TNPSC தேர்வுகளில் தமிழ் இலகணம் பாடப்பகுதியில் கேட்கப்படும் கேள்விகளுள் இதுவும் ஒன்று. இலக்கணக் குறிப்பறிதல் பகுதியிலிருந்து ஒன்றுக்கு மேற்ப்பட்ட கேள்விகள் கேட்க வாய்ப்பிருக்கிறது. இப்பதிவில் இலகணம் என்றால் என்ன? இலக்கண குறிப்பின் வகைகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்வோம்.
கொடுக்கப்பட்ட சொற்களுக்கு சரியான இலக்கணக் குறிப்பை அறிந்து விடை தர வேண்டும். ஒரு சில வார்த்தைகளுக்கு இரு விடைகளும் பொருத்தமானவை போல் தோன்றும். நன்கு சிந்தித்து கேள்வியைப் புரிந்துகொண்டால் அவற்றில் ஒன்றே சரியான விடையாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்புகளில் இலக்கணக் குறிப்புகளை நன்றாக பயன்றிருந்தாலே இதை எழுதிவிடலாம். எனினும் இலக்கண விதிகளை சரியாக புரிந்துகொள்ளாத பருவம் அது.. எனவே மீண்டும் இலக்கணத்தை படியுங்கள். இலக்கண விதிகளைப் படித்துப் பார்த்தால் தற்போது இலக்கணக் குறிப்பு அளிப்பது என்பது எளிதாகவே இருக்கும்.
பண்புத்தொகை:
சொற்களைப் பிரித்தால் நிலைமொழியில் "மை" விகுதி பெற்றுவரும் சொற்களனைத்தும் பண்புத்தொகை ஆகும்.
"தொன்னிறம்" இச்சொல்லைப் பிரிக்கும்போது "தொன்மை+நிறம்" எனப் பிரியும். இதில் நிலைமொழியில் "மை" விகுதி சேர்ந்து வந்திருப்பதால் இச்சொல்லிற்கான சரியான இலக்கணக்குறிப்பு பண்புத்தொகையாகும்.
உதாரணச் சொற்கள் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.
இன்னுயிர் - இனிமை + உயர் ==> பண்புத்தொகை
பைங்கூழ் - பசுமை + கூழ் ==> பண்புத்தொகை
செவ்வேள் - செம்மை + வேள் ==>பண்புத்தொகை
இவ்வாறு பண்புத் தொகையை எளிதாக அறிந்துகொள்ள முடியும்.
மேலும் பண்புத் தொகைக்குரிய சொற்கள் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.
1. செந்தமிழ் - செம்மை + தமிழ் ==>பண்புத்தொகை
2. நெடுந்தேர் - நெடுமை + தேர் ==> பண்புத்தொகை
3. மெல்லடி
4. கருவிழி
5. செங்கை
6. சீறடி
7. வெந்தழல்
8. பொற்காலம்
9. நற்செயல்
10. நவகவிதை
11. குறுநடை
12. நற்றூண்
13. பெருமகள்
14. பெரும்பெயர்
15. நெடும்படை
16. நெடுந்திரை
17. பேரானந்தம்
18. பேரொளி
19. நல்லருள்
20. நல்லுயிர்
21. மொய்புலி
22. வெங்கரி
23. தண்தார்
24. நற்றூண்

Useful information.
ReplyDeletetnpsc group 1 model question papers
Online Practice Test for TNPSC Group 1