அழுகை என்ன பால்?
தன் தீரா வலியை...
தீராக் கோபத்தை...
தீரா ஆசையை..
தீரா வருத்தங்களை...
அழுது தீர்த்து விடுகிறது..
குழந்தை.
காரியம் சாதிக்கும்
பெண்களும்...
எப்போதும்
கண்களில் கடலோடு
திரிகிறார்கள்.
ஆணாயிருப்பவன்..
அழக்கூடாது..
என்பது
எந்த விதிக்குள் வரும்
எனத் தெரியவில்லை.
ஆமாம்!
அழுகைக்கு
ஆண்பால் கிடையாதா?
கவிஞர்களே!
No comments:
Post a Comment