சுடரொளியாய் பூமியில் நீக்கமற
தன்னலமில்லா சேவையின் மணிமகுடமாய்
எளிமையின் எளிமையாய் பழகுவதில்
இனிமையாய் பேசுவதில் கனிமையாய்
அளவற்ற தொண்டூழியத்தில் முன்மாதிரி
யானஅருட் சகோதரி இரக்கத்தின் உறைவிட
மேலானஅன் பிற்குமறு பொருளேயுன்
முகத்தில் சுருக்கங்கள் வந்தாலும்
தள்ளாது பதறாது மனம் குன்றாது
முகம் சுனங்கா தாமரையின்
இதழ் விரிபுன்னகை யோடுநின்
அரவணைப்பில் உறங்கிய ஆயிரமாயிரம்
ஆதரவில்லா உயிர்களின் புனிதன்னையாய்
நோயின்பிடி உடலுருகி மனமிறுகி
மரணத்தின் மடியில்தலைச் சாயுல்லூரை
நல்லாள்நின் கைக்கொண்டுபுனித மாக்கியவர்
கரையேறத் தொழுத சாந்தக் குணவதியே
வறியாரை நீதேடி கண்டோடி உதவினன்காள்
என்சொல்லி தமிழ்தேடி புகழ்வேனம்மா
உன்யுகம்வாழ் பிறந்ததேயென் புண்ணியமே!
தன்னிகரற்ற சேவையின் மூலம் உலகிலுள்ள மனிதநேயம் தழைத்திட தேவைபடுவோர்க்கு உதவிகள் செய்து, மக்களின் மனங்களில் நீங்கா தியாக சுடரை, எளியோரை தேடி தொண்டூழியம் செய்த அன்னை தெரேசா அவர்களை புகழ்பாட வார்த்தைகள் எதுவுமில்லை...
அமைதி புன்னகையில் தொடங்குகிறது; ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது புன்னகைப்போம், அன்பு அதிலிருந்து தொடங்குகிறது... அன்னை தெரேசா
No comments:
Post a Comment