மழை
============================
துளிக்குள் காதலின்
பளிங்கு உலகம்.
நனைந்த சங்கமத்தில்
"நாலாயிரத்திவ்ய பிரபந்தம்"
காதலர்கள் மூடிக்கொண்டனர்
தண்ணீர் "லாவா"வுக்குள்.
காதலர்கள் நனைய
வானத்தின் "கிளிசரின்" கண்ணீர்.
இவர்களுக்கு ஊஞ்சல்..வானத்தின்
பஞ்சுமிட்டாய் இழையில்..
மழையின் முத்தத்தில்
முத்தத்தின் மழைகள்.
என் இதயம் அவளுக்கு குடை.
அவள் இதயமே எனக்கு மழை.
No comments:
Post a Comment