@ எதன்படி நாட் குறிப்பு கிராம நிர்வாக அலுவலர் தயாரிக்க வேண்டும் ?
அரசு ஆணை எண் 212
@ எந்த ஆண்டிலிருந்து நாட்குறிப்பு தயாரிக்கும் பணி கிராம நிர்வாக அலுவலருக்குக் கொடுக்கப்பட்டது ?
29.4.1999
@ நாட்குறிப்பை யாருக்கு அனுப்ப வேண்டும் ?
வட்டாட்சியருக்கு
@ எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை கிராம அளவில் கடன் பதிவோடு
சரிபார்க்கப்படும் ?
காலாண்டிற்கு ஒரு முறை
@ கிராம கணக்குகள் எந்தக் கணக்குகளுடன் சரி பார்க்கப்படும் ?
வட்டக் கணக்குகளுடன்
@ கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் பட்டியலைத் தயாரிப்பவர் யார் ?
கிராம நிர்வாக அலுவலர்
@ கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் பட்டியலை யாருக்கு அனுப்ப வேண்டும் ?
வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினருக்கு
@ கிராம நிர்வாக அலுவலரின் இடஒதுக்கீடு எந்த விதியின் படி மேற்
கொள்ளப்படும் ?
பொது விதி 22
@ எந்த வயதிற்கு மேற்பட்டவர் தகுதியற்றவராவர் ?
30 வயது முடிவுற்றவர்
@ குறைந்த பட்சக் கல்வித்தகுதி பற்றிய விதி என்ன ?
விதி 12 (அ) (1)
@ எப்பொழுதிற்குள் பிணைத் தொகையை அளிக்க வேண்டும் ?
பணியில் சேர்ந்த நாள் முதல் ஒரு மாதத்திற்குள்
@ பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவருக் வழங்க வேண்டிய பிணைத் தொகை எவ்வளவு ?
ரூ 1000
@ அட்டவணை வகுப்பு மற்றும் பழங்குடியினருக்கான பிணைத்தொகை எவ்வளவு ?
பிணைத்தொகை இல்லை
@ பிணைத் தொகை எவ்வாறு செலுத்த வேண்டும் ?
அஞ்சல் அலுவலகத்தில் வைப்புத் தொகையாக
@ பிணைத் தொகை எப்பொழுது விடுவிக்கப்படும் ?
பணி ஓய்வின் போது
@ பிணைத் தொகையை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது ?
மாவட்ட ஆட்சியர்
@ பணியில் சேருபவர் எத்தனை ஆண்டுகளுக்குத் தகுதி காண் பருவத்தில் இருக்க வேண்டும் ?
இரண்டு ஆண்டுகள்
@ கிராம நிர்வாக அலுவலருக்கு நில அளவைப் பயிற்சி எவ்வளவு காலத்திற்கு அளிக்கப்படும் ?
ஒரு மாதத்திற்கும் குறையாமல்
@ நில அளவைப் பயிற்சி யாரால் அளிக்கப்படும் ?
நில அளவைத் துறையால்
@ பயிற்சி முடிவில் என்ன செய்ய வேண்டும் ?
நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெற வேண்டும்
@ முதல் முறை பயிற்சியில் தேறாதவர் என்ன செய்ய வேண்டும் ?
மீண்டும் பயிற்சி பெற்று தேர்வு எழுத வேண்டும்
@ மூன்றாவது முறைப் பயிற்சியில் தவறுபவர் நிலை என்ன ?
பணியிலிருந்து வெளியேற்றப்படுவர்
@ கிராம நிர்வாகப் பயிற்சி பெரும் காலம் எவ்வளவு ?
ஆறு வாரங்கள்
@ இரண்டாம் முறை பயிற்சி பெற வழி செய்யும் விதி எது ?
துணை விதி (1)
@ மூன்றாம் முறை தேர்வில் தோற்றால் என்ன நடவடிக்கை மேற் கொள்ளப்படும் ?
பணி வெளியேற்றம்
@ பயிற்சி காலம் எதற்கான கணக்கிற்கு எடுத்துக் கொள்ளப்படும் ?
தகுதி காண் பருவம் மற்றும் ஊதிய உயர்விற்கு
@ பயிற்சியில் தேர்ச்சி பெறாதவர் எவற்றை ஒப்படைக்க வேண்டும் ?
பயிற்சி காலத்தில் பெற்ற சம்பளம் மற்றும் படி
