Showing posts with label பொது அறிவு-பொது அறிவியல். Show all posts
Showing posts with label பொது அறிவு-பொது அறிவியல். Show all posts

Saturday, 29 March 2014

இலக்கண குறிப்பறிதல் - உவமைத் தொகை


உவமைத் தொகை:

மலர்விழி என்ற சொல் உவமைத் தொகைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

இதில் மலர்விழி என்பதன் முழுத்தொடர் மலரைப் போன்ற விழி என்பதே மலர்விழி என சுருங்கிற்று.

அதாவது மலரைப் போன்ற விழியை உடையவள் என்று குறிப்பிடலாம்.

இதில் "போன்ற" என்ற உவம உருபு மறைந்து வருவதால் இது உவமைத்தொகையாகிற்று.

மலர்விழி என்ற சொல்லில் மலர் என்பது உவமை. விழி என்பது உவமேயம்.

உவமைக்கும் உவமேயத்திற்கு இடையே போன்ற "போல", "போன்ற", "அன்ன" என்ற உவம உருபுகள் மறைந்து வருவது உவமைத்தொகையாகும்.

மேலும் உதாரணச் சொற்கள்:

தேன்மொழி - தேனைப் போன்ற மொழி உடையவள்...
மதிமுகம் - மதி போன்ற முகத்தைக் கொண்டவள்.
கனிவாய் - கனி போன்ற வாயை உடையவள்.

இதுபோன்ற வார்த்தைகள் உவமைத் தொகையைக் குறிக்கும்.

Wednesday, 12 February 2014

பொது அறிவு-பொது அறிவியல் (இயற்பியல் வேதியியல் தாவரவியல் விலங்கியல்)

# வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை நடுநிலையாக்கல் செய்து அஜீரணக் கோளாறுகளை நீக்குவது - சோடியம் பை கார்பனேட்

# கேக், பிரெட் போன்ற ரொட்டிகள் தயாரிக்கும்பொழுது அவற்றை உப்பச் செய்து மிருதுவாக்கும் வாயு - கார்பன் டை ஆக்சைடு

# அனைத்து தனிமங்களும் மேலும் பிளக்க முடியாத அணுக்கள் என்று அழைக்கப்படும் சிறு துகள்களால் ஆனது என்று குறிப்பிட்டவர் - ஜான் டால்டன்

# இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்தில் இணைந்து உருவான பொருள் சேர்மம் எனப்படும்.

# சேர்மங்களுக்கு எடுத்துக்காட்டு - கார்பன் டை ஆக்சைடு, நீர், குளோரோஃபில்

# மண்ணின் வேதிப்பெயர் - சிலிக்கன் டை ஆக்சைடு

# நீற்றுச் சுண்ணாம்பு என்பது - கால்சியம் ஹைட்ராக்சையு

# கலப்பின உப்பிற்கு எடுத்துக்காட்டு - சலவைத்தூள்

# நிறமற்ற உப்புக்களுக்கு எடுத்துக்காட்டு - சோடியம் குளோரைடு, பொட்டாசியம் குளோரைடு

# ஃபெர்ரஸ் சல்பேட் உப்பின் நிறம் - இளம் பச்சை

# காப்பர் சல்பேட், பொட்டாசியம் டை குரோமைட் ஆகிய உப்புகளின் நிறம் - நீலம் மற்றும் ஆரஞ்சு, சிவப்பு நிறம்

# சுண்ணாம்புக்கல்லின் வேதிப்பெயர் - கால்சியம் கார்பனேட்

# பொட்டாசியம் நைட்ரேட்டின் பொதுப்பெயர் - நைட்டர்

# சோடியம் நைட்ரேட்டின் பொதுப்பெயர் - சிலி சால்ட் பீட்டர்

# ஹைப்போ என்பது - சோடியம் தயோ சல்பேட்

# மயில் துத்தம் என்பது - நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்

# பச்சைவிட்ரியால்(பச்சை துத்தம்) என்பது நீரேற்றப்பட்ட ஃபெர்ரஸ் சல்பேட்

# வெள்ளை விட்ரியாஸ் (வெண் துத்தம்) என்பது - நீரேற்றப்பட்ட ஜிங்க் சல்பேட்

# முகரும் உப்பு என்பது - அம்மோனியம் கார்பனேட்

# எப்சம் உப்பு என்பது - நீரேற்றப்பட்ட மெக்னீசியம் சல்பேட்

# பாரிஸ் சாந்து என்பதன் வேதிப்பெயர் - நீரேற்றப்பட்ட ஜிங்க் சல்பேட்

# ரொட்டி தயாரிக்கப் பயன்படும் பேக்கிங் பவுடர் தயாரிக்க பயன்படுவது - சோடியம் பை கார்பனேட்

# பேக்கிங் பவுடரில் கலந்துள்ள கலவை - சோடியம் பை கார்பனேட், டார்டாரிக் அமிலம்