Thursday, 20 March 2014

ஒரு பொருள் தரும் பல சொற்கள்

தமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்...

பொதுவாக சூரியனை "சூரியன்" என நாம் அழைத்தாலும், அதற்கு தமிழில் வேறுப்பட்ட சில பெயர்கள் இருக்கின்றன. ஞாயிறு என்றாலும் சூரியனைக் குறிக்கும், கதிரவன் என்றாலும் சூரியனைக் குறிக்கும், ஆதவன் என்றாலும் சூரியனைக் குறிக்கும். பகலோன் என்றாலும் சூரியனைக் குறிக்கும். பரிதி என்றாலும் சூரியனையே குறிக்கும் சொல்லாகும்.

இவ்வாறு ஒரு பொருளைக் குறிக்க பல்வேறு சொற்கள் தமிழில் உள்ளன. அவற்றை ஒரு சிலவற்றை இங்கு பார்ப்போம்.


கடல் - பரவை, முந்நீர்
கிளி - தத்தை, சுகம், கிள்ளை
குழந்தை - மகவு, குழவி, சேய்
சூரியன் - ஞாயிறு, கதிரவன், பகலோன், பரிதி
செய்யுள் - பா, கவிதை, யாப்பு
சொல் - பதம், மொழி, கிளவி
தவறு - மாசு, குற்றம், பிழை
நெருப்பு - தீ, அனல், கனல்
பெண் - நங்கை, வனிதை, மங்கை
வயல் - கழனி, பழனம், செய்

இதுபோன்று ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் தமிழில் வழக்கில் உள்ளது.

நன்றி நண்பர்களே..! தொடர்ந்து தளத்திற்கு வருகை வந்து தங்களின் ஆதவரை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment