@ கிராமக் கணக்கு எண் 3 எத்தனை பிரிவுகளைக் கொண்டது ?
நான்கு
@ பிரிவு 1 இல் எதைக் குறிப்பிட வேண்டும் ?
உரிமையை விட்டுவிடுதல் பற்றி
@ ஒப்படைப்பு எப்பிரிவில் வரும் ?
பிரிவு -2
@ பட்டா மாறுதல் எந்தப் பிரிவில் வரும் ?
பிரிவு – 3
@ பிரிவு – 4 இல் எவை குறிப்பிடப்படும் ?
இதர மாறுதல்கள்
@ எவற்றை பிரிவின் படிவத்தின் தலைப்பிற்கு ஏற்றார் போல எழுத வேண்டும் ?
ஒவ்வொரு பிரிவு சம்மந்தப்பட்ட மாறுதல்களை
@ மாறுதலுக்கான உத்தரவு விவரங்கள் எதில் குறிப்பிடப்பட வேண்டும் ?
கலம் - 8 இல்
@ பிரிவு – 3 இல் என்ன குறிப்பிட வேண்டும் ?
பதிவு பெற்ற கைப்பற்றுதாரரின் பட்டா எண் பெயர் ஆகியன
@ பிரிவு 3 இல் உள்ள உட்பிரிவுகள் எத்தனை ?
5
@ வருவாய் பாக்கிக்காக விற்பனை செய்யப்பட்டவை எவை ?
அ) அரசால் வாங்கப்பட்டவை
ஆ) தனி நபரால் வாங்கப்பட்டவை
@ இரண்டாம் உட்பிரிவு எது பற்றியது ?
நீதி மன்ற ஆணையின் பேரில் விற்பனை அல்லது மாற்றம்
செய்யப்பட்டது.
@ பிரிவு 3 இல் எதுபற்றி கூறப்பட்டுள்ளது ?
தனி நபர் விற்பனை அல்லது கொடை ஆகியவற்றின் பேரில்
மாற்றப்பட்டது
@ வாரிசு முறையால் மாற்றப்பட்டது எந்தப் பிரிவில் அடங்கும் ?
பிரிவு – 4
@ வருவாய் ஆணை எண் 31 (7) எதுபற்றியது ?
12 ஆண்டுகளுக்கு மேல் அனுபோகம் செய்யாத நிலம்
பற்றியது
@ வாரிசற்ற நிலங்கள் யாரைச் சேரும் ?
அரசை
@ முன்பசலியில் கைப்பற்றி இருந்தவைகளை என்ன செய்ய வேண்டும் ?
பிரிவு வாரியாகக் கழிக்க வேண்டும்
@ பிரிவு வாரியாகக் கழித்த பின் என்ன செய்ய வேண்டும் ?
பிரிவு வாரியாகச் சேர்த்தவை கணக்கிடப்படவேண்டும்
@ கிராமக் கணக்கு எண் 4 எத்தனை பிரிவுகளையுடையது ?
இரண்டு
@ சமய நிலையங்களுக்காக கழிக்கப்படுவது எப்பிரிவில் உள்ளது ?
கணக்கு எண் - 4 இன் பிரிவு – 1 இல்
@ பிரிவு இரண்டு எதைப்பற்றியது ?
மற்ற காரியங்களுக்காகக் கழிக்கப்படுபவது பற்றியது
@ அரசிறைக் கழிவுக்கான உத்தரவுகளிலிருந்து எடுத்து எழுத வேண்டியது எது ?
கலம் 1 முதல் 5 வரை
@ கழிவு எப்பொழுது வழங்கப்பட வேண்டும் ?
பசலியின் கடைசி கிஸ்தி மாதத்தில்
@ எத்தனை ஆண்டுகளுக்குண்டான கழிவு பாக்கியை முழுமையாகக் கொடுக்க வேண்டும் ?
இரண்டு ஆண்டுகளுக்கு
@ இக் கணக்கை நிரந்தரக் கணக்காக யார் பராமரிக்க வேண்டும் ?
கிராம நிர்வாக அலுவலர்
@ அரசிறை கழிவுகள் பாக்கி விபரங்களை கி.நி.அலுவலர் யாருக்கு தெரிக்க வேண்டும் ?
வட்டாட்சியருக்கு
@ மீதமுள்ள தொகையை என்ன செய்ய வேண்டும் ?
வங்கியில் செலுத்த வேண்டும்
@ கிராமக் கணக்கு எண் 5 எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
வஜா கணக்கு

No comments:
Post a Comment