண்டுகள் ஒட்டிக்கொள்ளும்

உலகில் இத்தனை ஆண்டுகள் (சுமார் 2000 ஆண்டுகள்) ஒட்டிக்கொள்ளும் ஒரு பசையை யாரும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்பதே.

சிமெண்ட்டால் கட்டப்படும் பாலங்கள் கூட அதிகபட்சம் 500 ஆண்டுகளில் பலமிலந்துவிடுவதாகவும், 2000 ஆண்டுகள் நெருங்கியும் இன்னும் பலமுடன் காணப்படும் கல்லணையின் தொழில்நுட்பம் என்னவாக இருக்கும்என்று மண்டையைப் பிய்த்துக்கொள்கின்றனர் சிலர்.

தமிழரின் சிறப்புகளை அழிக்கும் முயற்சிகள்

சமீபத்தில் வெளியான "A concise History of South India" என்னும் புத்தகத்தில் திரு. சுப்பராயலு என்பவர் கல்லணை கட்டியது கரிகாலன் அல்ல என்றும், வெள்ள நீர் வடிவதற்குண்டான அமைப்பையே கரிகாலன் செய்தான் என்பதாகவும் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இது நிகழ்கால தமிழரின் ஆதாரங்களை அழிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. யார் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிவிட்டுபோகட்டும், கரிகாலன் தான் கல்லணையை கட்டினான் என்பதற்குண்டான ஆய்வுகள், ஆதாரங்களுடன் இந்த தமிழர்களின் பெருமையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டியது நம் கடமை.

ஆங்கிலேயரின் சான்று

இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கில பொறியாளர் கல்லணையை பல ஆண்டுகாலம் ஆராய்ந்தார்


வெள்ளத்தாலும் வறட்சியாலும் தஞ்சை மாவட்டம் வளமை குன்றியபோது, 1829 இல் காவிரி பாசன பகுதி தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால்நியமிக்கப்பட்ட சர் ஆர்தர் காட்டன் பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் உலகுக்கு எடுத்துக் கூறினார். கல்லணைக்கு 'கிரான்ட் அணைகட்' என்ற பெயரையும் சூட்டினார்.

மணிமண்டபம்

பழைமையான இந்த அணையை கட்டிய கரிகால சோழனை கெளரவிக்க கல்லணையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் இடது கரை ஓரத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

எப்படி செல்லலாம்?

திருச்சி மாநகரிலிருந்து அரை மணி நேரத் தொலைவில் அமைந்துள்ளது இந்த கல்லணை. திருச்சி ஸ்ரீரங்கத்திலிருந்து 25 நிமிட தூரத்திலும், தஞ்சாவூரிலிருந்து 1.30 மணி நேர பயண தொலைவிலும் அமைந்துள்ளது.

திருச்சி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களிலிருந்து பேருந்து வசதிகளும் உள்ளன. ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில், ஜம்புகேஸ்வரர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்,உறையூர் வெக்காளியம்மன் கோவில்,விராலிமலை முருகன் கோவில், தஞ்சாவூர்,புதுக்கோட்டை, விராலிமலை சரணாலயம் என பல்வேறு இடங்கள் திருச்சியை சுற்றியுள்ளன.

Tuesday, 1 May 2018

RRB previous year GK questions


1. Capital city of Nagaland is ? Kohima.
2. Which is laughing gas? Nitrous Oxide.
3. NASA was established in which year? 1958.
4. Dhamek Stupa located at? Uttar Pradesh.
5. Where is Central Institute of Fresh Water Aqua culture located ? Bhubaneshwar.
6. State tree of Karnataka ? Sandal wood.
7. Which is not a fundamental right? Right to Property.
8. Who is the Chairman of Bank Board Bureau? Vinod Rai.
9. Full form of GSLV? Geosynchronous Satellite Launch Vehicle.
10.What is the Currency of Myanmar? Kyat.
11.Zn is present in? Wheat Germ.
12.SONAR full form is? SOund Navigation And Ranging.
13.World AIDS day? 1st December.
14.Water is mixture of ? Oxygen and hydrogen.
15.What is study of earth called as? Geology.
16.Somnath temple establishment year? 1025 AD.
17.CERN related to? Nuclear Research. 
18.Minimum age of to be a PM? 25.
19.Chandigarh is capital city for Which state ? Punjab & Haryana.
20.Winter Capital of Jamu & Kashmir State ? Sri nagar.
21.Rupee sign was created by? Udaya Kumar. 
22.How many players are there in volleyball? 6.
23.Hindi day celebrated on? 14 September.
24.Which unit is used for measuring ozone layer thickness? Dobson Unit (DU). 
25.Effect of pressure on sound? Speed of sound is better.
26.Who is known as “Father of White Revolution” in India? Verghese Kurien.
27.Which is the International Date Line? 180° longitude. 
28.The main cause of Tsunami is? Earthquake on sea floor.
29.The Central Drug Research Institute of India is located at? Lucknow. 
30.Nomination of Rajya Sabha Members by the President was taken from the Constitution of? Ireland.
31.In which year does second Panipat war took place? 1556.
32.Which country celebrate Independence on 19th August? Afghanistan.
33.Ashoka Pillar is taken from which dynasty? Mauryan.
34.The project ‘LIGO’ is related to? Rivers. 
35.On how many pollutants National Air Quality Index is based? 8.
36.Fifth generation computers do not have? Vacuum tubes. 
37.Where does a computer add, compare and shuffle data? CPU chip. 
38.The Indian monument recently inscribed in the UNESCO's World Heritage List is? Jantar Mantar of Jaipur.
39.Yen is the currency of? Japan.
40.Breeding and management of bees is known as? Apiculture.
41.The vitamin necessary for coagulation of blood is? Vitamin K.
42.Which of the following is not a computer network? Personal network. 
43.When a group of computers is connected together in a small area without the help of telephone lines, it is called? Local Area Network (LAN).
44.Which one of the following elements is used in the manufacture of fertilizers? Potassium.
45.Natural rubber is the polymer of? Isoprene.
46.The concept of Soverign Parliament originated in? England.
47.National Institute of Rural Development is located at? Hyderabad.
48.Who is considered the Architect of the Indian Constitution? B.R. Ambedkar. 
49.Who said that "India's soul lives in villages" ? Mahatma Gandhi. 
50.What was the name of the Newspaper edited by Gandhiji till 1933 ? Young India. 

Friday, 13 April 2018

முந்தைய ஆண்டு இரயில்வே தேர்வுகளில் கேட்கப்பட்ட பொது அறிவு கேள்விகள் | RRB Exam Notes in Tamil



1. அடிமை வம்சத்தை நிறுவியவர்? 
குதுப்-உத்-தின் ஐபக். (Qutb al-Din Aibak).

2. வெளுக்கும் தூள் அதிகமாக உள்ளது?
கால்சியம் ஆக்ஸிகுளேரைடு. (Calcium Oxichloride).

3. பூமி பற்றிய ஆய்வு எவ்வரறு அழைக்கப்படுகிறது?
புவியியல்.

4.வங்கிகளின்  நிர்வகிப்பாளர் (Controller)? 
RBI RESERVE BANK OF INDIA.

5.ஆசிய விளையாட்டுக்கள் இந்தியாவில் நடந்த ஆண்டு? 
1951.

6.இந்தியாவின் மிக உயர்ந்த தேயிலை உற்பத்தி மாநிலம்? 
அசாம்.

7. நாசாவின் தலைமையகம்? 
வாஷிங்டன் DC (WASHINGTON).

8. குச்சிப்புடி எந்த மாநிலத்தை சேர்ந்த நடனம்? 
ஆந்திர பிரதேசம்.

9. 1985 ஆம் ஆண்டில் UNSECO மூலம் உலக பாரம்பரியம் 
 ஆக அறிவிககப்பட்ட தளம்?
 Kaziranga National Park, Assam.

10. நீர் துளிகளால் வானவில் ஏற்படக்காரணம்? 
ஒளி சிதறல்.

11.ஆளுநரை நியமிப்பவர் யார்? 
ஜனாதிபதி.

12.1905 ல் வங்காளப் பிரிவினை யாரால் செய்யப்பட்டது?
லார்ட் கர்சன்.

13. வலைப்பக்கங்கள் எதனால் எழுதப்பட்டுள்ளன?
 HTML.

14. கேப்ட்சா எதுக்கு  பயன்படுத்தப்படுகிறது?
பாதுகாப்பு.

15.2018 FIFA உலக கோப்பை நடைபெறும் இடம்? Moscow, Russia.

16.Nustar - x ray எதை கண்டறிய பயன்படுகிறது? 
கருப்பு ஓட்டைகள்.

17.இந்தியாவில் மிகவும் பரவலான காடுகள்? 
வெப்பமண்டல இலையுதிர் காடுகள்.

18.டயாலிசிஸ் எதற்கான சிகிச்சை? 
சிறுநீரகம்.

19.இந்தியாவின் முதல் HOME MINISTER? 
சர்தார் வல்லபாய் படேல்.

20.காந்தியின் அரசியல் குரு யார்? 
கோபாலா கிருஷணா கோகலே.

21. கூடங்குளம் அமைந்துள்ள இடம்? 
தமிழ்நாடு.

22.முதல் பெண் முதல்வர்?
 Sucheta Kriplani.

23.எந்த ஆண்டில் சந்திராயன்-1 தொடங்கப்பட்டது?
 2008.

24.ஜம்மு & காஷ்மீர் கிழக்கு எல்லை? 
லடாக்.

25.விமானத்தில் உள்ள நைட்ரஜனின் சதவீதம் என்ன?  
78%.

26.காந்தி-இர்வின் ஒப்பந்த ஆண்டு? 
1931.

27.சச்சின் டெண்டுல்கர் தனது முதல் டெஸ்ட் போட்டியில்  
விளையாடிது எந்த மாநிலத்தில்? 
கராச்சியில்.

28.ISRO தலைமையகம் எங்கு அமைந்துள்ளது? 
Banglore.

29.ஆக்ஸிஜனின் அணு எண்?
 8.

30.சோழ சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னர்? 
ராஜேந்திர சோழர் III.

31.முதல் கோடை ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெற்ற ஆண்டு? 
1896.

32.(SAC) தலைமையகம் அமைந்துள்ள இடம்? 
கொலம்பியா.

33.மாநிலங்களவை துணை தலைவர் யாரால்  
தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
மாநிலங்களவை உறுப்பினர்.

34.மாநிலங்களவை என்பது? நிரந்தரமானது.

35.மக்களவை தற்போதைய உறுப்பினர் எண்ணிக்கை?
 545 பேர்.