Showing posts with label Grammar. Show all posts
Showing posts with label Grammar. Show all posts

Wednesday, 11 July 2012

Types of Nouns

ஆங்கிலப் பெயர்சொற்களின் பிரிவுகள் (Types of Nouns)

பொதுவாக பெயர்சொற்கள் (Nouns) என்பதற்கான வரைவிலக்கணத்தைப் பார்ப்போமானால் மனிதர்கள், உயிரினங்கள், இடங்கள், வாழ்வியல் ஆதாரங்கள், பொருற்கள், உணர்வுகள் போன்றவற்றை விவரிப்பதற்கான பெயர்கள் அல்லது சொற்கள் "பெயர்சொற்கள்" ஆகும்.

இப் பெயர்சொற்களை ஆங்கிலத்தில் பல்வேறு பிரிவுகளாக வகுத்துள்ளனர். அப்பிரிவுகளாவன:


Common Nouns -
பொதுவான பெயர்சொற்கள்

man, boy, girl, shop, tree, clock, actor, mobile
போன்றவை பொதுவான பெயர்சொற்கள் ஆகும்.

அட்டவணைப் பார்க்கவும்.

Proper Nouns -
உரித்தானப் பெயர்சொற்கள்

Peter, Sarmilan, Tamilvani, Hong Kong, Vijai, Nokia
போன்றவை குறிப்பிடுப் பெயர்சொற்கள் அல்லது உரித்தானப் பெயர்சொற்கள் எனப்படும்.

அட்டவணைப் பார்க்கவும்.

Countable Nouns -
கணக்கிடுப் பெயர்சொற்கள்

car-cars, child-children, tree- two trees
போன்று எண்னிக்கையை கணக்கிடக்கூடியப் சொற்களை கணக்கிடுப் பெயர்சொற்கள் என்று அழைக்கபடுகிறது.

அட்டவணைப் பார்க்கவும்.

Uncountable Nouns -
கணக்கிடமுடியாப் பெயர்சொற்கள்

water, fire, air, alcohol, blood, cotton, education
போன்றவை கணக்கிடாமுடியாப் பெயர்சொற்கள் எனப்படும்.

அட்டவணைப் பார்க்கவும்.

Collective Nouns -
கூட்டுப் பெயர்சொற்கள்

a group of things, a flock of birds, faculty, audience, team, crowd
போன்ற கூட்டம் அல்லது குழுக்களின் பெயர்களை (பலதின் சேர்க்கை) பெயர்களை "கூட்டுப் பெயர்சொற்கள்" என்றழைக்கப்படும்.

Concrete Nouns -
உருவப் பெயர்சொற்கள்

Ford, dog, piano, herd, dancer, football, toy, White House,
போன்ற தொடவும், பார்க்கவும் கூடியவற்றை "உருவப் பெயர்சொற்கள்" எனப்படுகின்றது. இவை பொதுவானப் பெயர்சொற்களாகவோ உரித்தானப் பெயர்சொற்களாகவோ இருக்கலாம். கணகிடுப்பெயர்சொற்களாகவோ கணக்கிடமுடியாப்பெயர்சொற்களாகவோ இருக்கலாம்.

Abstract Nouns -
பண்புப் பெயர்சொற்கள்

intelligence, love, hate, bravery
போன்றச் சொற்கள் எண்ணங்கள், குணங்கள், உணர்வுகள் போன்றவற்றை வெளிப்படுத்துவதால் அவற்றை "பண்புப் பெயர்சொற்கள்" என்றழைக்கப்படும்.

Compound Nouns -
இணைவுப் பெயர்சொற்கள்

Blackboard, Homeland, without, wallpaper, brother-in-law
போன்ற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்களை இணைத்து இன்னுமொரு தனிச்சொல்லாக அல்லது தனிப்பெயராக பயன்படுபவற்றை இணைவுப்பெயர்சொற்கள் என்று அழைக்கப்படுகின்றது.

ஆங்கிலத்தில் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இப் பெயர்சொற்களின் அட்டவணைகள் எதிர்வரும் பாடங்களில் ஒவ்வொன்றாகத் தரப்படும். அப்போது அதனதன் மேலதிக விளக்கங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

இன்று பொதுவான பெயர்சொற்கள் மற்றும் உரித்தானப் பெயர்சொற்கள் அட்டவணைகள் வழங்கப்பட்டுள்ளது.

ஏனையவை விரைவில் வழங்கப்படும்.

 

ஆங்கில இலக்கணம்-Preposition

  • ஒரு வார்த்தையை இன்னொரு வார்த்தையுடன் இணைக்க preposition பயன்படுகிறது. (Prepositions are words that shows connection between other words).
  • Exampe:"நான் புரியாத பாடம் பற்றி படிக்க மாலையில் ஆசிரியர் வீட்டிற்க்கு சென்றேன்" இந்த வாக்கியத்தில் நாம் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் 'பற்றி', படி'க்க', வீட்டிற்'க்கு', மாலை'யில்' போன்றவை preposition ஆகும்.
  • Preposition என்றால் முன்னிடைச்சொல் pre என்றால் 'முன்னால்' position என்றால் 'இடம்' என்று பொருள்
  • Prepositionகள் பெரும்பாலும் Noun க்கு முன்னால் இடம் பெறுகின்றது. எங்கிருந்து வருகிறீர்கள் என கேட்கும் போது இந்தியாவிலிருந்து என சொல்ல From India என்று சொல்லலாம். அதே மாதிரி இந்தியாவுக்கு என சொல்ல To India என்று சொல்ல வேண்டும்
In and At:
  • பொதுவாக பெரிய நகரங்களைக் குறிப்பிடும்போது In என்பதையும், சிறிய ஊர்களைக் குறிப்பிடும் போது At என்பதையும் உபயோகிக்க வேண்டும் Example: In Chennai, At Nagercoil
  • காலை, மாலை பற்றி குறிப்பிட In உதவுகிறது
    Example:

    1. In the morning ( காலையில் )
    2. In the evening ( மாலையில் )
    3. In my house ( என்னுடைய வீட்டில் )
  • மாதங்கள் மற்றும் கால நிலைகளை பற்றி பேசும் போது In பயன்படுகிறது. Examle: In January, In December, In April , In spring, In summer,In autumn, In winter
  • At என்பதை இடத்தைப் பற்றி குறிப்பிடவும், நேரத்தைப்பற்றி குறிப்பிடவும் பயன்படுத்தலாம்
    Example :

    1. at Nagercoil (நாகர்கோவிலில்)
    2. at 10'o clock ( 10 மணிக்கு/10 மணியளவில் )
    3. at night ( இரவில் )

அடிக்கடி பேச்சு வழக்கில் use ஆகும் prepositions கீழே Table ல் கொடுக்கப்பட்டுள்ளது. சிரமம் பார்க்காமல் படித்து பேசும் போது பயன்படுத்திக்கொள்ளவும்.
Prepositions
PrepositionMeaning
Atஇல்
Afterபிறகு
Aboutபற்றி
Alongவழியே/ஊடே
Amongமத்தியில்
Amongமத்தியில்
Amongமத்தியில்
Aroundசுற்றிலும்
Againstஎதிராக
Asபோல
Aboveமேலே
Byஆல்/மூலமாக
Beforeமுன்னால்
Belowஅடியில்
Besideபக்கத்தில்
Betweenஇடையில்
Beyondஅப்பால்
Beneathஅடியில்
Exceptதவிர
Inஇல்/உள்ளே
Insideஉட்பக்கத்தில்
Forக்கு/க்காக
Fromஇருந்து
Likeபோல
Ofஉடைய
Onமேலே
Toக்கு
Throughமூலமாக
Towardsநேராக/சார்பாக
Uponமேலே
Underகீழே
Nearஅருகில்
Duringபொழுது
Withஉடன்/ஓடு
Withoutஇல்லாமல்
Withinஉள்/உள்ளே
Prepositions of place
சில prepositions இடத்துடன் தொடர்புடைய செயல்களை குறிப்பிட பயன்படுகிறது. under, underneath, over, inside, beside, in , in front of, on top of, in the middle of போன்றவை இடத்தை பற்றி குறிப்பிட பயன்படுகிறது
Example:
  1. Nivi was sitting under a tree ( Nivi மரத்தின் அடியில் உட்கார்ந்து இருந்தாள்)
  2. There's a woodenfloor underneath the carpet (Carpetக்கு அடியில் மரத்திலான தரை உள்ளது)
  3. Some birds flew over their houses
  4. John and smith were hiding inside the wardrobe.
  5. There was a tree beside the river
  6. I have a friend who lives in Chennai.
  7. A big truck parked in front of their car
  8. The cat jumped on top of the cupboard