Thursday, 26 June 2014

TNPSC Group 2 Notes | தகவல் களஞ்சியம் | பொது அறிவு தகவல்கள் | சமிபத்திய செய்திகள் | நடப்பு நிகழ்வுகள்

TNPSC Group 2 exam notes in tamil



சில முக்கிய உலக விருதுகள்

நோபல் விருது:
------------------
உலகின்மிக உயர்ந்த விருது. 1901 ஆம்ஆண்டு முதல் சமாதானம் உட்படஆறு துறைகளில் வழங்கப்படுகிறது. ஆண்டு தோறும் டிசம்பர்10 ஆம் தேதி வழங்கப்படும்.

ரைட் லைவ்லி ஹுட் விருது:
-----------------------------------
மாற்றுநோபல் பரிசாக போற்றப்படுகிறது. சுற்றுப்புறச்சூழல் ஆய்வுக்கும், பாதுகாப்புக்கும் பாடுபடும் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுவது. பரிசு ஒரு இலட்சம்டாலர்.

காந்திஅமைதிப் பரிசு:
---------------------------
காந்தியவழியில் வன்முறை இன்றி போராடிவெற்றி பெறும் சமாதானக் காவலர்களுக்குஇந்திய அரசு வழங்கும் சர்வதேசஅமைதி விருது. காந்திஜியின் 125 ஆவதுபிறந்த நாளான 1995 இல் நிறுவப்பட்ட விருது. பரிசுத் தொகை ரூ. ஒருகோடி.

இந்திராகாந்தி அமைதி மற்றும் வளர்ச்சிவிருது:
-------------------------------------------------------------
இந்தியஅரசு வழங்கும் சர்வதேச சமாதான விருது.

சர்வதேசபுரிதிறனுக்கான ஜவஹர்லால் நேரு விருது:
------------------------------------------------------------------
இந்தியன்கவுன்சில் ஃபார் கல்சுரல் ரிலேஷன்ஸ்வழங்கும் விருது இது. சர்வதேசஅளவில் அனைத்து நாடுகளையும் நல்லவிதத்தில் புரிந்து கொண்டு சமாதானப் பணியில்ஈடுபடும் மனிதர்களுக்கு வழங்கப்படுகிறது. பரிசு ரூ. 15 இலட்சம்.

.நா. சுற்றுச்சூழல் விருது:
--------------------------------
சர்வதேசஅளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பாடுபடும் மனிதர்களுக்கு .நா. சுற்றுச்சூழல்அமைப்பு வழங்கும் விருது. பரிசு இரண்டுஇலட்சம் டாலர்.

உல்ஃப்பரிசு (Wolf Prize): இசைப் பணிக்கான சர்வதேசவிருது.
--------------------------------------------------------------------------------
உலக உணவு விருது: உலகமக்களுக்கு தரமான உணவு வகைகளைக்கண்டுபிடித்துத் தரும் மனிதர்களுக்கு பிலிப்பைன்ஸைச்சேர்ந்த சர்வதேச அரிசி ஆராய்ச்சிநிறுவனம் வழங்கும் விருது. பரிசு இரண்டுஇலட்சம் டாலர்.

காமன்வெல்த்பிராந்திய எழுத்தாளர் விருது:
-------------------------------------------------------
காமன்வெல்த்பகுதிகளைச் சேர்ந்த சிறந்த எழுத்தாளர்களுக்குவழங்கப்படும் விருது. பரிசு 1000 டாலர்.

ஒலிம்பிக்ஆர்டர் விருது:
------------------------------
ஒலிம்பிக்விளையாட்டு வளர்ச்சிக்கு தனிச் சிறப்புடன் பாடுபடுபவர்களுக்குஒலிம்பிக் கமிட்டி வழங்கும் விருது. இந்த விருதைப் பெற்ற ஒரே இந்தியர்முன்னாள் இந்திய ஒலிம்பிக் கமிட்டிதலைவர் பா. சிவந்தி ஆதித்தன்.

புலிட்சர்விருது:
--------------------
சர்வதேசஅளவில் பத்திரிகைத்துறையில் சிறந்த ரிப்போர்ட், புகைப்படம்போன்றவற்றுக்கு வழங்கப்படும் அமெரிக்க விருது.

ஒலாப் பால்மே பரிசு:
--------------------------
பொது நலச் சேவையில் ஈடுபடும்மனிதர்களுக்கு வழங்கப்படும் விருது. பரிசு 16 ஆயிரம்டாலர்.

டெம்பிள்டன்பரிசு:
----------------------
சமயம் மற்றும் ஆன்மீகம் மூலம்சர்வதேச ஒற்றுமைக்குப் பாடுபடுபவர்களுக்கு வழங்கப்படுவது. பரிசு 1.2 மில்லியன் டாலர்.

யூதாண்ட்விருது:
---------------------
நாடுகளுக்கிடையேநேச உறவுகளை வளர்க்கும் சிறந்தமனிதர்களுக்கு வழங்கப்படும் விருது. .நா. பொதுச் செயலாளராக பணியாற்றிய யூதாண்ட் நினைவாக வழங்கப்படுகிறது.

ஜெஸ்ஸிஒவன்ஸ் விருது:
---------------------------------
சிறந்தவிளையாட்டு வீரர்களுக்கான சர்வதேச விருது.
கலிங்காவிருது: விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்களின் தனிப்பட்ட சேவைக்கு யுனெஸ்கோ வழங்கும் விருது. பரிசு 1000 பவுண்ட்.

மக்சாஸேவிருது:
---------------------
ஆசியாவின்நோபல் என சிறப்பிக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் முன்னாள்அதிபர் ரமோன் மக்சாஸேயின் நினைவாகவழங்கப்படுகிறது. சிறந்த குறிக்கோளுக்காக நேர்மையுடன்போராடிப் பாடுபடுபவர்களைத் தேர்ந்தெடுத்து கௌரவிப்பது இந்த விருதின் நோக்கமாகும். பரிசு 30,000 டாலர்.

மகாத்மாகாந்தி உலக அமைதி விருது:
------------------------------------------------
சமாதானவழியில் பாடுபடுபவர்களுக்கு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள காந்தி பவுண்டேஷன்வழங்கும் விருது. பரிசு ஒருஇலட்சம் டாலர்.

புக்கர்பரிசு:
-------------
சிறந்தஇலக்கியத்திற்காக, பிரிட்டன் வழங்கும் பரிசு. 1997 இல் அருந்ததிராய் எனும்இந்தியப் பெண் எழுத்தாளர் இவ்விருதைப்பெற்றார்.

Friday, 6 June 2014

தமிழ் - கேள்வி - பதில்கள் | TNPSC VAO Questions | TNPSC Group IV Questions



@ மாறுதலுக்குண்டான ஆணை எண் மற்றும் யாரால் வழங்கப்பட்டது என்பதற்கான அத்தாட்சிக் கையொப்பமிடுபவர் யார் ?
வட்டாட்சியர் அல்லது கீழ் நிலையிலுள்ள வருவாய்

@ கிராமங்களின் நில அளவை எதுவாரியாக அமையும் ?
பகுதி (வார்டு) வாரியாக அமையும்

@ தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டம் எந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்டது ?
1963

@ எப்பொழுது யு பதிவேடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேட்டுடன் சரிபார்க்கப்படும் ?
ஜமாபந்தியின் போது

@ தமிழ்நாடு ஜமீன் ஒழிப்பு மற்றும் ரயத்து வாரி மாற்றச் சட்டம் கொண்டு வரப்பட்டது ?
1948

@ தமிழ்நாடு இந்து சமய அறக்கட்டளைச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது ?
1951

@ நிபந்தனைக்குட்பட்ட நில ஒப்படைகள் மற்றும் நீண்ட கால நிலக் குத்தகைகள் பதிவேட்டில் எத்தனை பிரிவுகள் உள்ளன ?
8

@ ஊழுறுடுநுளு பதிவேட்டின் முதல் பகுதி எதனைப்பற்றியது ?
அட்டவணையில் கண்ட இனத்தினருக்கு வழங்கப்பட்ட சிறப்பு
நிபந்தனைக்குரிய ஒப்படைகள்

@ இராணுவத்தினருக்கும் முன்னாள் இராணுவத்தினருக்கும் அளிக்கப்பட்ட ஒப்படைகள் எப்பகுதியில் உள்ளன ?
பிரிவு – 2

@ வருவாய் நில ஆணை எண் 15 – 22 (3) எதைக் கூறுகிறது ?
நீர்ப்பாசனத் திட்டங்களால் பாதிக்கப்படும் நில ஒப்படைகள்

@ சிறப்பு வீட்டுமனை விதிகளின் கீழ் உள்ள கொடைகளைக் குறிக்கும் பகுதி எது ?
பிரிவு – 4

@ வருவாய் நிலை ஆணை எண் 19 பத்தி 1 இல் கொடுக்கப்பட்ட நீண்டகாலக் குத்தகை பற்றி எந்தப் பிரிவு கூறுகிறது ?
பிரிவு – 5

@ அரசானை எண் 3102 எந்த ஆண்டு வெளிவந்தது ?
23.12.1947

@ அரசு ஆணை எண் 3102 எதைப்பற்றியது ?
அரசியல் தியாகிகளுக்கு செய்யப்பட்ட ஒப்படைக்குரியது

@ வட்டப்பதிவேடு எண் 13 எது பற்றியது ?
ஒத்த முன்னேறிவரும் நீண்டகால நிலக் குத்தகை நிலங்கள்

@ ஒவ்வொரு பிரிவின் கீழும் எதை இணைக்க வேண்டும் ?
அச்சிட்ட மாதிரி படிவத்தினை ஒவ்வொரு பிரிவின் துவக்கத்திலும் இணைக்க வேண்டும்

@ ஒப்படை நிலங்கள் அல்லது வீட்டு மனைகளைப் பிற இனத்தினருக்கு என்ன செய்யக் கூடாது ?
பாராதீனம்

@ உரிமை மாற்றம் பதிவேடு எதைப்பற்றியது ?
தீர்வை செலுத்துவதினின்றும் விலக்களிக்கப்பட்ட நிலங்கள் குறித்த நிலைப் பதிவேடு

@ நீண்டகாலக் குத்தகைகள் எதில் பதிவு செய்யப்படும் ?
உரிமை மாற்றம் பதிவேடு

@ வருவாய் நிலை எண் 24 இன் கீழ் அளிக்கப்பட்ட நிலக் கொடைகள் எந்தப் பிரிவில் உள்ளது ?
பிரிவு 3

@ குறுகிய காலக் குத்தகை என்றால் என்ன ?
5 அல்லது அதற்குக் குறைவான வருடக் குத்தகை

@ எத்தனை வருடத்திற்கு மேற்பட்டது நீண்டகாலக் குத்தகை ?
5 வருடங்களுக்கு மேல்

@ எந்த நிலங்கள் நீண்ட காலக் குத்தகைகளாகப் பெறப்பட்டு நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளன ?
நகராட்சி மற்றும் அதற்குச் சுற்றியுள்ள நிலங்கள்

@ நகராட்சி நிலங்களை குத்தகை நிபந்தனைகளை மீறி அனுபவிப்பவர்கள் மீது எதன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் ?
நில ஆக்கிரமிப்புச் சட்டத்தின் கீழ்

@ குத்தகைத் தொகை செலுத்தாமல் அரசை ஏமாற்றுபவர்களை அப்புறப்படுத்த யார் நடவடிக்கை எடுக்க வேண்டும் ?
கிராம நிர்வாக அலுவலர்

@ 1948 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒஒஎ1 ஆவது சட்டத்தின் பிரிவு எது
கொடையாளிகளுக்கு அளிக்கப்பட்ட நிலங்களின் கிராமப் பதிவேடு பற்றிக் குறிப்பிடுகிறது ?
பிரிவு 19

@ இப்பதிவேட்டில் எதனை அனுசரித்து விபரங்கள் பதிவு செய்யப்படும் ?
வட்டப்பதிவேடு 13 – யுயை அனுசரித்து எழுதுப்பட வேண்டும்

@ எதன் கீழ் பிறப்பித்த ஆணைகளை உள்ளபடி இப்பதிவேட்டில் எழுத வேண்டும் ?
பிரிவு 19 இன் கீழ் பிறப்பித்த ஆணைகளை

@ எந்த உத்தரவுகளை இந்தக் கணக்கில் பதிவு செய்ய வேண்டும் ?
நிலத்தின் அனுபோகத்தை அந்த நபர் தொடர்ந்து வைத்து
இருக்க அனுமதிக்கும் உத்தரவுகளை

@ கிராமக் கணக்கு எண் 1 எதுப்பற்றிய கணக்கு ?
கிராமத்தின் மாதவாரி சாகுபடி கணக்கு

@ கிராமக் கணக்கு எண் 2 இல் எதை எழுத வேண்டும் ?
அடங்களில் பதியப்பட்ட சாகுபடி விபரங்கள்

@ இதை எந்தக் கணக்குடன் சேர்க்க வேண்டும் ?
மறுவருடம் சூன்மாதக் கணக்குடன்

@ இந்தக் கணக்கு எந்த மாதம் முதல் எந்த மாதம் முடிய பராமரிக்க வேண்டும் ?
ஏப்ரல் மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை

@ இந்தக் கணக்கை கிராம நிர்வாக அலுவலர் எந்தத் நாளுக்கு முன் குறிக்க வேண்டும் ?
25 ஆம் நாளுக்கு முன்

@ கிராமக் கணக்கு 1 – யு மற்றும் 20 ஆகிய கணக்குகளுடன் யாருக்கு
அனுப்பவேண்டும் ?
வருவாய் ஆய்வாளர்

@ இதனை வருவாய் ஆய்வாளர் எதில் பதிவு செய்வார் ?
குறுவட்டம் அளவில் பராமரிக்கப்படும் பதிவேட்டில்

@ வருவாய் ஆய்வாளர் சரிபார்த்த பின் அவற்றை யாருக்கு அனுப்புவார் ?
கிராம நிர்வாக அலுவலருக்கு

@ கிராமக் கணக்கு 1 – எதுபற்றிய சுருக்கமான விவரப் பட்டியலாகும் ?
சாகுபடி செய்யப்பட்ட வௌவேறு பயிர்களின் பரப்பையும் மகசூல் மதிப்பையும் பற்றிய விபரம்

@ இந்தக் கணக்கின் மொத்தங்கள் எதனுடன் ஒத்திருக்க வேண்டும் ?
கிராமக்கணக்கு 1 இன் மொத்தங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒத்திருக்க வேண்டும்.