Saturday, 15 February 2014

அறிவியல் பொது அறிவு வினா விடை

# வைட்டமின் கே குறைவினால் உருவாகும் நோய் - இரத்தம் உறையாமை

# வைட்டமின் பி குறைவினால் உருவாகும் நோய் - பெரிபெரி

# வைட்டமின் பி6(பைரிடாக்சின்) குறைவினால் உருவாகும் நோய் - நரம்புத் தளர்ச்சி, அனிமியா

# வைட்டமின் சி குறைவினால் உருவாகும் நோய் - ஸகர்வி

# கேரட், பப்பாளி, மக்காச்சோளம் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் - வைட்டமின் ஏ

# முட்டைகோஸ், காலிஃபிளவர் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் - வைட்டமின் கே

# தீட்டப்படாத அரிசி, முழு தானியங்களில் காணப்படும் வைட்டமின் - வைட்டமின் பி1 (தையாமின்)

# தக்காளி, ஆரஞ்சு, ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் - வைட்டமின் சி

# தாவர விதைகளில் இருந்து வளரும் புறவாளரிகள் என்பது - மேற்பரப்பு நார்கள்

# தண்டு நார்களுக்கு உதாரணம் - சணல், மணிலா நார்

# இலை நார்களுக்கு உதாரணம் - கற்றாழை நார்

# மேற்பரப்பு நார்களுக்கு உதாரணம் - பருத்தி

# வெளிக்காற்று பட்டவுடன் எளிதில் ஆவியாகிவிடும் எண்ணெய் - சோயா எண்ணெய்

# இதய நோயாளிகளுக்கு எந்த எண்ணெய் மிகச்சிறந்தது - சூரிய காந்தி எண்ணெய்

# வனஸ்பதி தயாரிக்க உதவும் எண்ணெய் - நிலக்கடலை எண்ணெய்

# சிறந்த உயவு எண்ணெய் - ஆமணக்கு

# மலமிளக்கியாகவும், சோப்பு தயாரிக்கவும் பயன்படும் எண்ணெய் - ஆமணக்கு எண்ணெய்

No comments:

Post a Comment