Showing posts with label பொதுத் தமிழ். Show all posts
Showing posts with label பொதுத் தமிழ். Show all posts

Monday, 11 August 2014

தமிழில் வழங்கப்படும் பருவப்பெயர்களின் தொகுப்பு

ஆண்களின் பருவப்பெயர்கள் :

பாலன் -7 வயதிற்குக்கீழ்
மீளி -10 வயதிற்குக்கீழ்
மறவோன் -14 வயதிற்குக்கீழ்திறலோன் -14 வயதிற்கும்மேல்
காளை -18 வயதிற்குக்கீழ்
விடலை -30 வயதிற்குக்கீழ்
முதுமகன் -30 வயதிற்கும்மேல்
பெண்களின் பருவப்பெயர்கள் :

பேதை : 5-7 வயது
பெதும்பை : 07 - 11 வயது
மங்கை : 11 - 13 வயது
மடந்தை : 13 - 19 வயது
அரிவை : 19 - 25 வயது
தெரிவை : 25 - 31 வயது
பேரிளம்பெண் : 31 - 40 வயது


கொழுந்து - குழந்தைப்பருவம்
தளிர் - இளமைப்பருவம்
இலை - காதற்பருவம்
பழுப்பு - முதுமைப்பருவம்
சருகு - இறுதிப்பருவம்
மலர்களின் பருவநிலைத் தமிழ்ப்பெயர்கள்

அரும்பு - அரும்பும் (தோன்றும்) நிலை
நனை - அரும்பு வெளியில் நனையும் நிலை
முகை - நனை முத்தாகும் நிலை
மொக்குள் - "முகை மொக்குள் உள்ளது நாற்றம்" - திருக்குறள் (நாற்றத்தின் உள்ளடக்க நிலை)
முகிழ் - மணத்துடன் முகிழ்த்தல்
மொட்டு - கண்ணுக்குத் தெரியும் மொட்டு
போது - மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை
மலர் - மலரும் பூ
பூ - பூத்த மலர்
வீ - உதிரும் பூ
பொதும்பர் - பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை
பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் புதுப்பூக்கள்
செம்மல் - உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை

Tuesday, 3 June 2014

சமச்சீர் கல்வி - பத்தாம் வகுப்பு - தமிழ் - கேள்வி - பதில்கள்

அம்பேத்கர்க்கு இந்திய அரசு வழங்கிய விருது எது?
பாரத ரத்னா
அழுக்காறு என்பதன் பொருள் கூறுக:-
பொறாமை
அனைத்தையும் இழப்பினும் உண்மையை இழக்கிலேன் என்று கூறியவர் யார் அரிச்சந்திரன்
ஆசிரியப்பாவின் வகைகள் யாவை?
4
ஆர்தரின் இறுதி என்ற நூலை எழுதியவர் யார்
டென்னிசன்
இணையில்லை முப்பாலும் இந்நிலத்தே என்ற பாடலை பாடியவர் யார் பாரதிதாசன்
இந்திய நூலகத்தின் தந்தை யார்?
அரங்கநாதர்
இந்தியாவின் முதல் தேசிய நூலகம் எங்கு அமைந்துள்ளது?
கொல்கத்தா
இலக்கண குறிப்பு தருக:
செய்கொல்லன்
இறுவரை காணின் கிழக்காம் தலை
ஈகந்தான் என்பதன் பொருள் தருக
 தியாகம்
உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுக்கோல் என்று கூறியவர் யார்? வள்ளலார்
உரும் என்பதன் பொருள் யாது?
இடி
எட்டுதொகையின் முதல் மற்றும் இறுதி நூல் எது?
நற்றினை,புறநானூறு
என்றுமுள தென்தமிழ் என்று கூறியவர் யார்
கம்பர்
ஒரு பைசாத் தமிழின் என்ற இதழ் எந்த நாள் முதல் வெளியிட்டது?
19-06-1907
ஒரு மொழி ஒழிதன் இனங்கொளற் குறித்தே இந்த வரி இடம்பெற்றுள்ள நூல் எது நன்னூல்
ஒரு வினா தொடர் முற்றுதொடராகவும் நேர்க்கூற்று தொடராகவும் இறுப்பின் இறுதில் என்னக் குறிப்பட வேண்டும்?
வினாக்குறி(?)
ஒருவர் கூற்றை விளக்குவது, சிறு தலைப்பு, நூற்பகுதி எண் முதலிய விவரங்களைப் பட்டியல் முறையில் ஒன்றன் பின் ஒன்றாக தரும் போது என்ன குறி இட வேண்டும்?
முக்காற் புள்ளி(ஃ)
ஒலி மரபு:- கோழி கொக்கரிக்கும்
ஒலி மரபு→பூனை சீறும்
ஒழுக்கமுடையவர் என்னும் பொருள் தரும் சொல் எது?
உரவோர்
கருத்தாழமும் ஓசை இன்பமுமம் நம் உள்ளதை கொள்ளை கொள்ளும் நூல் எது?
நெய்தல் கலி
கலித்தொகையில் கடவுள் வாழ்த்ததையும் சேர்த்து எத்தனை பாடல்கள் உள்ளன?
150கலித்தொகையை தொகுத்தவர் யார்?
நல்லந்துவனார்
கவிகை என்பதன் பொருள் யாது?
குடை
கான்-காடு, உழுவை-புலி, மடங்கள்- சிங்கம், எண்கு- கரடி

குமரகுருபரின் நீதிநெறி விளக்கத்தின் 51 பாடல்களுக்கு உரை எழுதியவர் யார் பரிதிமாற்கலைஞர்,திராவிட சாஸ்திரி
குருவை வணங்கக் கூசி நிற்காதே என்று கூறியவர் யார்?
வள்ளலார்
குலசேகர ஆழ்வார் பாடல் எந்த தொகுப்பில் உள்ளது?
பெரிய திருமொழி
குறளை நிறப்புக:- பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்-வேந்தர்க்கு வேண்டும் பொழுது
கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழன் என்று கூறும் நூல் எது?
மணிவாசகம்
சட்டம் என்பதன் பொருள் கூறுக:-
செம்மை
சரஸ்வதி மகால் நூலகம் கன்னிமாரா நூலகம் கட்டப்பட்ட ஆண்டுகள் எது? 1824,1890
சரிந்த குடலைப் புத்த துறவியர் சரி செய்திய கூறும் நூல் எது?
மணிமேகலை
சாலை,இளந்திரையனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்பட்ட ஆண்டு எது?
1991
சின்மய தீபிகை நூலை புதுபித்தவர் யார்?
வள்ளலார்
சீறாப்புராணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு
3
செம்அமாழித் தகுதிப்பாடுகள் 11 என கூறியவர் யார்
மணவை முஸ்தப்பா
சென்னை மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினராக M.G.R தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு எது?
1963
ஞானபிரகாசம் திருக்குறளை தஞ்சையில் முதலில் புதுப்பித்த ஆண்டு எது? 1812
தமிழர் திருநாள் தைமுதல் நாளாம் - அமிழ்தென இனிக்கும் பொங்கள் திருநாள்-எனக் கூறியவர் யார?
முடியரசன்
தமிழர்கள் நிலத்தை எத்தனை வகையாக பிரித்தனர்?
5
தருமசேனர் அப்பர் வாகீசர் என அழைக்கப்பட்டவர் யார்
திருநாவுக்கரசர்
தன் நாட்டை கைப்பற்ற வந்த மாற்றரசனோடு போரிடுதல் எந்த திணை காஞ்சிதிணை
திருவாசகத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன  
658
தொண்டக பறை எந்த நிலத்துக்கு உரியது?
குறிஞ்சி
நடுவணரசு தமிழை செம்மொழியாக அறிவித்த ஆண்டு எது?
2004 oct 12
நந்தி கலம்பகம் இயற்றப்பட்ட நூற்றாண்டு எது?
9-ம் நூற்றாண்டு
நயனம் என்பதன் பொருள் கூறுக கண்கள்
நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் குலசேகரர் பாடிய பாடல் எது? திருவாய்மொழி
நிரைபு என்பதன் வாய்ப்பாடு யாது? பிறப்பு
நிற்க நேரமில்லை –நூல் ஆசிரியர் யார்?
சாலை இளந்திரையன்
நின்பன் என்பது என்ன இலக்கணம்?
6-ம் வேற்றுமைத் தொகை
நெய்தலுக்கு உரிய மரம் எது?
புன்னை,ஞாழல்
நேர் நிரை-ன் வாய்ப்பாடு யாது?
கூவிளம்
பகுபத உறுப்பிலக்கணம் கூறுக:- நிறைந்த நிறை+த்(ந்)+த்+அ
பகுபத உறுப்பிலக்கணம் தருக:- நடந்தது நட+த்(ந்) +த் +அ+து
பயவாக் களரனையர் கல்லாதவர் என்று கூறியவர் யார்
திருவள்ளுவர்
பின்வருநிலையணி எத்தனை வகைப்படும்?
3
புதுநெறிகண்ட புலவர் என்று பாரதியாரால் அழைக்கப்பட்டவர் யார்?வள்ளலார்
பூதரம் என்பதன் பொருள் கூறுக மலை
பெருமாள் திருமொழியில் எத்தனை பாசுரங்கள் உள்ளன? 105
மதுரை தமிழ்ச்சங்கம்(4-வது) யாருடைய தலைமையில் மற்றும் யார் மேற்பார்வையில் நடந்தது ?
பாஸ்கரசேதுபதி மற்றும் பண்டித்துரைத்தேவர்
முதுமொழிமாலை இயற்றப்பட்ட ஆண்டு எது?
17-ம் நூற்றாண்டு
முன்பணிக்காலம்- பெரும்பொழுது எது மார்கழி,தை
மூந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை என்று கூறும் நூல் எது?
தொல்காப்பியம்
மெய் தான் அரும்பி விதிர்விதிர்த்……..என்ற பாiலை இயற்றியவர் யார் மாணிக்கவாசகர்
மொழிகள் எத்தனை என்ன வகைப்படும்?
3
வணங்கி வழியொழுகி மாண்டார் சொல்…….எனத் தொடங்கும் நூல் எது? ஏலாதி
வாழும்  குடி-இலக்கணகுறிப்பு தருக:-
பெயர்ரெச்சம்
வாள் என்பதன் பொருள் தருக:-
ஒளி
விடை எத்தனை வகைப்படும்?
8
விருந்தோம்பல் என்று தமிழர் தம் உயர் பண்பை தெளிவாக கூறும் நூல் எது? நற்றினை
விழுப்பம் என்பதன் பொருள் யாது?
சிறப்பு
வினா எத்தனை வகைப்படும்?
6
வினை மரபு-சுவர் எழுப்பினான்
வினையே ஆடவர்க்குயிர் என்று கூறும் நூல் எது?
குறுந்தொகை
வைதருப்பம்,கௌடம் பாஞ்சலம் ஆகிய 4 எவ்வாறு அழைக்கப்படுகிறது? நெறிநாலு
Substantive laws என்பதன் தமிழ் ஆக்கம் தருக
உரிமை சட்டங்கள்

Sunday, 27 April 2014

TNPSC Group IV - இலக்கணத்தின் வகைகள்



இலக்கணம் என்றால் என்ன என்பதைப் பற்றி பார்த்துவிடுவோம்..

இலக்கணம் என்பது ஒரு மொழியை தவறில்லாமல் கற்கப் பயன்படும் ஒரு விதிமுறையாகும். இந்த விதிக்குக் கட்டுப்பட்டுதான் அம்மொழி இயங்கும். அதுதான் இலக்கணம்.

தமிழ் இலகணத்தில் ஐந்து வகைகள் உள்ளன.

அவை நாம் சிறுவயதில் படித்ததுதான். என்றாலும் மீண்டும் ஒருமுறை நினைவுப்படுத்த இங்கு தருகிறேன்.

1. எழுத்திலக்கணம் 2. சொல்லிலக்கணம் 3. பொருளிலக்கணம் 4. யாப்பிலக்கணம், 5. அணியிலக்கணம்

Thursday, 10 April 2014

உடுமலை நாராயணகவி - விவர குறிப்புகள்

சிறு குறிப்பு: 

பெயர் -  உடுமலை நாராயணகவி
இயற்பெயர் - நாராயணசாமி
சிறப்புப் பெயர் - கவிராயர்
பிறந்த இடம் - உடுமலைப் பேட்டை
பிறந்த வருடம்  - 1899
மறைந்த வருடம்  - 23.5.1981


விவர குறிப்புகள்: 

விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்; முத்துசாமிக்கவிராயரின் மாணவர்; ஆரம்பக் காலத்தில் நாடகங்களுக்கு பாடல் எழுதினார்.

இவருடைய பாட்டுகள் நாட்டுப்புற இயலின் எளிமையையும், தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன. 1933-ல் திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்தவர்.

நாராயணகவி என்று பெயர் சூட்டிக்கொண்டு கவிஞர் இனமென்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர்.

ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள நாராயணகவி இயல்பாகவே இனிமையான சுபாவம் கொண்டவர்.

நேர்மையும், சொல்திறமையும் மிக்கவர். எவ்வகையிலும் தலை வணங்காத உறுதி உடையவர்.

பிறருக்கு உதவுகின்ற மனம் படைத்தவர். திரையுலகில் தமக்கென ஒரு மதிப்பையும் புகழையும் வைத்திருந்தவர்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு `கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர்.

அண்ணாதுரை எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி போன்ற படங்களுக்கும் மு. கருணாநிதி கதை வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவர்.  

புகழ்பெற்ற கவிஞர் பாபநாசம் சிவனைவிட அதிகமாகப் பாடல்களை எழுதியவர் நாராயணகவியாவார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன் போன்றோர் இவருக்குப் பின்னர் வந்தவர்கள்.

.இந்திய அரசு உடுமலை நாராயணகவி நினைவை போற்றும் வகையில் 31.12.2008 இல் இந்திய அஞ்சல் துறை அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைத்துள்ளது.

இங்கு உடுமலை நாராயணகவியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பெருமைக்குரிய உடுமலை நாராயணகவி 23.5.1981 அன்று இயற்கை எய்தினார்.

Friday, 4 April 2014

நாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்

சிறு குறிப்பு:

இயற்பெயர்: இராமலிங்கம் பிள்ளை

பிறப்பு: அக்டோபர் 19 1888

ஊர்: மோகனூர் -நாமக்கல் மாவட்டம்

பெற்றோர்: அம்மணிம்மாள், வெங்கடராமன்

மறைவு: ஆகஸ்ட் 24, 1972



விவர குறிப்பு:


தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்தி பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர்.

முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்டபின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்.

 தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரைவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர்.

1932ல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர்.

‘அரசவைக் கவிஞர்’ பதவியும், `பத்ம பூஷண்’ பட்டமும் பெற்றவர்.

சாஹித்ய அகாடமியில் தமிழ் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தவர்.

‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இவரின் மலைக்கள்ளன் நாவல் எம் ஜி ஆர் நடித்து மலைக்கள்ளன் என்ற பெயரிலேயே திரைப்படமாக வந்தது.

முத்தமிழிலும், ஓவியக்கலையிலும் வல்லவர், சிறந்த விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.

உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றதால் சிறைத் தண்டனையும் அடைந்தார்.

    ’கத்தி யின்றி ரத்த மின்றி
    யுத்த மொன்று வருகுது
    சத்தி யத்தின் நித்தி யத்தை
    நம்பும் யாரும் சேருவீர்’

என்னும் பாடலை உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாகப் பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.

புகழ் பெற்ற மேற்கோள்கள்:

    'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது'
    தமிழன் என்றோர் இனமுன்று

    தனியே அதற்கோர் குணமுண்டு'

    'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா'
    'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்

    கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

படைப்புகளில் சில:



  1.     மலைக்கள்ளன் (நாவல்)
  2.     காணாமல் போன கல்யாணப் பெண் (நாவல்)
  3.     பிரார்த்தனை (கவிதை)
  4.     நாமக்கல் கவிஞர் பாடல்கள்
  5.     திருக்குறளும் பரிமேலழகரும்
  6.     திருவள்ளுவர் திடுக்கிடுவார்
  7.     திருக்குறள் புது உரை
  8.     கம்பனும் வால்மீகியும்
  9.     கம்பன் கவிதை இன்பக் குவியல்
  10.     என்கதை (சுயசரிதம்)
  11.     அவனும் அவளும் (கவிதை)
  12.     சங்கொலி (கவிதை)
  13.     மாமன் மகள் (நாடகம்)
  14.     அரவணை சுந்தரம் (நாடகம்)


கவிஞரின் நாட்டுப் பற்றைப் போற்றும் வகையில் மாநில அரசு அவரை அரசவைக் கவிஞராகவும், பின்னர் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்துச் சிறப்பித்தது.

மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருதளித்துப் போற்றியது.

தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த நாமக்கல்லிலுள்ள இல்லத்தை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம் ஆக்கியுள்ளது.

இதில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மேலும் சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலக பத்து மாடி கட்டிடத்திற்கு இவரது பெயர் சூட்டியுள்ளது.

தட்டாரத் தெரு என்று அழைக்கப்பட்டு வந்த இவர் வாழ்ந்த தெரு கவிஞர் இராமலிங்கம் தெரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Thursday, 3 April 2014

உரிச்சொல் - தமிழ் இலக்கணம்

உரிச்சொல் என்பதை உரி + சொல் எனப் பிரித்துப் பார்க்க வேண்டும். உரி என்பது உரிய (உரிமை) என்ற பொருளைத் தருவதாகும். உரிச்சொல் எதற்கு உரியது என்றால் செய்யுளுக்கு உரியதாகும். உரிச்சொற்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கில் வராத சொற்களாகும்.

உரிச்சொல் என்பதை பெயருக்கும் வினைக்கும் உரியசொல் என்றும் கூறுவார்கள். உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் அடையாக வருவதோடு அவற்றின் பண்பையும் விளக்கி நிற்பதால் (அவற்றிற்குரிய சொல்லாக இருப்பதால்) உரிச்சொல் .


உரிச்சொல்லின் பொது இலக்கணம்

உரிச்சொல்லின் பொது இலக்கணத்தை நன்னூலார்

பல்வகைப் பண்பும் பகர்பெயர் ஆகி
ஒரு குணம் பலகுணம் தழுவிப் பெயர் வினை
ஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல்

என்று (நூற்பா 442) குறிப்பிடுகின்றார்.

1. உரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தும் பெயர் ஆகும்.
2. ஒரு சொல் ஒரு பண்பை உணர்த்தலாம் அல்லது  ஒரு சொல் பல பண்புகளையும் உணர்த்தலாம்.
3. உரிச்சொல், பெயர்ச் சொற்களோடும் வினைச் சொற்களோடும் சேர்ந்து அவற்றின் பண்பை உணர்த்த வரும்.
4. உரிச்சொல் செய்யுளுக்கு உரிய சொல்லாக வரும்.

எடுத்துக்காட்டு:

நனி பேதை  

நனி எனும் உரிச்சொல் பேதை எனும் பெயர்ச்சொல்லோடு சேர்ந்து வந்தது.
நனி = மிகுதி,
பேதை = அறிவற்றவன்

சாலத் தின்றான்  

சால எனும் உரிச்சொல் தின்றான் எனும் வினைச்சொல்லோடு சேர்ந்து
வந்தது.

சால = மிகவும்

மல்லல் ஞாலம்    
 
மல்லல் எனும் உரிச்சொல் வளம் எனும் ஒரு பண்பை உணர்த்தும்

கடி மலர்    

கடி எனும் உரிச்சொல் முறையே மணம் மிக்க மலர்,

கடி நகர்  

நகர் காவல் மிக்க நகர் எனப் பல பண்புகளை உணர்த்துகிறது.

உரிச்சொல் உணர்த்தும் பண்புகள்


உரிச்சொல் உணர்த்தும் பண்புகள் இரண்டு ஆகும்.

அவை : 1.     குணப் பண்பு     2. தொழிற் பண்பு

உரிச்சொல் பல்வேறு பண்புகளை உணர்த்தும் என முன்பு பார்த்தோம்.
அவற்றுள் பொருளின் பண்புகளை உணர்த்துவது
குணப்பண்பு ஆகும்.

எடுத்துக்காட்டு:

மாதர் வாள் முகம்

இங்கு மாதர் எனும் உரிச்சொல் விருப்பம் எனும் குணத்தை
உணர்த்துகிறது.

(மாதர்= விரும்பத்தக்க, வாள் முகம் = ஒளிமிக்க முகம்)

இமிழ் கடல்

இங்கு இமிழ் எனும் உரிச்சொல் ஒலித்தல் எனும் தொழிற்பண்பை உணர்த்துகிறது.