Monday, 4 January 2016

பங்குச்சந்தை அடிப்படை (Basics of Stock Market)

பங்குச்சந்தையை பற்றி பார்ப்பதற்கு முன், சில அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்வோம்.
சரி! வாங்க பங்குச்சந்தை பற்றி பார்ப்போம்

தனியார் நிறுவனம் என்றால் என்ன ? (Private Company)
ஒரு நிறுவனம் என்பது கீழ்கண்ட இரு வகைகளில் உருவாக்கப்படுகிறது,
  • தனியொருவர் மட்டும் முதல் போட்டு வியாபாரம் செய்தால் அது தனியார் வியாபாரம். (Private Business)
  • சில நபர்கள் கூட்டு சேர்ந்து முதல் போட்டு வியாபாரம் செய்தால், அது பங்கு நிறுவனம் எனப்படும். (ஆங்கிலத்தில் Partnership எனப்படும்)

கம்பனி என்றால் என்ன ? (What is meant by company?)
மேலே கூறப்பட்ட Partnership என்பது முகம் தெரிந்தவர்களை மட்டும் சேர்த்து இயங்கக்கூடியது. இவற்றுடன் முகம் தெரியாத பலரையும் சேர்த்து வியாபாரம் செய்வதற்காக உருவாக்கப்படுவதற்கு கம்பனி என்று பொருள்.
இந்த கம்பனிகள் ரெஜிஸ்டார் ஆப் கம்பனீஸ் (Registrar of Companies) என்னுமிடத்தில் பதிவு செய்யப்படுகிறது. இதனால் அந்த கம்பனியின் கடன்களுக்கு அக்கம்பனியே பொறுப்பு, பங்குதார்கள் பொறுப்பல்ல. (பங்குதாரகள் என்பது கீழே விளக்கப்பட்டுள்ளது)

பங்கு என்றால் என்ன ? (What is meant by stock?)
மேலே கூறப்பட்ட கம்பனிகள், முகம் தெரியாத பலரை சேர்க்க வெளியிடப்படும் சேர்களுக்கு (shares) பங்கு என்று பொருள்.

பங்குச்சந்தை என்றால் என்ன ? (What is meant by Stock Market?)
பொதுவாக பங்குகளை வாங்கி விற்குமிடமே (டிரேடிங்) பங்குச்சந்தை ஆகும். இங்கு சிறு முதலீட்டாளர்கள், தரகர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள், தரகர்கள் வரை பங்குபெறலாம்.
உதாரணமாக இந்தியாவில் புகழ் பெற்ற பங்குச்சந்தைகள் மும்பை பங்குச்சந்தை (BSE – Bombay Stock Exchange) மற்றும் தேசிய பங்குச்சந்தை (National Stock Exchange) ஆகும். உலகளவில் நியூயார்க் பங்குச்சந்தை (New York Stock Exchange), லண்டன் பங்குச்சந்தை (London Stock Exchange), நாஸ்டாக் (NASDAQ) மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தைகள் (Hong Kong Stock Exchange) புகழ் பெற்றவைகள்.

பங்குச்சந்தை இரண்டு வகைப்படும், அவை (Different types of stock market)
· முதன்மை பங்குச்சந்தை (Primary Market)
ஒரு கம்பனி முதன் முதலாக பங்குகளை பொது மக்களுக்கு வெளியிடுமிடம் (Issuing first stocks to public) முதன்மை பங்குச்சந்தை ஆகும். இதற்கு ஐ.பி.ஓ (IPO – Initial Public Offer) என்று பொருள்.
· இரண்டாம் நிலை பங்குச்சந்தை வெளிச்சந்தை (Secondary Market)
முதன்மை பங்குச்சந்தையில் வாங்கப்பட்ட பங்குகளை விற்பதற்கோ அல்லது வாங்குவதற்கோ வெளிச்சந்தையை அனுக வேண்டும். ஒரு கம்பனி ஐ.பி.ஓ (IPO) முடிந்த பிறகு பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் (Will be listed in stock market). அதன் பிறகு அக்கம்பனியின் பங்குகளை முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் விற்க முடியும். இப்பங்கின் நடப்பு விலையை (Current stock value) பொறுத்து மற்றொரு முதலீட்டாளர் வாங்கிக்கொள்ளலாம்.

பங்குதாரர் என்றால் என்ன ? (Share Holder)
பங்குதாரர்களை சேர்க்க கம்பனிகள் பங்குகள் எனப்படும் சேர்களை வெளியிடுவார்கள். இவ்வாறு வெளியிடப்படும் பங்குக்கு ஒரு குறிப்பிட்ட முகப்பு விலையை (Face Value) நிர்னயம் செய்வார்கள். இப்பங்கை முகப்பு விலையோ அல்லது அதற்கு மேலோ விலை கொடுத்து வாங்குபவர்கள் பங்குதாரர்கள் ஆவார்.

பங்கு தரகர்கள் ? (Stock Brokers)
பங்குச்சந்தையின் உறுப்பினர்களே பங்குத்தரகர்கள் ஆவர். இவர்கள் மட்டுமே, பங்குகளை வாங்க/விற்க (Buy/Sell) நினைக்கும் தனிநபர் அல்லது நிறுவனம் சார்பாக டிரேடிங் (Trading) செய்ய முடியும். இதனால் பங்குகளை வாங்க நினைக்கும் ஒருவர் பங்குதரகரை அனுக வேண்டும். இதற்காக முதலீட்டாளர் பங்குதரகரிடம் ஒரு கணக்கை தொடங்க வேண்டும்.

1 comment:

  1. Hello,
    I am Padma from kachhua.com(As business developer).
    I have visited your website and it's really good so we have the best opportunity for you.
    Earn money easily by advertising with kachhua.com.
    For registration :click below link:
    http://kachhua.com/pages/affiliate/inquiry
    contact us: 7048200816

    ReplyDelete