Showing posts with label TNPSC GROUP 2 NOtes. Show all posts
Showing posts with label TNPSC GROUP 2 NOtes. Show all posts

Thursday, 26 June 2014

TNPSC Group 2 Notes | தகவல் களஞ்சியம் | பொது அறிவு தகவல்கள் | சமிபத்திய செய்திகள் | நடப்பு நிகழ்வுகள்

TNPSC Group 2 exam notes in tamil



சில முக்கிய உலக விருதுகள்

நோபல் விருது:
------------------
உலகின்மிக உயர்ந்த விருது. 1901 ஆம்ஆண்டு முதல் சமாதானம் உட்படஆறு துறைகளில் வழங்கப்படுகிறது. ஆண்டு தோறும் டிசம்பர்10 ஆம் தேதி வழங்கப்படும்.

ரைட் லைவ்லி ஹுட் விருது:
-----------------------------------
மாற்றுநோபல் பரிசாக போற்றப்படுகிறது. சுற்றுப்புறச்சூழல் ஆய்வுக்கும், பாதுகாப்புக்கும் பாடுபடும் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுவது. பரிசு ஒரு இலட்சம்டாலர்.

காந்திஅமைதிப் பரிசு:
---------------------------
காந்தியவழியில் வன்முறை இன்றி போராடிவெற்றி பெறும் சமாதானக் காவலர்களுக்குஇந்திய அரசு வழங்கும் சர்வதேசஅமைதி விருது. காந்திஜியின் 125 ஆவதுபிறந்த நாளான 1995 இல் நிறுவப்பட்ட விருது. பரிசுத் தொகை ரூ. ஒருகோடி.

இந்திராகாந்தி அமைதி மற்றும் வளர்ச்சிவிருது:
-------------------------------------------------------------
இந்தியஅரசு வழங்கும் சர்வதேச சமாதான விருது.

சர்வதேசபுரிதிறனுக்கான ஜவஹர்லால் நேரு விருது:
------------------------------------------------------------------
இந்தியன்கவுன்சில் ஃபார் கல்சுரல் ரிலேஷன்ஸ்வழங்கும் விருது இது. சர்வதேசஅளவில் அனைத்து நாடுகளையும் நல்லவிதத்தில் புரிந்து கொண்டு சமாதானப் பணியில்ஈடுபடும் மனிதர்களுக்கு வழங்கப்படுகிறது. பரிசு ரூ. 15 இலட்சம்.

ஐ.நா. சுற்றுச்சூழல் விருது:
--------------------------------
சர்வதேசஅளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பாடுபடும் மனிதர்களுக்கு ஐ.நா. சுற்றுச்சூழல்அமைப்பு வழங்கும் விருது. பரிசு இரண்டுஇலட்சம் டாலர்.

உல்ஃப்பரிசு (Wolf Prize): இசைப் பணிக்கான சர்வதேசவிருது.
--------------------------------------------------------------------------------
உலக உணவு விருது: உலகமக்களுக்கு தரமான உணவு வகைகளைக்கண்டுபிடித்துத் தரும் மனிதர்களுக்கு பிலிப்பைன்ஸைச்சேர்ந்த சர்வதேச அரிசி ஆராய்ச்சிநிறுவனம் வழங்கும் விருது. பரிசு இரண்டுஇலட்சம் டாலர்.

காமன்வெல்த்பிராந்திய எழுத்தாளர் விருது:
-------------------------------------------------------
காமன்வெல்த்பகுதிகளைச் சேர்ந்த சிறந்த எழுத்தாளர்களுக்குவழங்கப்படும் விருது. பரிசு 1000 டாலர்.

ஒலிம்பிக்ஆர்டர் விருது:
------------------------------
ஒலிம்பிக்விளையாட்டு வளர்ச்சிக்கு தனிச் சிறப்புடன் பாடுபடுபவர்களுக்குஒலிம்பிக் கமிட்டி வழங்கும் விருது. இந்த விருதைப் பெற்ற ஒரே இந்தியர்முன்னாள் இந்திய ஒலிம்பிக் கமிட்டிதலைவர் பா. சிவந்தி ஆதித்தன்.

புலிட்சர்விருது:
--------------------
சர்வதேசஅளவில் பத்திரிகைத்துறையில் சிறந்த ரிப்போர்ட், புகைப்படம்போன்றவற்றுக்கு வழங்கப்படும் அமெரிக்க விருது.

ஒலாப் பால்மே பரிசு:
--------------------------
பொது நலச் சேவையில் ஈடுபடும்மனிதர்களுக்கு வழங்கப்படும் விருது. பரிசு 16 ஆயிரம்டாலர்.

டெம்பிள்டன்பரிசு:
----------------------
சமயம் மற்றும் ஆன்மீகம் மூலம்சர்வதேச ஒற்றுமைக்குப் பாடுபடுபவர்களுக்கு வழங்கப்படுவது. பரிசு 1.2 மில்லியன் டாலர்.

யூதாண்ட்விருது:
---------------------
நாடுகளுக்கிடையேநேச உறவுகளை வளர்க்கும் சிறந்தமனிதர்களுக்கு வழங்கப்படும் விருது. ஐ.நா. பொதுச் செயலாளராக பணியாற்றிய யூதாண்ட் நினைவாக வழங்கப்படுகிறது.

ஜெஸ்ஸிஒவன்ஸ் விருது:
---------------------------------
சிறந்தவிளையாட்டு வீரர்களுக்கான சர்வதேச விருது.
கலிங்காவிருது: விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்களின் தனிப்பட்ட சேவைக்கு யுனெஸ்கோ வழங்கும் விருது. பரிசு 1000 பவுண்ட்.

மக்சாஸேவிருது:
---------------------
ஆசியாவின்நோபல் என சிறப்பிக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் முன்னாள்அதிபர் ரமோன் மக்சாஸேயின் நினைவாகவழங்கப்படுகிறது. சிறந்த குறிக்கோளுக்காக நேர்மையுடன்போராடிப் பாடுபடுபவர்களைத் தேர்ந்தெடுத்து கௌரவிப்பது இந்த விருதின் நோக்கமாகும். பரிசு 30,000 டாலர்.

மகாத்மாகாந்தி உலக அமைதி விருது:
------------------------------------------------
சமாதானவழியில் பாடுபடுபவர்களுக்கு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள காந்தி பவுண்டேஷன்வழங்கும் விருது. பரிசு ஒருஇலட்சம் டாலர்.

புக்கர்பரிசு:
-------------
சிறந்தஇலக்கியத்திற்காக, பிரிட்டன் வழங்கும் பரிசு. 1997 இல் அருந்ததிராய் எனும்இந்தியப் பெண் எழுத்தாளர் இவ்விருதைப்பெற்றார்.

Sunday, 27 April 2014

TNPSC Group IV - இலக்கணத்தின் வகைகள்



இலக்கணம் என்றால் என்ன என்பதைப் பற்றி பார்த்துவிடுவோம்..

இலக்கணம் என்பது ஒரு மொழியை தவறில்லாமல் கற்கப் பயன்படும் ஒரு விதிமுறையாகும். இந்த விதிக்குக் கட்டுப்பட்டுதான் அம்மொழி இயங்கும். அதுதான் இலக்கணம்.

தமிழ் இலகணத்தில் ஐந்து வகைகள் உள்ளன.

அவை நாம் சிறுவயதில் படித்ததுதான். என்றாலும் மீண்டும் ஒருமுறை நினைவுப்படுத்த இங்கு தருகிறேன்.

1. எழுத்திலக்கணம் 2. சொல்லிலக்கணம் 3. பொருளிலக்கணம் 4. யாப்பிலக்கணம், 5. அணியிலக்கணம்

Wednesday, 5 March 2014

உளவியல் வினாக்கள்

ரூபாய்    :    இந்தியா
யேன்        :    ?  

1.    துருக்கி
2.    பங்களாதேஷ்
3.    பாகிஸ்தான்
4.    ஜப்பான்
------------------------------------------------------------------------
நாப்தலீன்    :    நிலக்கரித்தார்
சாயங்கள்     :    ?

1.    பெட்ரோலியம்
2.    எண்ணெய்  
3.    வேதிப்பொருட்கள
4.    கார்பன்
------------------------------------------------------------------------
வங்கி            :    பணம்          
போக்குவரத்து     :    ?  

1.    பொருட்கள்
2.    சாலைகள்
3.    நெரிசல்
4.    வேகம்
------------------------------------------------------------------------
நாட்காட்டி    :    நாட்கள்          
அகராதி    :    ?

1.    வார்த்தைகள்
2.    புத்தகம்
3.    மொழி
4.    எழுத்து
------------------------------------------------------------------------
தாஜ்மஹால்         :    காதல்
ஜாலியன் வாலாபாக்     :    ?

1.    அமிர்தசரஸ்
2.    மெக்சிக்கோ
3.    போர்
4.    பஞ்சாப்
------------------------------------------------------------------------
மின்மாற்றி         :    வானொலி
தொலைக்காட்சி     :    ?

1.    பொழுதுபோக்கு
2.    திரைப்படம்
3.    வீடியோ
4.    ஒலிப்பேழை
------------------------------------------------------------------------
ஹாங்காங்         :    சைனா
வாடிகள்         :    ?

1.    கனடா
2.    மெக்சிகோ
3.    வட அமெரிக்கா
4.    ரோம்
------------------------------------------------------------------------
ஜீல்         :     ஆற்றல்
பாஸ்கல்     :    ?

1.    கன அளவு
2.    அழுத்தம்
3.    அடர்த்தி
4.    தூய்மை
------------------------------------------------------------------------
எழுது கோல்    :    கரும்பலகை  

1.    தட்டச்சு         :    வர்ணம்
2.    மேஜை        :    நாற்காலி
3.    எழுதுமை        :    காகிதம்    
4.    கதவு            :    தாழ்பாழ்
------------------------------------------------------------------------
எடை            :    கிலோகிராம்      

1.    நிமிடம்        :    மணி
2.    தொலைவு        :    கிலோமீட்டர்
3.    காலம்        :    நாட்கள்
4.    நாட்கள்        :    வருடம்

------------------------------------------------------------------------
சாக்கலேட்        :    சர்க்கரை

1.    முட்டை        :    மஞ்சள் கரு
2.    சாலை        :    விபத்து
3.    கட்டிடம்        :    சிமெண்ட்
4.    பால்            :    சர்க்கரை
------------------------------------------------------------------------
3    :    11
7    :    ?

1.    22
2.    29
3.    18  
4.    511
------------------------------------------------------------------------
பிங்க்        :    சிகப்பு
வெள்ளை    :    ?

1.    ஆரஞ்ச்    :    மஞ்சள்    :    கருப்பு
2.    பச்சை    :    ஊதா        :    மஞ்சள்
3.    மஞ்சள்    :    சிகப்பு        :    பச்சை
4.    பிரவுன்    :    கருப்பு    :    ஊதா

Monday, 24 February 2014

அசோகர் (கி.மு. 300-கி.மு.232) | history of ashoka in tamil

இந்திய வரலாற்றில் மிகப்பெரும்புகழ்வாய்ந்த அரசராகவிளங்கியவர் அசோகர். இவர்மௌரியமன்னர்மரபில்மூன்றாவது அரசர். மௌரியப் பேரரசைநிறுவிய சந்திரகுப்த மௌரியரின் பேரன். சந்திரகுப்தர் இந்தியஇராணுவத் தலைவராக விளங்கினார். அவாமகாஅலெக்சாந்தரின் இந்தியப் படைஎடுப்பிற்குப் பிறகு, வடஇநதியாவின் பெரும்பகுதியை வென்றுஅதன்மூலம்இந்தியவரலாற்றிலேயே ஒருபெரும்பேரரசைமுதன்முதலில் நிறுவினார்.
அசோகர் பிறந்தஆண்டுதெரியவில்லை. பெரும்பாலும் கி.மு.300 ஆண்டு வாக்கில் அவர்பிறந்திருக்கலாம். கி.மு.273 ஆம் ஆண்டில் அசோகர்அரியணைஏறினார். முதலில் தன்பாட்டனாரின் அடியொற்றி தம்ஆட்சிஎல்லைகளை இராணுவநடவடிக்கை மூலம்விரிவுபடுத்த விழைந்தார். அவரதுஆட்சியின் எட்டாம் ஆண்டில் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்திருந்த கலிங்கநாட்டின் (இன்றையஒரிசாமாநிலம்) மீதுபோர்தொடுத்து வெற்றிகண்டார். ஆனால்தமதுவெற்றியின் பின்னணியில் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எண்ணித் தாங்கொணாணுத் துயருற்றார். கலிங்கப் போரில்ஒருஇலட்சம் பேர்இறந்தனர். அதற்கும் அதிகமானோர் காயமுற்றனர். இதனால், அதிர்ச்சியும் கடுங்கழுவிரக்கமும் கொண்டஅசோகர்இந்தியா முழுவதையும் வெற்றிகொள்ளவேண்டும் என்றதம்எண்ணத்தைக் கைவிட்டார். மாறாக, எல்லாவகைஆக்கிரமிப்பிப் போர்களையும் அறவேஒழித்துவிட உறுதிபூண்டார். அவர்புத்தசமயத்தைத் தமதுசமயக்கொள்கையாக ஏற்றுக் கொண்டார். வாய்மை. கருணை. அகிம்சை ஆகியஅறநெறிகளைத் தம்வாழ்வில் கடைப்பிடிக்க முயன்றார்.
அசோகர் தம்சொந்தவாழ்க்கையில் வேட்டையாடுவதைக் கைவிட்டார். புலால்உண்ணாமையைப் பின்பற்றினார். பல்வேறு மனிதாபிமான அரசியல் கொள்கைகளை அவர்செயற்படுத்தியது மிகமுக்கியமானதாகும். அவர்மருத்துவமனைகளையும், விலங்குகளுக்குப் புகலிடங்களையும் நிறுவினார்; கொடுமையான சட்டங்களைச் சீ‘படுத்தினார்; சாலைகளை அமைத்தார்; நீ‘ப்பாசன வசதிகளைப் பெருக்கினார்; மக்களிடையே பக்தியுணர்வை வளர்க்கவும், நட்புறவை ஊக்குவிக்கவும், "தருமாதிகாரிகள்" என்ற சிறப்பு அரசுஅலுவலர்களை நியமித்தார். அவரதுஆட்சியில் எல்லாச் சமயங்களும் மதிக்கப்பட்டன. ஆனால்அசோகர்குறிப்பாகப் புத்தசமயத்துக்கு ஊக்கமளித்தார். அதனால்புத்தசமயம்மக்ளிடைய அதிகமாகச் செல்வாக்கு பெற்றது. புத்தசமயப்பிரச்சாரகர்களைப் பலஅயல்நாடுகளுக்கு அனுப்பினார். அவற்றுள் முக்கியமாக இலங்கைசென்றகுழுபெருமளவில் வெற்றிகரமாகப் பணிபுரிந்தது.
அசோகர் தமதுநீண்டஆட்சிக் காலத்தின்போது, தமதுவாழ்க்கை நிகழ்ச்சிகளையும், கொள்கைகளையும பாறைகளிலும், தூபிகளிலும் பொறிக்கும்படி செய்தார். இந்தநினைவுச் சின்னங்களில் பலஇன்றும் நிலைத்திருக்கின்றன. இந்தச்சின்னங்கள் விரிவான நிலப்பபகுதிகளில் காணப்படுவதால் அவைஅசோகப்பேரரசின் ஆட்சிப் பரப்பின் அளவைஅறிவதற்கு ஆதாரங்களாக விளங்குகின்றன. இவற்றில் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்கள், அவரதுகொள்கைகளை அறிவதற்கு முக்கிய் அகச்சான்றுகளாகும். இந்தத்தூபிகள் அவர்காலத்திய சிறந்தகலைவேலைப்பாடுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகவும் விளங்குகின்றன.
அசோகரின் இறப்பிற்குப் பிறகு50 ஆண்டுகளுக்குள் மௌரியப் பேரரசுசிதறுற்றது. அதன்பின்புஅதுஎழுச்சி பெறவேஇல்லை. ஆனாலும், அசோகர்புத்தசமயத்திற்கு ஆதரவளித்ததன் மூலம்உலகத்தின் மீதுஅவர்பெற்றநீண்டகாலச்செல்வாக்கு மிகப்பெரியதாகும். அவர்ஆட்சிபீடம்ஏறியபோது புத்தச் சமய்ம்வடஇந்தியாவில் ஒருகுறுகிய வட்டாரத்திலேயே செல்வாக்குப் பெற்றிருந்தது. அவாஇறக்கும்போது இந்தியா முழுவதும் அதுபரவியிருந்ததோடு இந்தியாவின் அண்டைநாடுகளிலும் மிகவிரைவாகப் பரவிவந்தது. கௌதமபுத்தர் நீங்கலாக புத்தசமயம்ஓர்உலகப்பெரும்சமயமாகவளர்வதற்கு வேறெவரையும் விடமுக்கிய காரணமாக இருந்தவர் அசோகரேயாவார்.