Showing posts with label இனிமையான காலங்கள். Show all posts
Showing posts with label இனிமையான காலங்கள். Show all posts

Saturday, 14 July 2012

இனிமையான காலங்கள் ♥

முதல் சந்திப்பில்
கண்களில் தொடங்கி
பெயரை தெரிந்து கொள்ள
ஏங்கும் படபடத்த மனது..

நீ பார்க்காத நேரத்தில்
உன்னைப் பார்த்த என் கண்கள்
நீ யார் என்றே தெரியாமல்
உன் ஆட்டோகிராப்
வாங்கிய நிமிடங்கள்..

முதல் முதலில்
தொலைபேசியில்
ஹலோ கேட்டதும்
கண்டுபிடித்துவிட்டதால்
துடிதுடித்த இதயம்.


பேசி பழகி ஒருவரை
ஒருவர் புரிந்தும்
சேரமுடியாமல்
தவித்த நிலை..

வருடங்கள் கடந்தாலும்
இன்றும் எதோ சந்தர்ப்பத்தில்
உன்னை நினைவு படுத்தும்
சில இனிமையான நேரங்கள்..

உயிர் உள்ளவரை
உன் நினைவை தாங்கும்
சுகமான வலியும் இருக்கும்
என்னிடம் ...உன்னிலும்
இருந்தால் எங்கே இருந்தாலும்
நம்மை இணைக்கும் நம் காதல்..